இது நீரோடு செல்கின்ற ஓடம் -7

7 ஏனென்று தெரியவில்லை... எத்திசையும் உன் முகமே... கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அவனிடம் நீட்டிய போது.. "அதில இருக்கிற உன் ச...


7
ஏனென்று தெரியவில்லை...
எத்திசையும் உன் முகமே...


கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அவனிடம் நீட்டிய போது..
"அதில இருக்கிற உன் சேலரியைப் பாத்துட்டியா..?" என்று கேட்டான் விக்ரம்..
"பேசாம நீங்க வா.. போன்னு பேசிரலாம் சார்.."
அவன் 'உன்' என்று சொன்னதை சுட்டிக் காட்டினாள் மிருதுளா..
"பேசனும்னு பேசறதில்லை.. நீ ரொம்பச் சின்னப் பெண்.. அதனால வா.. போன்னு வந்துடுது.. பட்.. மத்தவங்க முன்னாலே இப்படிச் சொல்ல முடியுமா..? நீ என் ஸ்கூலின் டீச்சர்.. நான் உனக்கு கரெஸ்பாண்டென்ட்.. வாங்க.. போங்கன்னுதான் கூப்பிட்டாகனும்.. அதுக்கான பிராக்டிஸ் இது.."
அவன் நீண்ட விளக்கம் கொடுத்தான்.. இது போல கூட அவனால் இணக்கமாக பேச முடியுமா என்ற ஆச்சரியத்துடன் அக்ரிமெண்டில் இருந்த அவளுடைய சம்பளத் தொகையை பார்த்தாள் மிருதுளா..
பள்ளியில் மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஆரம்பச் சம்பளம் அவளுக்கு வழங்கப்பட்டிருந்தது.. அவன் வீட்டில் குழந்தைகளின் கண்காணிப்பாளர் பொறுப்பிற்காக.. தங்குவதற்கு வீடும் மாதச் சம்பளமாக முப்பதாயிரம் ரூபாயும் கொடுப்பதாக அவன் சொல்லியிருந்தான்..
'இவ்வளவு பணமா..?' அவளுக்கு கண்ணைக் கட்டியது..
அதே வேளையில் பணத்தினாலே அவளை அடிக்கிறானா என்ற கோபமும் அவளுக்கு வந்தது.. பணத்துக்காகவா அவள் இதற்கு ஒப்புக் கொண்டாள்..?
"சம்பளம் தேவையில்லை சார்.." அவள் மறுத்தாள்..
"எனக்குத் தேவை.." அவன் உறுதியுடன் சொல்லி விட்டான்..
"சம்பளத்துக்காக இதை நான் ஒப்புக்கலை சார்.. குழந்தைகளை நினைத்து உண்மையிலேயே எனக்கு வருத்தமா இருக்கு..?"
அவளின் வார்த்தைகளில் அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.. அந்தப் பார்வையினை எதிர்கொள்ள முடியாமல் அவள் பார்வையைத் தழைத்துக் கொண்டதில் அவன் விழிகளில் ஆச்சரியம் வந்தது..
'எதுக்காக இந்தப் பொண்ணு தலையைத் தலையை குனிஞ்சுக்கிறா..?' அவனுக்கு விளங்கவில்லை..
"இருக்கலாம்.. ஆனா ஒருத்தரோட உழைப்பை நான் ஃப்ரீயா வாங்கிக்க முடியாது.. நான் பிஸினெஸ் மேன்.. உழைப்புக்கான சேலரியைக் கொடுத்துப் பழக்கப் பட்டவன்.. நீங்க என் பிள்ளைகளின் கவர்னெஸா இருக்கிறதுக்கான சேலரி முப்பதாயிரம் ரூபாய்.. ஒவ்வொரு ஆறுமாதத்துக்கும் மத்த வேலைகளுக்கு கூடுதல் படி கொடுக்கிறதைப் போல உங்களின் சேலரிக்கும் டி.ஏ கூடும்.."
"நான் இதை வேலையா நினைக்கலை சார்.."
"நான் நினைக்கிறேன்.."
'நீ நினைச்சா அதை நீயே வைச்சுக்க..' என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விடலாமா என்றுதான் அவள் நினைத்தாள்.. குழந்தைகளின் நினைவு வந்து அதை தடுத்தது..
'பாவம்.. தாயில்லாக் குழந்தைகள்..'
இரக்கத்துடன் பேசாமல் இருந்து விட்டாள்.. அவன் அக்ரிமெண்டை ஃபைலில் வைத்துவிட்டு அவளைப் பார்த்து தலையை அசைத்தான்..
அவ்வளவுதான்.. உன் வேலை முடிந்து விட்டது என்று அவன் சொல்லாமல் சொல்லிய விதத்தில் இனிய கனவு கலைந்ததைப் போல உணர்ந்தாள் மிருதுளா..
அவள் இடம் எதுவென்று உணர்ந்து கொண்ட மனம் வலித்தது.. அவள் எழுந்து கொண்டாள்.. குழந்தைகளைப் பார்த்து முறுவலித்தாள்.. கிளம்ப யத்தனித்தாள்..
மீண்டும் 'டமாரென்ற' சத்தம் கேட்டது.. 'என்னடா இது' என்று திரும்பிப் பார்த்தாள்.. வருண்தான்.. எழுந்து கொள்கிறேன் பேர்வழியென்று நாற்காலியை மோதித் தள்ளி விட்டிருந்தான்..
'இவனுக்கு இதுதான் வேலை போல...'
அவள் நினைத்துக் கொண்டிருந்த அதே சமயத்தில்
"வருண்.. பிஹேவ்.. யுவர் ஷெல்ப்.." என்ற விக்ரமின் கர்ஜனை எழுந்தது..
அந்த கர்ஜனையில் உதடுகள் பிதுங்க வைசாலி அழ ஆரம்பித்தது.. மிருதுளா வைசாலியை மார்போடு அணைத்துக் கொண்டாள்.. இந்த நிலைமையில் அந்தப் பிள்ளைகளை விட்டு விட்டு எப்படிப் போவதென்ற தவிப்பு அவளுக்குள் எழுந்தது..
விக்ரமோ 'போ' என்று சொல்லிவிட்டான்.. அவன் குழந்தையோ அவளைப் போகவிடாமல் கட்டிக் கொண்டு அழுகிறது.. அவள் என்னதான் செய்வாள்..?
இயலாமையுடன் அவனைப் பார்த்தாள் மிருதுளா.. அவன் இறுகிய முகத்துடன் டேபிளில் இருந்த மணியை அழுத்தினான்..  'கிர்' ரென்ற மணியின் சப்தத்தில் வெளியே நின்றருந்த நடேசன் ஓடிவந்தான்..
"ஆயாவைக் கூப்பிடு.."
நடேசன் பின்னங்கால் பிடறியில் பட ஓடின வேகத்தில் கையோடு ஆயாவை அழைத்துக் கொண்டு தான் திரும்பி வந்தான்..
"ஐயா.." ஆயாவின் முகத்தில் பீதி வழிந்தது..
"நானு ஒரு தப்பும் செய்யலீங்களே.."
"அப்படின்னு நான் சொன்னேனா..?"
"இல்லீங்களா..?"
ஆயா நடேசனைப் பார்த்த பார்வையில் கொலைவெறி இருந்தது..
'இன்னைக்கு நீ காலிதான் ஆயா.. ஐயா உன் சீட்டைக் கிழிச்சுடனும்னு சத்தம் போட்டுக்கிட்டு இருக்காரு.. என்ன செய்யப் போற..? ஐயா வைப் பார்க்க வர்றியா..? இல்ல ஊரப் பாத்துப் போறியா..?'
இப்படிச் சொல்லி அழைத்து வந்த நடேசனைப் பார்த்து..
'ஏண்டா பாவி.. நான் உனக்கு என்னடா கெடுதல் பண்ணினேன்..?' என்று விழிகளாலே கேட்டாள் ஆயா..
"வைசாலியை அவ கிளாஸ் ரூமில விட்டுவிடு.."
"சரிங்கய்யா.."
ஆயாவின் நீட்டிய கைகளுக்குள் வைசாலியை ஒப்புவித்தாள் மிருதுளா.. விசும்பிக் கொண்டிருந்த குழந்தையை சமாதானப் படுத்தியபடி வைசாலியின் வகுப்பறையைப் பார்த்துப் போய் விட்டாள் ஆயா..
முறைத்துக் கொண்டிருந்த வருணைக் கடத்திக் கொண்டு போய் அவனது வகுப்பு ஆசிரியையிடம் ஒப்படைத்து விடும்படி நடேசனை பணித்தான் விக்ரம்..
"வாங்கய்யா.."
நடேசன் குனிந்து வருணைத் தூக்கப் போனான்.. அவனோ இவன் கைகளைத் தட்டி விட்டு விட்டு.. காலரை உயர்த்தி விட்டபடி வீரநடை போட்டு வெளியேறினான்.. அதை கோப முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமின் முகத்தில் இளஞ்சிரிப்பு வந்தது..
"சேட்டைக்காரன்.." மிருதுளாவைப் பார்த்துச் சொன்னான்..
'உன் மகனில்ல.. பின்னே வேற எப்படி இருப்பான்..?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மிருதுளா..
"கெட்டிக்காரன்தான்.. வீம்பு அதிகம்.." தனக்குள் பேசிக் கொண்டான் விக்ரம்..
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றாள் மிருதுளா.. அவள் அங்கே நிற்பதைக் கவனிக்காதவனைப் போல அவன் செல்போனை காதுக்கு கொடுத்தபடி டெஸ்க்டாப்பை நோண்ட ஆரம்பித்து விட.. மிருதுளாவிற்கு ஏன் அங்கே நின்றோம் என்று ஆகிவிட்டது..
அவனிடம் சொல்லாமல் போனால் அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என்ற எண்ணத்தில்..
"தேங்க் யு சார்.." என்றாள் அவள்..
நிமிர்ந்து பார்த்தவனின் புருவங்கள் சுளித்தன..
"இன்னுமா நீங்க போகலை..?"
அவனது கேள்வியில் அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது..
'தேவைதான் எனக்கு..' பற்களை நறநறத்தாள்..
'போகாமல் இங்கே உட்கார்ந்து நீ போடுகிற விருந்துச் சாப்பாடை சாப்பிடலாம்ன்னா இருந்தேன்..?'
ஒரு முறைப்புடன் அவள் தலையை அசைத்துக் கூட விடைபெறாமல் வெளியேறி விட்டாள்..
'திடிர்ன்னு இணக்கமா பேசறான்.. திடிர்ன்னு 'யார் நீ'ங்கிறான்.. இவன் கிட்ட மூணு வருசம் குப்பை கொட்டறேன்னு அக்ரிமெண்டில வேற கையெழுத்துப் பேட்டுட்டேன்.. ம்ம்ம்.. என்ன செய்கிறது..?'
மாட்டிக் கொண்ட யோசனையுடன் நடந்தவளுக்கு எதிரே வந்த நடேசன் தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி..
"வாங்கம்மா.. கரெஸ்பாண்டென்டைப் பார்த்துட்-டிங்கள்ள..? டெர்ரரில்ல..?" என்று குரலம் விசாரித்தான்..
'உன் கரெஸ்பாண்டென்டின் பெருமையை நீதான் மெச்சிக்கனும்.. எரிச்சலுடன் மௌனமாக நடந்தாள் மிருதுளா...'
"ஏம்மா உம்முன்னு வர்றீங்க..? பயந்துட்டிங்களா..? நான்தான் படிச்சுப் படிச்சுச் சொன்னேனில்ல.. நீங்க கேட்டாத்தான.. ஹெச்.எம் சொன்னாரு.. ஹெச்.எம் சொன்னாருன்னு சொல்லச் சொல்லக் கேட்காம டெர்ரரப் பாக்கப் போனிங்க.. இப்ப என்ன ஆச்சு..?"
'என்ன ஆச்சு..?'
தனக்கு என்ன ஆகிவிட்டதென்று இவன் இந்த அளவுக்கு பரிதாபப் படுகிறான் என்று மிருதுளாவுக்கு தூக்கிவாரிப் போட்டது..
"கடைசியில சிரிப்பே மறந்து போயிருச்சுல்ல.." நடேசன் விவரம் சொன்னதும்..
'அம்மாடி.. இதைத்தான் இவன் சொன்னானா..?' என்று ஆசுவாசம் அடைந்தாள் மிருதுளா..
அறியாத ஊருக்கு வேலைக்கு வந்து விட்டதில் இப்படியா அவள் பயந்து நடுங்குவாள்..?
'இங்கே யாருமே விளங்கப் பேசித் தொலைக்க மாட்டாங்களா..?' அவளுக்கு எரிச்சல்.. எரிச்சலாக வந்தது.
"டெர்ரரைப் பத்தி நான் சொன்னத கேட்டிருக்கனுமில்ல..?"
விட்டால் நாள் முழுவதும் அவன் அதைப் பற்றிய பெருமையை மட்டுமே பேசிக் கொண்டிருப்பான் என்று புரிந்து போனதில்..
"டீச்சர்ஸ் ரூம் எங்கேயிருக்கு..?" என்று கேட்டாள் மிருதுளா..
"தோ.. அங்கதான் இருக்கு.."
கைகாட்டிய நடேசனின் முகத்தில் அவளைப் பிரியப் போகும் வருத்தம் தெரிந்தது.. இவன் வைசாலியை விடக் குழந்தை என்ற நினைவுடன்..
"தேங்க்ஸ்.." என்று புன்னகைத்தாள் மிருதுளா..
யாரோ மந்திரக் கோலை எடுத்து சுழற்றி விட்டதைப் போல அவன் முகம் நொடிப் பொழுதில் பூவாக மலர்ந்து விட்டது..
"ஐய்யே.. இதுக்கெல்லாம் எதுக்கும்மா தாங்க்ஸீ சொல்லி என்ன வேத்து மனுசனா ஆக்கறிங்க.. இந்த நடேசன் யாரும்மா..?"
'இந்த ஸ்கூலில பியுன்தான..? என்னடா இது.. வழியில போகிற வழிப்போக்கன் எவனாவது ஸ்கூலுக்குள்ள வந்துட்டானா..?'
மிருதுளாவுக்கு சந்தேகம் வந்தாலும்.. அப்படி-யிருக்காது என்று மனம் தெளிந்தாள்..
'ஒல்லிக்குச்சி நரசிம்மனும்.. டெர்ரரும் இவன் கிட்டத்தான வேலை சொன்னாங்க..?'
அவளையுமறியாமல் அவள் மனம் அவனை 'டெர்ரர்' என்று ஏற்றுக்கொண்டதில் அவளுக்கு வியப்பாக இருந்தது..
'பொருத்தமான பேரா இருந்தா ஏத்துக்கிட்டுத்தான ஆகனும்..?' அவள் மனம் அதற்கும் வியாக்கினம் வைத்தது..
"இந்தப் பள்ளிக்கூடத்துக்கு ஆணிவேர்ம்மா.."
நடேசன் அவன் யாரென்பதைப் பீற்றிக் கொண்டிருந்தான்..
'ஒரு ஆணியையும் பிடுங்க முடியாதுன்னு சொல்கிறவங்ககிட்ட இவனக் காட்டனும்.. நல்லா நாலு பிடுங்கு பிடுங்குவாங்க..'
மிருதுளா அவனை ஏற இறங்க பார்த்தாள்.. அதை பிரமிப்பான பார்வை என்று எடுத்துக் கொண்ட நடேசன் மகிழ்ந்து போய்விட்டான்..
"நீங்க பயப்படாதீங்கம்மா.."
'நான் பயப்படறேன்னு உன்கிட்ட வந்து சொன்னேனா..?'
"இந்த நடேசன் இருக்கான்.."
'என்ன கழுதைக்கு..?'
"ஒரு சத்தம் கொடுங்கம்மா.."
'அதை உங்க டெர்ரர் கொடுப்பான்..'
"நான் ஓடி வந்து நிப்பேன்.."
'ஏன்.. அப்படியே ஓடிப் போயிர வேண்டியதுதான..?'
"எது வந்தாலும் சொல்லுங்க.."
'இங்கே எதுப்பா வரப்போகுது..?'
"நான் பாத்துக்கறேன்.."
'அது என்ன தேவைக்கு..? உனக்குத்தான் பார்க்கத் தெரியுமா..? எனக்குப் பார்க்கத் தெரியாதா..?'
"இந்த தூத்துக்குடியிலே கேட்டுப் பாருங்கம்மா.."
'இப்ப என்னத்தைக் கேக்கச் சொல்றான்..?'
"என்னப் பத்திச் சொல்லுவாங்க.."
'கிழிஞ்சது போ.. முடியலடா சாமி..'
மிருதுளா நொந்து போன பார்வையை பார்த்து வைத்தாள்.. அதை வியந்து போன பார்வையாக நினைத்துக் கொண்ட நடேசன் புளகாங்கிதப் பட்டுப் போனான்..
தோள் தட்டிக் காண்பித்து விடும் யோசனை அவன் கண்களில் தெரிவதைக் கண்டு கொண்ட மிருதுளா.. அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றுவார் யாருமில்லையா என்ற கவலைக்கு ஆளானாள்..
அவளது அபயக் குரலை கேட்டு கடவுளே அனுப்பி வைத்த காரிகையாய்..
"என்ன நடேசா.. புதுசா வந்திருக்கிற டீச்சர் காதில எத்தனை முழம் பூவைச் சுத்தின..?" என்று கேட்டபடி எதிரே வந்தாள் சங்கீதா..
மிருதுளாவைப் போல ஒல்லியாய் உயரமாய் இல்லாமல் நடுத்தர உயரமும் சதைப் பிடிப்பான தோற்றமுமாக அவள் இருந்தாள்..
மிருதுளாவுக்கு அழகான பெரிய கண்கள்.. அவளுக்கு நீள் வடிவிலான சிறிய கண்கள்.. மிருதுளாவின் பின்னல் இடுப்பைத் தாண்டித் தொங்கிக் கொண்டிருந்தது..
அந்தப் பெண் முடியை அழகாக.. அளவாக வெட்டி சின்னக் கிளிப்பில் அடக்கியிருந்தாள்.. மிருதுளா அரைத்து விட்ட சந்தனத்தின் நிறத்தில் இருந்தாள்.. அவளோ கோதுமையின் நிறத்தில் இருந்தாள்.. மிருதுளா காட்டன் புடவையைக் கட்டியிருந்தாள்.. அவளோ சின்தெடிக் புடவையைக் கட்டியிருந்தாள்..
மிருதுளாவுக்கு சிரிக்கும் கண்களோடு நின்றிருந்த சங்கீதாவைப் பார்த்ததுமே பிடித்துப் போய் விட்டது..
சிலரிடம் அப்படித்தான்.. முதல் பார்வையிலேயே ஓர்விதமான அன்யோன்யம் உருவாகி விடும்.. அதற்கு காரண காரியங்கள் தெரியாது.. அப்படிப் பட்டவர்களின் எண்ணங்கள் நிச்சயமாக ஒரே அலை வரிசையில் அமைந்திருக்கும்..
"ஹி.. ஹி.."
நடேசன் சங்கீதாவிடம் அசடு வழிந்தான்.. சற்று முன்னால் தோள் தட்டிய அந்த மாவீரன் நடேசன் எங்கேயென்று மிருதுளா அயர்ந்து போனாள்.. தூத்துக்குடி மாவட்டமே அறிந்து வைத்திருக்கும் நடேசனை தலையைச் சொறிய வைத்த சங்கீதாவை தோழமையுடன் பார்த்தாள் மிருதுளா..
"என்னங்க.. நம்ம நடேசன் அளந்து விடறாரா..?"
"இல்லயில்ல.. சும்மாதான்.. பேசிக்கிட்டு வந்தோம்.."
"நீங்க சும்மா பேசியிருப்பீங்க.. நடேசன் அப்படிப் பேசியிருக்க மாட்டாரே..."
"அப்படியெல்லாம் இல்லங்க.. நல்லாத்தான் பேசினார்.."
"அதெல்லாம் ரொம்ப நல்ல்லா.. பேசுவார்.."
"இந்த தூத்துகுடிக்கே அவரைத் தெரியும்ன்னு சொன்னார்.."
"அப்படி தூத்துக்குடி வந்து இவர்கிட்டச் சொல்லுச்சா..?"
சங்கீதா கலகலப்பாக பேசியதில் மிருதுளாவின் மனதிலிருந்த படபடப்பு அகன்றது.. நடேசனைப் பார்த்து தலையசைத்து விட்டு அவள் சங்கீதாவுடன் நடக்க முற்பட்டாள்.. நடேசன் பார்த்த பார்வையில் கடலோரக் கவிதைகளின் சத்யராஜ் தெரிந்து வைக்க.. சங்கீதா அவன் முன்னால் சொடக்குப் போட்டு அழைத்தாள்..
"என்னாச்சு நடேசா.. வழிதப்பின ஆட்டுக்குட்டியா மாறிப் போகலாம்கிற உத்தேசமா..?"
"ஹி.. ஹி.. இல்ல டீச்சர்.."
"அஃது.. அந்தப் படத்தில வர்ற ரேகா டீச்சர்கிட்ட கலர் கலரா குடை இருக்கும்.. இந்த மிருதுளா டீச்சரப் பாரு. குடை மிஸ்ஸிங்.. அதனால.. 'அடி ஆத்தாடி'ன்னு பாடறதை விட்டுட்டு.. நேரத்துக்கு 'பெல்' சுவிட்சைப் போட்டு ஆஃப் பண்ணு..."
"ஹி.. ஹி.. அதில்ல டீச்சர்.. நம்ம மிருதுளா டீச்சர்.."
"பாருடா.. அதுக்குள்ள பேரைச் சொல்லியாச்சா..? நடத்து.. நடத்து.."
"அவங்க நம்ம டெர்ரரப் பாக்கனும்னு சொன்னாங்க டீச்சர்.."
"நிஜமாவா..?"
சங்கீதா ஆச்சரியத்துடன் மிருதுளாவைப் பார்த்தாள்.. டெர்ரரின் பெயரைச் சொன்னாலே எதற்காக இவர்களெல்லாம் இப்படி ஆகிவிடுகிறார்கள் என்று மிருதுளா யோசித்தாள்..
"எப்படி நடேசா.. இன்னைக்குப் பொழுதை தாண்டிருவாங்களா..?" சங்கீதா கேட்க..
"அதான் தெரியலை டீச்சர்.." என்றான் நடேசன்..

அன்றைக்குப் பொழுதைத் தாண்ட முடியாமல் என்ன வந்து விட்டது என்று அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் மிருதுளா..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -7
இது நீரோடு செல்கின்ற ஓடம் -7
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy