இது நீரோடு செல்கின்ற ஓடம் -5

5 சொந்தமென்று சொல்வதற்கு.. உன்னையன்றி யாருமில்லை... அந்தப் பெண் குழந்தை அழகாக இருந்தது.. அதன் குண்டுக் கன்னமும் வண்டுக் கண்களும் ம...

5
சொந்தமென்று சொல்வதற்கு..
உன்னையன்றி யாருமில்லை...

அந்தப் பெண் குழந்தை அழகாக இருந்தது.. அதன் குண்டுக் கன்னமும் வண்டுக் கண்களும் மிருதுளாவை 'வா.. வா..' வென்று அழைத்தன..
சும்மாவே மிருதுளா குழந்தைகளைக் கண்டு விட்டால் விட மாட்டாள்.. அவர்களைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டேயிருப்பாள்.. குழந்தைகளுடன் குழந்தையாக விளையாட ஆரம்பித்து விடுவாள்..
அந்தப் பழக்கம் அன்றும் வந்து விட்டது. கல்லூரியிலிருந்து நேரடியாக வேலைக்கு வந்தவள் குழந்தைத் தனம் மாறாதவள் என்னும் பட்டம் அவளுக்குச் சூட்டப் பட்டிருப்பதை மறந்து போனவளாக அவள் அதைமெய்ப்பிக்கும் வகையில் அந்தப் பெண் குழந்தையைப் பார்த்து கண்கள் விரிய..
"ஹாய்.. ஏன்ஜல்.." என்று அழைத்தாள்..
அந்த தேவதை வெட்கப் பட்டாள்.. அந்த வெட்கத்தில் அந்தக் குழந்தையின் மீதான மிருதுளாவின் ஆசை அதிகமானது..
"அவ பெயர் ஏன்ஜலில்ல.." மூக்கை விடைத்தான் மிருதுளாவின் அணைப்பில் இருந்த சிறுவன்..
"இவளை உனக்குத் தெரியுமாடா..?"
என்னவோ காலம் காலமாக அந்தச் சிறுவனுடன் பழகியவளைப் போல கண்கள் விரியக் கேட்டாள் மிருதுளா..
"ம்ம்ம்.." அவன் தலையசைத்தான்..
"உன் பிரண்டா..?"
"ஊஹீம்.. என் சிஸ்டர்.."
"அட.."
அவளுக்கு ஆச்சரியமானது.. அண்ணனும் தங்கையும் ஒன்றாக வந்து சிங்கத்தின் குகையில் மாட்டிக் கொண்டார்களே என்று அவள் பரிதாபப் பட்டாள்..
"சொல்லுடா.. உன் பெயர் என்ன..? இவ பெயர் என்ன..?"
"நான் வருண்.. இவ வைசாலி.."
"வெரிகுட் நேம்ஸ்.. நீ எந்தக் கிளாஸ்..? இவ எந்த கிளாஸ்..?"
"நான் பர்ஸ்ட் ஸ்டாண்டர்டு.. இவ எல்.கே.ஜி.."
"குட்.. இது கரெஸ்பாண்டென்டோட ரூம்.. இங்கே பெர்மிசன் இல்லாம வரக் கூடாது.. அதனாலதான் சார் கோபப் பட்டுட்டார்.. ஸே டு ஹிம் ஸாரி.."
"நோ.." வருண் பிடிவாதத்துடன் தலை அசைத்தான்..
"வருண்.." வளந்தான் கர்ஜித்ததில் மிருதுளா பயந்து போனாள்..
"நான் சொல்கிறேன் சார்.. நான் சொல்கிறேன்.." வருணை அவள் முதுக்குப் பின்னால் மறைத்துக் கொண்டாள்..
இந்தக் களேபரத்தில் வைசாலி அழ ஆரம்பிக்க.. மிருதுளா குனிந்து அவளைத் தூக்கிக் கொண்டாள்.. அவனது புருவங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்திச் சுருங்கின..
"அழாதேம்மா.. அண்ணனுக்கு ஒன்னுமில்லை.. வருண் சொன்னாக் கேளு.. சாரிடம் ஸாரி சொல்லு.."
"நான் எதுக்காக ஸாரி சொல்லனும்..?" வருண் முரண்டினான்..
"நீ செய்தது தப்புத்தானே..?"
"என்ன தப்பு..?"
"பெர்மிசன் இல்லாம இங்க வரலாமா..? அதுவும் உன் தங்கையை வேற கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்க.."
"நாங்களாய் வரலை.. டாடிதான் வரச் சொன்னார்.."
"டாடியா..? உன் டாடி வந்திருக்கிறாரா..?"
மிருதுளா அறை வாசலில் வருணைப் பெற்றவர் இருக்கிறாரா என்று பார்வையால் துழாவ.. வருண் அவள் கையில் தட்டினான்..
"என்னடா..?"
"எங்க டாடி அங்கேயில்லை.. இங்கே இருக்கார்.."
வருண் சுட்டிக் காட்டிய பக்கம் பார்த்த மிருதுளாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.. வருணின் சுட்டு விரல் வளந்தானை நோக்கி நீண்டிருந்தது..
'இவன் இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனா..?'
அவள் அதிர்ந்து விட்டாள்.. அவள் மனம் கூம்பியது.. அந்த எதிர்பாராத திருப்பத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் அவள் மனம் திண்டாடியது..
அவனது கம்பீரமும்.. கவர்ச்சியும்.. அவனைத் திருமணம் ஆகாதவனாகவே அறிவித்ததில் அவள் உண்மை எது.. பொய் எது என்று உணரமுடியாமல் தத்தளித்தாள்..
'இருக்கவே.. இருக்காது..'
இப்படித்தான் அவள் நினைத்தாள்.. என்னதான் முயன்றாலும் அவனை இரண்டு குழந்தைகளின் தகப்பனாக ஏற்றுக் கொள்ள அவள் மனம் மறுத்தது..
அவளது திகைத்த பார்வையில் எதைக் கண்டானோ.. அவன் ஒரு நொடி அசையாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.. லேசான பெருமூச்சுடன் கையிலிருந்த புத்தகத்தை அலமாரியில் வைத்தபடி..
"இவங்க என் குழந்தைகள்தான்.." என்றான்..
மிருதுளாவின் கை அவளையுமறியாமல் அவள் கைபிடிக்குள் அகப்பட்டிருந்த வருணை விடுவித்தது.. அவள் தோளில் சாய்ந்திருந்த வைசாலியை இறக்கி விட அவளுக்கு மனம் வரவில்லை..
"இவங்களை நான்தான் வரச் சொன்னேன்.."
அவன் குனிந்து வருண் தள்ளி விட்டிருந்த நாற்காலியை நிமிர்த்தி வைத்தான்.. வருணைத் தூக்கி அதில் அமர வைத்தான்.. வருண் திமிறி இறங்க முயன்றான்..
"வருண்.."
வளந்தானின் கண்களின் கடுமையில் வருண் அசையாமல் உட்கார்ந்து விட்டான்.. அவன் கண்களில் நீர் திரையிட்டிருந்தது..
'பாவம்..' மிருதுளா அவனுக்காக இரக்கப் பட்டாள்..
"வைசாலியை டேபிளில் உட்கார வையுங்க.."
அவனது கட்டளையில் தோளில் சாய்ந்திருந்த வைசாலியை விலக்கி டேபிளில் அமர வைக்க முயன்றாள் மிருதுளா.. குழந்தையோ அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு விட மாட்டேனென்று அடம் பிடித்தது..
"வைசாலி... கம்..." கண்டிப்புடன் அவன் அதட்டினான்..
அவன் அதட்டலில் குழந்தையின் பிடி இறுகியது.. மிருதுளா முகம் சுளித்தாள்..
"சார் இவ குழந்தை.. இவ்வளவு ஹார்ஷா ட்ரீட் பண்ண வேண்டாம்.."
"நீ இங்கே வந்திருக்கிறது.. என் ஸ்கூலில் படிக்கிற ப்ளஸ் ஒன்.. ப்ளஸ்டூ பிள்ளைகளுக்கு கிளாஸ் எடுக்க.. எனக்கு கிளாஸ் எடுக்கிறதுக்காக இல்லை.. மைன்ட் இட்.."
"ஐ நோ.. ஐ நோ.. பட்.. இதுக ரெண்டும் பிஞ்சுக.. பச்சைக் குழந்தைக.. இதுகளை ப்ளஸ் ஒன்.. ப்ளஸ்டூ படிக்கிற பிள்ளைகளைப் போல ட்ரீட் பண்ணாதீங்கன்னு தான் நான் சொல்கிறேன்.."
"என் குழந்தைகளை எப்படி ட்ரீட் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.. முதலில் நீ வைசாலியை இறக்கி விட முடியுமா.. முடியாதா..?"
'என்ன மனிதன் இவன்..?'
மிருதுளாவிற்கு அந்தக் குழந்தைகளை நினைத்துப் பாவமாக இருந்தது.. வைசாலியை மெதுவாக விலக்கி.. அவன் முன்னால் அமர வைக்காமல்..
"ஏன்ஜல் என் முன்னாடியே உட்கார்ந்துக்குவாளாம்.. என்ன..?" என்று கொஞ்சியபடியே அவள் முன்னால் உட்கார வைத்தாள்..
"நீங்களும் உட்காருங்க.." அவன் கடுமை காட்டினான்..
'இதுக்கு 'நீ'ன்னு சொல்லிட்டே போயிரலாம்.. ஒரு தடவை வாங்க.. போங்கங்கிறான்.. ஒரு தடவை வா.. போங்கிறான்.. எப்ப எது மாதிரி கூப்பிடுவான்னே தெரியலை.. சிங்கத்துக்கிட்ட வேலை பார்க்கனும்னு கிளம்பி வந்தா இப்படித்தான் போல இருக்கு..'
அவள் நாற்காலியின் முனையில் அமர்ந்தாள்.. அவன் சுழல் நாற்காலியில் சுழன்றபடி அவளைப் பார்க்க.. அவனது காந்தப் பார்வையில் அவள் வேறு பக்கமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.. பேசாமல்..
'பார்க்காதே.. என்னைப் பார்க்காதே..
                குத்தும் பார்வையாலே..
     என்னைப் பார்க்காதே..'
என்று பாடி விட்டால் என்ன என்று கூட அவளுக்குத் தோன்றி விட்டது..
'இப்படியா ஒரு மனுசன் பார்த்து வைப்பான்.. அதிலயும் இவன் இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாம்..'
அவன் மனைவி எப்படி அவனது இந்தக் காந்தப் பார்வையை எதிர்கொள்கிறாள் என்று நினைத்துப் பார்த்தவளுக்கு ஏனோ அந்த நினைவே பிடிக்கவில்லை..
யார் மனைவி எப்படிப் பார்த்தாலென்ன என்று தன் மனதை அதட்டியவளுக்கு... அந்த அதட்டல் தேவையில்லாமல் அவன் மனைவியைப் பற்றி நினைக்கக் கூடாது என்ற நாகரிகத்தினால் வந்ததா இல்லை.. அவனது மனைவியைப் பற்றிய நினைவே வரக்கூடாது என்ற அவளின் உள்ளார்ந்த உணர்வினால் வந்ததா என்று அவளுக்கே பிடிபடவில்லை...
'இவனை யாரு இந்த வயதுக்குள்ள கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கச் சொன்னது..?'
அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.. இருந்திருந்து ஒருவனின் முகம் பார்க்க முடியாமல் அவள் தடுமாறுகிறாள்.. அந்த அளவிற்கு அவன் ஆளுமை கொண்டவனாக.. கம்பீரமானவனாக.. கவர்ச்சிகரமாக இருந்து தொலைக்கிறான்.. அப்படிப்பட்ட 'ஹி மேன்' அதற்குள் திருமணம் செய்து 'பேமிலி மேன்' என்று அவள் முன்னால் நின்று தொலைக்க வேண்டுமா..?
'இப்ப இவன் பெண்டாட்டி.. பிள்ளைகள்ன்னு இல்லாமலிருந்தா மட்டும் இவனை நீ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க முடியுமா..? நடக்கிறதைப் பாருடி..' என்றது அவள் மனது..
அதுதானே என்று தந்நிலைக்கு மீண்டாள் அவள்..
அவன் யார்..? அவள் யார்..? அவன் பள்ளியில் மாதச்சம்பளத்திற்கு வேலை பார்க்க வந்திருப்பவள் அவள்.. அவனை சரிவர பார்த்தறியாதவள்.. முதல் பார்வையில்.. அவளது இளம் வயதுப் பெண் மனதை கொள்ளை கொள்வதைப் போன்ற வசீகரத் தோற்றத்துடன் அவன் இருந்து வைத்தால் அவள் மனம் கண்டபடி சிறகை விரித்து காற்றில் பறக்க ஆரம்பிக்கலாமா..?
"ஏதும் ஓட்டப் பந்தயத்திலே கலந்துக்கப் போகிறிங்களா..?"
அவன் நிதானமாகக் கேட்டான்.. எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்டு வைக்கிறான் என்று அவளுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை...
"இல்லையே.." அவள் முகம் சிவக்கப் பதில் சொன்னாள்...
"அப்புறம் எதுக்காக சேரில் தொற்றிக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க.. ரிலாக்ஸாய் உட்காரலாமே.." அமர்த்தலாக வினவினான் அவன்..
'ஓ.. இவன் இதுக்குத்தான் அப்படிக் கேட்டானா..?'
அவள் நகர்ந்து சாய்ந்து அமர்ந்தாள்.. அவளை அவன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதில் அவளுக்கு படபடப்பாக இருந்தது..
"தமிழ்செல்வன் சார் இப்போதுதான் போன் பண்ணினார்.."
அதே ஊடுறுவும் பார்வையோடு அவன் பேசினான்.. இவன் ஒழுங்காய் பார்த்துத் தொலைக்க மாட்டானா என்ற எரிச்சல் அவளுக்குள் மேவியது..
இப்படி உற்று உற்றுப் பார்த்தாள் எதிரிலிருக்கும் பெண் என்ன ஆவாள் என்ற பொறுப்புணர்ச்சி கொஞ்சமாவது இவனிடம் இருக்கிறதா என்ற கோபம் அவளுக்குள் மேலோங்கியது..
'தமிழ்செல்வன் சார் எதைச் சொன்னாராம்..? அதைச் சொல்லாம உத்து உத்து பார்த்துக்கிட்டு இருக்கானே...'
"உன் பேரண்ட்ஸீக்கு நீ ஒற்றைப் பெண்ணாமே..?"
'இதை எதுக்கு விசாரிக்கிறான்..? எனக்கு மாப்பிள்ளை.. கீப்பிள்ளை பார்க்கப் போறானாமா..?'
அந்த எண்ணமே அவளுக்கு கசந்தது.. அவன் அடுத்த கேள்விக்கு தாவினான்...
"உன் அப்பா பிரைவேட் கம்பெனியில் வொர்க் பண்றாராமே.."
'அதில் உனக்கு என்னடாப்பா வருத்தம்..?' என்று கேட்கலாம் போல அவளுக்கு இருந்தது..
"பிரைவேட் கம்பெனியில் வொர்க் பண்றவரின் மகளுக்கு வேலை கொடுக்கக் கூடாதுங்கிறதைப் போல ரூல் ஏதாவது உங்க ஸ்கூலுக்கு வைத்திருக்கீங்களா சார்..?" அவள் பவ்யமாக கேட்டாள்..
கணப்பொழுதுக்கு அவன் கண்களில் மெச்சுதல் வந்து போனது..
"இதுவரைக்கும் இல்லை... இப்ப நீ வாய் பேசுகிறதைப் பார்க்கிறப்ப இனிமேல் அதைப் போல ரூல் கொண்டு வந்திரலாமான்னு யோசிக்கிறேன்.." அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான் அவன்..
இவன் செய்தாலும் செய்வான் என்ற நினைவோடு அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து டேபிளின் மீது பார்வையை ஓட்டினாள் மிருதுளா.. அங்கே.. தந்தத்தில் செய்யப்பட்ட பெயர் பலகையில்..
விக்ரம் எம்.பி.ஏ கரெஸ்பாண்டென்ட்
வித்யாசிரமம் ஹையர் செகன்டரி ஸ்கூல்..
என்ற எழுத்துக்கள் பித்தளையில் பொறிக்கப் பட்டிருந்தன...
அவை தங்கம் போல பளபளத்ததில் இவன் தகுதிக்கு வைரத்தில்கூட எழுத்துக்களை பொறித்து வைப்பான் என்று நினைத்துக் கொண்டாள் மிருதுளா..
'யாராவது தூக்கிட்டுப் போயிட்டா என்ன செய்கிறதுன்னு பித்தளையில் பொறிச்சிருப்பான்.. ஸ்கூலாச்சே.. நாலுபேர் வந்து போகிற இடமாச்சே...'
லேசாக உதட்டைச் சுழித்தவள்.. எதிரில் அவன் அவளது முக உணர்வுகளை அவதானித்துக் கொண்டிருக் கிறான் என்பதை மறந்து விட்டாள்..
"என்ன விசயம்..?"
கனகாரியமாக அவன் அவளது உதட்டுச் சுழிப்பை பற்றி விசாரிக்க முற்பட்டதும் அவளுக்கு என்ன பதிலைச் சொல்வதென்றே தெரியவில்லை..
"நத்திங் சார்.. உங்க நேம் போர்டை பார்த்தேன்.." சமாளிக்க முயன்றாள்..
"ஊஹீம்..? அதில் நீங்க உதட்டைச் சுழிக்கிற அளவுக்கு என்ன இருக்கு..? ஏன்..? என் பெயரை உங்களுக்குப் பிடிக்கலையா..?" வெகு அக்கறையாக அவன் கேட்டான்..
'ஆமாண்டா.. பிடிக்கலை.. மாத்தி வைச்சுக்க..' என்று சொல்லலாம் போல அவளுக்கு இருந்தது..
அவள் எதற்காக அங்கு வந்திருக்கிறாள்..? அவன் பள்ளியில் ஆசிரியை வேலை பார்க்க வந்திருக்கிறாளா இல்லை அவனது பெயரைப் பார்த்து பிடித்திருக்கிறதா.. இல்லையா என்று கருத்தைச் சொல்ல வந்திருக்கிறாளா..?
"உங்கள் பெயருக்கு என்ன சார்..? அது நல்லாத்தானே இருக்கு.." எரிச்சல் மண்டிய குரலில் அவள் சொன்னாள்..
"அதுதானே பார்த்தேன்.. விக்ரம்ங்கிற என் பெயரை பிடிக்கலைன்னு இது வரைக்கும் யாருமே சொன்னதில்லை.." அவன் பெருமையுடன் தம்பட்டம் அடித்துக் கொண்டான்...
'ஆமாமாம்.. நீ பெரிய விக்கிரமாதித்தன்.. உன் பெயரைக் கேட்டதும் ஊருக்கே பிடிச்சிருக்கும்..' அவளுக்கு பற்றிக் கொண்டு வந்ததில்..
"உங்க வொய்ஃபுக்கு உங்க பெயரை பிடிக்குமா சார்..?" என்று கேட்டு விட்டாள்..
எதனால் அந்தக் கேள்வியை கேட்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. அவன் திருமணமானவன் என்பதிலேயே அதிர்ந்து போயிருந்தவள்.. அவனது திருமணத்தைப் பற்றி நினைக்க விரும்பாதவள்.. அவன் மனைவியைப் பற்றிய பேச்சை எடுக்காதவள்.. எதற்காக அந்தக் கேள்வியை கேட்டாள்..?
அதுவரை துளைக்கும் பார்வையுடன் அமர்த்தலாக அவளை பார்த்தபடி.. அலட்டலாகப் பேசிக் கொண்டிருந்த-வனின் முகம் அதி பயங்கரமாக மாறியது.. அதைவிட பயங்கரமாக அவன் முன்னாலிருந்த நாற்காலியில் பிடிவாதமாக உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்த வருணின் முகம் மாறியது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -5
இது நீரோடு செல்கின்ற ஓடம் -5
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy