இது நீரோடு செல்கின்ற ஓடம் -8

8 உன்னோடு வந்து விட.. உள்ளுக்குள்ளே மனம் துடிக்கும்.. "இன்னைக்குப் பொழுதைத் தாண்டறதுன்னா.. ?" மிருதுளாவுக்குப் புர...


8
உன்னோடு வந்து விட..
உள்ளுக்குள்ளே மனம் துடிக்கும்..


"இன்னைக்குப் பொழுதைத் தாண்டறதுன்னா..?"
மிருதுளாவுக்குப் புரியவில்லை... நடேசனும் சங்கீதாவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்...
"என்ன ஆச்சு..? எழுதிட்டாங்களா..?" சங்கீதா கேட்டாள்..
"தெரியலையே டீச்சர்.." நடேசன் மிருதுளாவை ஏற இறங்க பார்த்துவிட்டு..
"இனிமேத்தான் எழுதுவாங்க போல இருக்கு.." என்றான்..
"எதைப் பத்திச் சொல்கிறிங்க..?" மிருதுளாவுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது..
"ரெஸிக்னேசன் லெட்டரைப் பற்றித்தான்.." வெகு இலகுவாக பதில் சொன்னாள் சங்கீதா..
"ரெஸிக்னேசன் லெட்டரா..?"
மிருதுளாவுக்கு சிரிப்பதா.. இல்லை அழுவதா என்றே தெரியவில்லை.. வேலையில் சேர வந்த அன்றே இது போன்ற ஆசிர்வாதங்களை வாங்கிய ஆள் அவள் ஒருத்தியாகத்தான் இருப்பாள் என்று நொந்து போனாள்..
"நீங்களுமா சங்கீதா..?"
மிருதுளா அழமாட்டாமல் கேட்ட கேள்வியில் 'யு டூ' என்ற ஆதங்கம் ஒளிந்திருந்தது..
"ஓகே.. ஓகே.." சங்கீதா கைகளை உயர்த்தினாள்..
"டெர்ரரப் பாத்துட்டு வர்ற நியு ஜாயினிங் கேண்டிடேட் செய்கிற முதல் வேலை அதுவாத்தான் இருக்கும் மிருதுளா.. அனுபவம் பேசிருச்சு.. டோன்ட் மிஸ்டேக் மி.."
"நான் ரெஸிக்னேசன் லெட்டரையெல்லாம் கொடுக்கிறதா இல்லை.."
"இதைப் பாருடா.. இப்படியாப்பட்ட தைரியசாலியா நீங்க.. தெரியாமப் போச்சே.."
சங்கீதா மிருதுளாவுக்கு மீண்டும் ஓர்முறை கை கொடுத்தாள்.. அவர்கள் பேசியபடி ஆசிரியர்களின் ஓய்வு அறைக்குப் போனார்கள்.. அங்கேயிருந்த மற்ற ஆசிரிய.. ஆசிரியைகளிடம் மிருதுளாவை அறிமுகப் படுத்தி வைத்தாள் சங்கீதா.. பொதுவாக எல்லோருமே ஒரிரு வார்த்தைகளுடன் நிறுத்தி விட்டார்கள்.. சங்கீதா மட்டுமே கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தாள்.. வகுப்பு எடுக்க வேண்டிய நேரம் வந்ததும் மிருதுளா வகுப்பெடுக்கச் சென்றாள்.. அவளைக் கண்டதும் எழுந்து நின்ற மாணவ மாணவிகளைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தாள்..
"இரண்டு மாதங்களுக்கு முன்னால் வரை நானும் ஸ்டூடண்ட்தான்.. ஸோ.. என்னைக் கண்டு பயப்படாம.. விலகி நிற்காம.. இயல்பா இருங்க.. ஓகே..?"
சிரித்த முகத்துடன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.. மாணவ மாணவிகளின் பெயர்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.. பாடத்துக்குள் நுழையாமல் பொதுவாக அவள் பேசிக் கொண்டிருந்ததில் மாணவ.. மாணவிகளிடம் உற்சாகம் தெரிந்தது..
"இப்பச் சொல்லு.. ஷீலா.. உங்க குடும்பத்தைப் பத்தி யாராவது கேட்டா என்னன்னு சொல்லுவ..?"
இப்படியே சிலரிடம் கேட்டு விட்டு.. டேபிளின் மீது சாய்ந்து கை கட்டி நின்றாள்..
"இதுதான் குடும்பம்.. இதைத்தான் பாட்டனியிலயும் நாம செய்கிறோம்.. இந்தப் பிளான்ட் இந்த பேமிலி.. இதோட பிஸிகல் நேச்சர் இது.. இப்படின்னு எடுத்துச் சொல்கிறோம்.."
அவள் பாடத்துக்குள் நுழைந்து விட்டாள்.. அவள் கதை போல எடுத்துச் சொல்லிய விதத்தில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பாடத்தைக் கவனித்தார்கள்.. வகுப்பு முடிந்ததற்கு அறிகுறியாக மணியோசை கேட்டதும்.
"ஓகே.. இன்னைக்கு இது போதும்.. நாளைக்கு மீதியைப் பார்க்கலாம்.. ஸீ யு டுமாரோ.." என்று சொல்லி விட்டு வகுப்பை விட்டு வெளியே வந்து நீண்ட வராண்டாவில் நடந்தாள்..
"வெல்டன்.." என்றகுரல் கேட்டு நிமிர்ந்தாள்..
தமிழ்செல்வன் நின்றிருந்தார்.. இவர் எப்போது வந்தார் என்ற திகைப்புவர மரியாதையுடன் நின்றாள்..
"இந்தப் பக்கமா வந்தேன்.. நீங்க கிளாஸ் எடுத்துக் கிட்டு இருந்தீங்க.. உங்க பர்ஸ்ட் கிளாஸாச்சே.. அதான்.. நின்று பார்த்தேன்.. இன்ட்ரெஸ்டிங்கா சொல்லிக் கொடுக்கிறீங்க.. பேசாம நானும் பசங்களோட வந்து உட்கார்ந்திரலாமான்னு நினைச்சேன்னா பாருங்களேன்.."
தமிழ்செல்வனின் புகழுரையில் மிருதுளாவுக்கு வெட்கமாகி விட்டது.. என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் லேசாக சிரித்து வைத்தாள்..
"என் நம்பிக்கையைக் காப்பாத்திருவீங்க.."
"தேங்க்ஸ் சார்.."
"எதுக்கு..?"
"ஏ.ஹெச்.எம் அப்ஜெக்ட் பண்ணியும் எனக்காக நீங்க ரெகமென்ட் பண்ணினதுக்கு.."
"நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்.. சயின்ஸையும் கதை போல சொல்லி அதில ஸ்டூண்ட்ஸீக்கு இன்ட்ரெஸ்ட் வர வைக்க முடியும்ன்னு காட்டறிங்களே.. எங்க ஸ்கூலுக்கு அருமையான டீச்சர் கிடைச்சிருக்காங்களே.."
மிருதுளா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. தமிழ்செல்வனின் வார்த்தைகள் மனதுக்கு மகிழ்வைத் தந்தாலும்.. முகத்திற்கு நேரான புகழுரை சங்கோஜத்தையும் தந்தது..
"கரெஸ்பாண்டென்டைப் பார்த்தீங்களா..?" தமிழ்செல்வன் மென்மையாக வினவினார்..
அவர் இதைத்தான் கேட்கப் போகிறார் என்பதை யூகித்து வைத்திருந்த மிருதுளா அதற்குத் தலையை ஆட்டினாள்..
"அவரோட குழந்தைகளைப் பார்த்தீங்களா..?"
"ம்ம்ம்.."
"நல்ல மனிதர்.. சின்ன வயது.. பாவம்.. குழந்தைகளுடன் தனித்துப் போராடனும்கிற விதியாகிருச்சு.. அவரோட அப்பா காலத்திலதான் நான் இந்த ஸ்கூலில் டீச்சரா வேலைக்குச் சேர்ந்தேன்.. படிப்படியா முன்னுக்கு வந்து இன்னைக்கு ஹெச்.எம். சீட்டில் உட்கார்ந்திருக்கேன்.."
"ம்ம்ம்..."
"விக்ரமோட மனைவியை எனக்குத் தெரியும்.. அவரோட கல்யாணத்துக்கு ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம் முன்னாலே நின்னு ஆசிர்வாதம் பண்ணினோம்.. ம்ப்ச்.. விதியோட கணக்க யாரால கணிக்க முடியும்..?"
உண்மைதான் என்று நினைத்துக் கொண்டாள் மிருதுளா...
அவ்வளவு பெரிய மனிதன்.. இளம் வயது.. அவன் விரல் நுனியில் பல தொழில்கள் இருக்கின்றன.. அவன் கண்ணசைவில் ஓடியோடி வேலை செய்ய நூற்றுக் கணக்கில் ஆள்கள் இருக்கிறார்கள்.. இருந்தும் அவனும்.. அவனுடைய குழந்தைகளும் தனிமையில் நிற்கின்றார்கள்.
இதை என்னவென்று சொல்லுவது..?
"அவரோட அப்பாவும் அம்மாவும் மகன்மேலே உயிரையே வைத்திருந்தாங்க.. அதனாலேதான் விக்ரம் காதல்ன்னு வந்து நின்னதும் மறுப்புச் சொல்லாம கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டாங்க..."
'காதலா..?'
அவளின் அதிர்ந்த பார்வையில் எதைக் கண்டாரோ.. தமிழ்செல்வன் 'ஆமாம்' என்ற பாவனையில் தலையை அசைத்தார்..
"காதல்தாம்மா.. விக்ரம் நீபாவைக் காதலித்துத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார்.. ஆனா.."
எதையோ சொல்ல வந்தவர் அதைச் சொல்ல முடியாமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டார்.. மிருதுளாவின் மனதை துயரம் கிள்ளியது.. விக்ரம் திருமணமாகி மனைவியை இழந்தவன் என்பதை விட.. அந்தத் திருமணம் காதல் திருமணம் என்பதில் அவள் மனதில் துயரம் கவிந்தது...
"வருண் பிறந்த பின்னாலே விக்ரமின் அப்பாவுக்கு பர்ஸ்ட் ஹார்ட் அட்டாக் வந்தது.. விக்ரமின் அம்மா அவர நல்லபடியாதான் கவனிச்சுக்கிட்டாங்க.. இருந்தும்.. வைசாலி பிறந்த பின்னாலே அவருக்கு செகண்ட் அட்டாக் வந்து போயிட்டார்.. அதைவிடக் கொடுமை என்னன்னா.. கணவர் இறந்த செய்தி கேட்ட மறுநிமிசமே விக்ரமோட அம்மாவும் போயிட்டதுதான்.. எங்களாலே அதைக் கண்கொண்டு பார்க்க முடியல.. இப்பவும் இதைப்பத்தி ஸ்கூலில் ஆச்சரியமா பேசிக்குவாங்க.."
"ம்ம்ம்.."
"நீங்க அவரோட அக்ரிமெண்டில் சைன் பண்ணிட்டிங்கள்ல..?"
தமிழ்செல்வன் கேள்விக்கு தலை அசைத்த மிருதுளாவுக்கு.. அவரிடம் விக்ரம் விவரம் சொல்லாமல் இருந்திருப்பானா என்ற எண்ணம் வந்தது..
சொல்லியிருப்பான்.. கட்டாயம் சொல்லியிருப்பான்.. இருந்தும் அதைத் தெரியாதவரைப் போல அவர் கேள்வி கேட்டதில் அவனுக்கும் அவருக்குமிடையே இருந்த ஆழ்ந்த தொடர்பை அவர் வெளிப்படுத்திக் கொள்ள முனைவதில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்..
"உங்களுக்கு இது கிரேட் ஆப்பர்சூனிட்டி மிருதுளா.. இந்த ஸ்கூலில் வேலை பார்க்கிறவங்க கவர்ண்மென்ட் ஜாப் கிடைத்தாலும் விட்டுட்டுப் போக மாட்டாங்க..
இந்த ஸ்கூலில் வேலை பாக்கிறவங்கங்கிற ஐடென்டிக்கான வேல்யூவே தனி.. அதை எந்த கவர்ண்ட்மென்ட் ஜாபிலயும் கொடுத்து விட முடியாது.."
மூன்று வருடங்களுக்காவது அவள் வேலையி-லிருந்து விலககூடாதென்ற அக்ரிமெண்டை நினைவு படுத்துகிறார் என்பதை புரிந்து கொண்ட மிருதுளா அவர் சொன்னதை ஒப்புக் கொள்ளும் பாவனையில் தலையை மேலும் கீழுமாக அசைத்தாள்..
"அப்பாவுக்கும் நல்ல சேலரி கிடைக்கும்.. அவர் பார்க்கிற வேலையை ரிசைன் பண்றதினால சர்வீஸ் போகுதேன்னு நினைக்க வேண்டாம்.. அதை ஈடுகட்டறதைப் போல பெரிய வேலையைத்தான் விக்ரம் கொடுப்பார்.."
"சொன்னார் சார்.."
"சேலரியும் அதிகமா இருக்கும்.."
"அதையும் சொன்னார் சார்.."
"வெல்.. எங்கே நீங்க அந்தக் குழந்தைகளுக்கு கவர்னெஸ்ஸா இருக்கிற பொறுப்பை ஏத்துக்க மாட்டிங்களோன்னு இருந்தது.. நல்ல வேளையா நீங்க அதை ஏத்துக்கிட்டிங்க..."
"ஏத்துக்கிட்டேன்.. அக்ரிமெண்டில் சைனும் போட்டுட்டேன்.. பட்.. இன்னும் இதைப்பத்தி என் பேரண்ட்ஸ்கிட்டக் கன்சல்ட் பண்ணலை..."
"டோன்ட் வொர்ரி.. தேவைப்பட்டா உங்க பேரண்ட்ஸ்கிட்ட நானே பேசறேன்.."
"சரிங்க சார்.."
"டைம் டேபிள் வந்திருச்சா.."
"இன்னும் வரலை.."
"நடேசன் கொண்டு வருவான்.. ஆல் தி பெஸ்ட்.."
"தேங்க் யு சார்.."
தமிழ்செல்வன் நடந்துவிட்டார்.. அவருக்கு எதிர் திசையில் நடந்த மிருதுளாவுக்கு தான் செய்வதெல்லாம் சரிதானா என்ற கலவரம் நெஞ்சில் எழுந்தது...
'அப்பாம்மாகிட்டப் பேசாம இந்த பயம் போகாது..'
அவளுக்குச் சீக்கிரமாக வேலை முடியாதா என்றிருந்தது.. மதிய உணவை அவள் பள்ளியிலேயே முடித்துக் கொள்வதாக சொல்லியிருந்ததால்.. மாலையில் தான் சபாபதி அவளை அழைத்துக் கொண்டு போக வருவார் என்பதில் அவளுக்கு களைப்பாக இருந்தது.. உடனடியாக அவரைப் பார்த்து..
'உங்களிடம் கேட்காம மிகப் பெரிய முடிவை எடுத்துட்டேன்ப்பா..' என்று சொல்லி அழ வேண்டும் போல இருந்தது..
அவள் மனதாரத்தானே அந்த அக்ரிமெண்டில் கையெழுத்திட்டாள்..? அப்புறமும் எதற்காக அதை நினைத்து வேதனை கொள்கிறாள்..?
மிருதுளாவுக்குப் புரியவில்லை.. அவளுக்கு தனிமை வேண்டியிருந்தது.. அடுத்து எந்த வகுப்புக்கு பாடம் எடுக்கப் போக வேண்டும் என்று தெரியாத நிலைமையில் அது சாத்தியாமாகுமா என்ற எண்ணத்துடன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள்.. தலைவலி வரும் போல இருந்தது.. நெற்றிப் பொட்டில் லேசான 'விண் விண்' என்ற வலி ஆரம்பிக்க.. நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டாள்..
'எதனால தலை வலிக்குது..?'
அவளுக்கு அவ்வளவு எளிதாக தலைவலித்து விடாது.. ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் கொண்டவள்.. அவளுக்குத் தலைவலி வருவதென்றால் அவளுக்கே அது ஆச்சரியமான ஒன்றாக இருந்தது..
தமிழ்செல்வனைப் பார்க்கும் வரைக்கும் அவள் இயல்பாகத்தான் இருந்தாள் என்ற நினைவில் அவர் சொன்ன எது அவளை பாதித்தது.. என்ற யோசனையில் ஆழ்ந்தாள் மிருதுளா.. சட்டென்று அவள் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது..
'அப்படியும் இருக்குமோ..?!'
கடவுளே என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் மிருதுளா.. அவளுக்கு விக்ரமின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் எந்தவிதப் பிரச்னையும் இல்லை.. மூன்று வருடங்கள் அந்த வேலையிலேயே நிலைத்து நிற்பதற்கான அக்ரிமெண்டில் கையெழுத்துப் போட்டதில் எந்தவித வருத்தமும் இல்லை.. வருத்தமெல்லாம் தமிழ்செல்வன் விக்ரமின் திருமணம் காதல் திருமணம் என்று சொன்ன பின்புதான் வந்திருக்கிறது..
'இப்படியும் நான் இருப்பேனா..?'
தலையைப் பிடித்தபடி நின்று விட்டவளை சங்கீதாவின் குரல் அசைத்தது..
"மிருதுளா.. இங்கே என்னப்பா பண்றிங்க..?"
"சும்மா.. அடுத்த கிளாஸீக்கான டைம் டேபிளை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டு இருக்கேன்.."
"அதையெல்லாம் நடேசன் கொண்டு வருவான்.. நீங்க உள்ளே வாங்க.."
சங்கீதா அவள் கை பிடித்து அழைத்துப் போனாள்.. பிளாஸ்க்கில் இருந்த சூடான 'டீ' யை ஊற்றித் தந்தாள்..
"குடிங்க.. டயர்டா இருக்கீங்க..."
"தேங்க்ஸ் சங்கீதா.. நைட் ஜர்னி.. ரெஸ்ட் இல்லை.. காலையில தூத்துக்குடியில் இறங்கினதும் வேலைக்குக் கிளம்பி வந்துட்டேன்..."
"அதனாலதான் இவ்வளவு டயர்டா இருக்கீங்க.. நல்லவேளை... இப்பத்தான் டயர்டுனெஸ் உங்க முகத்தில் தெரியுது.. காலையில் டெர்ரரைப் பார்க்கப் போனப்ப இந்த டயர்டுனெஸ் இருந்திருந்தா.. அவ்வளவுதான்.. கிழிச்சுத் தோரணம் கட்டித் தொங்க விட்டிருப்பார்.."
"ஏனாம்..? அவருக்கெல்லாம் டயர்டுனெஸ் வராதா..?"
எரிச்சலுடன் மிருதுளா கேட்டதில் சங்கீதா ஆச்சரியமாகிப் போனாள்..
"நீங்களும் என் கேஸ்தானா..?"
"அப்படின்னா..?"
"இங்கே எல்லோரும் சீன் போடுவாங்க.. மனசில ஒன்னு.. வெளியில ஒன்னுதான்.. எதையும் ஓபனா பேசிற மாட்டாங்க.. டெர்ரரப் பத்தித் தனியா கிசுகிசுப்பாங்க.. நம்ம முன்னாலே அவரப்போல உண்டும்மாம்பாங்க.. அதத்தான் சொன்னேன்.."
"அவரோட குழந்தைகளைக் கூடப் பார்த்தேன்.."
"ம்ம்ம்.. தங்கதுரை சாருக்கும்.. சுபா மேடத்துக்கும் குழந்தைகள் மேலே உயிர்.. ம்ஹீம்.. அவங்க இருந்திருந்தா டெர்ரருக்கு உதவியா இருந்திருக்கும்.."
"அவங்க யாரு..?"
"டெர்ரரோட பேரண்ட்ஸ்.. அதோ.. அவங்க படத்தை மாட்டியிருக்காங்க பாருங்க..."
சங்கீதா சுட்டிக் காட்டிய திசையில் சுவரில் பெரிய படங்களாக தொங்கிக் கொண்டிருந்த தம்பதிகளின் முகத்தில் சாந்தமும்.. பெரிய மனிதத் தோரணையும் நிரம்பியிருந்தன...
"டெர்ரர் மட்டும் காதல்.. கீதல்ன்னு மாட்டாம இருந்திருந்தா இவங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு இருந்திருப்பாங்க.."
சங்கீதாவின் வார்த்தையில் துணுக்குற்றாள் மிருதுளா..

இதற்கான அர்த்தம் என்ன..? விக்ரமின் காதல் திருமணம் அவனது பெற்றோர்களை மரணப் பாதைக்கு தள்ளி விட்டதா..?

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -8
இது நீரோடு செல்கின்ற ஓடம் -8
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy