இது நீரோடு செல்கின்ற ஓடம் -16

16 எனக்கு உன் கண்ணைக் கண்டுதான் பயம்.. உன்னைக் கண்டில்லை... "அப்புறம் என்ன ஆச்சு.. ?" விழுந்து விழுந்து சிரித்துக் க...

16
எனக்கு உன் கண்ணைக் கண்டுதான் பயம்..
உன்னைக் கண்டில்லை...


"அப்புறம் என்ன ஆச்சு..?"
விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்த மிருதுளாவிடம் ஆர்வமாக கேட்டாள் சங்கீதா..
"தெரியலைப்பா.. நான் போயிட்டேன்.. கேட்டுப் பக்கம் போனப்ப திரும்பிப் பார்த்தேன்.. டெர்ரர் கோபமா கத்திக்கிட்டிருந்தார்.. நம்ம ஸ்கூலு வீராதீ வீரன்.. சூராதி சூரன் அவர் காலில விழுகிறதைப் போல நடுங்கிக்கிட்டு நிக்கிறாரு.. ஹா.. ஹா.. இந்த லட்சணத்தில சங்கீதா.. இவரு ஏரியா தாதாக்கள் எல்லாம் இந்தாளோட தயவை நம்பித்தான் ரௌடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்.."
"இவனுக்கு ஏண்டி இந்த வேலை..?"
சங்கீதா இயல்பாக கேட்டாள்.. எந்த நொடியில் அவர்கள் இருவரும் வாடி.. போடி என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள் என்ற துல்லியமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.. நேர்த்தடத்தில் பயணிக்கும் வாகனத்தைப் போல.. 'வாங்க.. போங்க..' என்ற விளிப்பு சடுதியில் 'வாடி.. போடி' யென்று ஆகிவிட்டது..
"என்னைக் கேட்டா..? எனக்கென்ன தெரியும்..?"
"டெர்ரோட பேரைக் கேட்டாலே இவன் நடுங்குவான்.. நேத்திக்கு என்னடான்னா அவர் முன்னாலே நேருக்கு நேரா நின்னிருக்கான்.. ம்ஹீம்.. அவனுக்கு நேத்து விடிஞ்ச வேளை சரியில்லை போல இருக்குடி.. எப்பவுமே இவன் நேரடியா அவர் கிட்ட மாட்ட மாட்டாண்டி.. அவர் அந்தப் பக்கம் வந்தா இந்தப்பக்கம் ஓடிருவான்.. நேத்து மட்டும் எப்படி மாட்டினான்..? தூரத்திலேயே அவரப் பார்த்திருந்தா தப்பியிருப்பானே.."
சிங்கத்திடம் மாட்டி விட்ட சுண்டெலியைப் பற்றிய விசாரிப்பைப்போல மிக பரிதாபமாக விசாரித்தாள் சங்கீதா.. அவன் தன்னை அசகாய சூரன் என்று சொல்லிக் கொண்டானே என்றாள் மிருதுளா.. சூரத்தனத்துக்கும் அவனுக்கும் ரொம்பத்துரம் என்றாள் சங்கீதா.. அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நடேசன் அந்தப் பக்கம் போக.. அவனை அழைத்து குணசீலனின் உடல்.. மன.. நிலவரம் குறித்து துக்கம் விசாரித்தாள் சங்கீதா..
"அந்தாளுக்கு நேரமே சரியில்லைம்மா.." என்று சங்கீதா சொன்னதையே சொல்லி அவளின் ஆருடத்தை ஊர்ஜிதம் செய்தான் நடேசன்..
"நான் சொல்லலை..?" பெருமையாக தோழியின் முகத்தைப் பார்த்துக் கொண்டாள் சங்கீதா.
"ஏம்மா.. எப்பவுமே இந்தாளை மாதிரி ஆளுகளுக்கும் டெர்ரருக்கும் ஏழாம் பொருத்தமாத்தான்ம்மா இருக்கும்.. இந்த ஆளு கண்ணில சிக்கினாலே டெர்ரரு விட்டு விளாசிட்டுத்தான் வேற வேலை பார்ப்பாரு.. இது தெரிஞ்ச மனுசன் பதுங்கித் தப்பிச்சிருக்க வேணாமோ...? இப்படியா பக்கத்தில போய் மாட்டித் தொலைப்பாரு..?"
"நம்ம மிருதுளாகிட்ட கடலை போட்டுக்கிட்டே போயிருக்காரு நடேசா.. எதுத்தாப்புல டெர்ரரு முறைச்சுக் கிட்டே வர்றதை இந்தாளுபாக்கலை.. கிட்டக்கப் போன பின்னாலே பதுங்கினா என்ன.. பதுங்காட்டித்தான் என்ன..? கண்ணில பட்ட்வனை கிழி.. கிழின்னு கிழிச்சுத் தோரணமா தொங்க விடலைன்னா நம்ம டெர்ரர் எப்படி சிங்கமா ஆவாரு..?"
"என்னது...?"
நடேசன் கடுப்பாகி விட்டான்.. புதிதாக வந்திருக்கும் மிருதுளா டீச்சரிடம் குணசீலன் கடலை போட முயன்றதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..
அந்தப் பள்ளியிலேயே அவனை 'நடேசன் சார்' என்று மரியாதையுடன் அழைத்து வாங்க.. போங்க.. என்று பேசுவது மிருதுளா மட்டும்தான்.. சங்கீதாவோ.. வா.. போ என்றுதான் பேசுவாள்..
அப்படிப்பட்ட தேவதைப் பெண்ணான மிருதுளாவிடம் குணசீலனைப் போன்ற கடைந்தெடுத்த குணக்குன்று கடலை போடுவதா..?
"அந்தாளுக்கு வேணும்மா..?" என்று சொல்லி விட்டான் அவன்..
"ஏன் நடேசா..?" சங்கீதா அவன் வாயைக் கிண்டினாள்..
"பாடம் சொல்லிக் கொடுக்கிற வேலையைத் தவிர மத்த எல்லாத்தையும் செய்கிற ஒரே மனுசன் அவருதான்.. நம் ஏ.ஹெச். எம் கூட ஒழுங்காப் பாடம் சொல்லித் தந்திடறாரு.. இந்த ஆளு அதையும் செய்கிறதில்ல.. இவரை ஏறக் கட்டனும்னு ரொம்ப நாளா டெர்ரர் காத்துக்கிட்டு இருக்கிறதா சொல்லிக்கிறாங்க..."
"நீ சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.. உனக்குத் தெரிஞ்சது அந்தாளுக்குத் தெரியாம இருக்குமா..?"
"ஏன் தெரியாது..? மாட்டிக்கிராதேய்யான்னு ஏ.ஹெச்.எம் கூப்பிட்டுச் சொல்லி வைச்சிருக்காராம்.. அதனாலதான் இந்த ஆளு டெர்ரர் வந்துட்டாலே பதுங்கு குழியைத் தேட ஆரம்பிச்சிருவாரு.."
"அப்படிப் போடு.. கதை இப்படிப் போகுதா..?"
"நேத்து வாங்கியிருக்கிற மண்டகப்படியைப் பாத்தா இதுக்கு மேலேயும் போகும் போல இருக்கே.."
"இப்படியா நடேசா.. சிங்கத்தோட வாயில இந்த ஆளு தானாத் தலையைக் கொடுப்பான்..?"
"கொழுப்பும்மா.."
நடேசன் கடுப்புடன் போய் விட்டான்.. சங்கீதா குணசீலனை நினைத்து நினைத்துச் சிரித்தாள்..
"ஆக்சுவலா டெர்ரர் இந்த ஸ்கூல் பக்கமே வரமாட்டார்.. இவன் அந்த தைரியத்திலதான் உன்கிட்ட கடலை வறுக்க வந்திருப்பான்.."
"நேத்து எதுவும் முக்கிய வேலை இருந்திருக்குமோ..?"
"இவனுக்கெல்லாம் என்னடி முக்கிய வேலை இருக்கப் போகுது..?"
"நான் சுண்டெலியைச் சொல்லலைடி.."
"டெர்ரரைச் சொல்றியா..? இருக்கும்.. இருக்கும்.. யாருக்கு அது தெரியும்..? டெர்ரரே ஒரு இரும்புக் கை மாயாவி.."
"அப்படிங்கறே..?"
"ஆமாண்டி.. அவர் சம்பந்தப்பட்ட அத்தனையும் இரும்புத் திரைக்குப் பின்னாலே இருக்கிறதைப் போலத்தான் இருக்கும்.. ஒரு விவரத்தையும் யாரும் கண்டு பிடிச்சிர முடியாது.. எஃகு மனுசன்ல்ல.."
ஆக மொத்தம் அவன் சராசரியான மனிதனல்ல என்று நினைத்துக் கொண்டாள் மிருதுளா.. எந்த சராசரி மனிதன் இருள் சூழ்ந்த பால்கனியில் நட்சத்திரங்களற்ற வானின் கருமையை வெறித்துப் பார்த்தபடி..
'நீ உனக்காக உருவாக்கும் நியாயம்..
                அது அநியாயம் ஆனாலும் ஆகும்..'
என்று பாடிக் கொண்டிருப்பான்..?
"அதுதான் தெரியுமே.." யோசனையுடன் சொன்னாள் அவள்..
"எது தெரியும்டி.." சங்கீதா கேட்டாள்..
"டெர்ரர் சராசரி மனுசனில்லங்கிறது.."
"அவரைச் சொல்றியா..? கங்கு கரையில்லாத சொத்து.. இந்த வட்டாரத்திலேயே பெரிய கோடிஸ்வரன்.. அப்படித்தான் இருப்பார்.. இது ஒரு பெரிய விசயமா..?"
ஆமாம் என்று நினைத்துக் கொண்டாள் மிருதுளா.. அது பெரிய விவரம்தான்.. கங்கு கரையில்லாத சொத்துக்களை உடையவன் நிம்மதியான மனத்துடன் இல்லை.. அந்த வட்டாரத்திலேயே பெரிய கோடிஸ்வரனால் நினைத்தவுடன் உறங்க முடியவில்லை.. என்றால் அது பெரிய விவரமில்லையா..?
ஏனோ தெரியவில்லை.. 'டெர்ரர்' என்று அழைக்கப் படும் அவனின் மறுபக்கம் என்னவாக இருக்கக் கூடும் என்று அறிந்து கொள்ள அவள் மனம் துடித்தது.. அதில் புதைந்திருப்பது என்ன..? ஏன் அவன்
'எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்..?
                எந்தக் குற்றங்கள் எதனாலே தீறும்..'
என்று பாடிக் கொண்டிருக்கிறான்..?
"டெர்ரர் சிரிச்சு யாரும் பார்த்ததில்ல.. எப்பவும் முசுட்டு முகம்தான்.. இவரோட குணத்துக்கு ஏ.ஹெச்.எம் முக்கும் அவருக்கும் தான் செட் ஆகியிருக்கனும்.. அதை விட்டுட்டு எப்படி புன்னகை மன்னனான ஹெச்.எம் கூட இவர் செட்டானார்ன்னுதான் யாருக்கும் புரியல.." என்றாள் சங்கீதா..
"புன்னகை மன்னனா..? நம்ம ஹெச்.எம்மா..? ஹைய்யோ..! நானும் அதைப் போலத்தான் நினைச்சேன் சங்கீதா.." வியப்புடன் சொன்னாள் மிருதுளா..
ஒரே அலைவரிசையில் அவர்களின் எண்ணக்-கீற்றுக்கள் செல்வதை உணர்ந்து கொண்டவர்களாக தோழிகள் இருவரும் புரிதலுடன் சிரித்துக் கொண்டார்கள்..
மிருதுளாவுக்கு சந்தோசமாக இருந்தது.. தூத்துக்குடிக்கு வேலை பார்க்க என்று வரும்போது அங்கே அவளைப் போன்ற எண்ண அலை வரிசை கொண்ட சிநேகிதி அவளுக்காக காத்திருப்பாள் என்று அவள் நினைத்தும் பார்த்ததில்லை.. இது ஒரு வரம்.. அருமையான சிநேகிதம் இலக்கியம் தரும் போதையைப் போன்றது.. சிநேகிப்பவர்களுக்கே தெரியும் அந்த சிநேகிதத்தின் அருமை..!
"அவரோட வொய்ஃபை நீ பார்த்திருக்கியா சங்கீதா..?"
மனம் வலித்தாலும் அந்தக் கேள்வியைக் கேட்காமலிருக்க அவளால் முடியவில்லை.. அதை வேறு யாரிடமும் அவளால் கேட்டு விட முடியாது.. இவளுக்கு எதற்காக இந்த அக்கறை என்று அவர்கள் யோசிக்க ஆரம்பித்து விடக் கூடும்..
"ம்ம்ம்.. ஒரு தடவை பார்த்திருக்கிறேன் மிருதுளா.. மூணு வருசங்களுக்கு முன்னாலே அவர் வீட்டில் ஒரு பார்ட்டி கொடுத்தார்.. அவரோட குழந்தை வைசாலி இருக்காள்ல.."
"ஆமாம்.. அவளுக்கென்னடி..?"
"அவளுக்கு அப்பத்தான் ஒரு வயதாகியிருந்தது.. குழந்தையோட முதல் வயது பெர்த்டே பார்ட்டிக்கு ஸ்கூலில் இருந்த எல்லோரையும் இன்வைட் பண்ணியிருந்தார்.. அப்பத்தான் நான் வேலைக்குச் சேர்ந்திருந்த புதிது.. ஸ்கூலில் வேன் அரேன்ஜ் பண்ணியிருந்தாங்க.. மத்தவங்க கூடத்தானேப் போகிறோம்ன்னு நானும் போயிருந்தேன்.. அங்கே தான் டெர்ரரோட வொஸ்ஃபைப் பார்த்தேன்.." அசுவராஸ்யமாகச் சொன்னாள் சங்கீதா..
ஏன் இப்படிப் பிடித்தமில்லாமல் பேசுகிறாள் என்ற யோசனை மிருதுளாவுக்குள் வந்தது.. ஏற்கனெவே ஒரு முறை மிருதுளா வேலையில் சேர்ந்த முதல் நாளின் போது விக்ரமின் பெற்றோர்களின் மரணத்திற்கு அவனுடைய காதல் திருமணமும் ஒருவகையில் காரணம் என்ற ரீதியில் சங்கீதா பேசியது அவள் நினைவுக்கு வந்ததுழூ.
"உனக்கு அவங்களைப் பிடிக்காதா..?" அக்கறையில்லாதவளைப் போல இயல்பான தொனியில் கேட்பதற்கு அரும்பாடுபட்டாள் மிருதுளா..
"எனக்குப் பிடித்தா என்ன..? பிடிக்காட்டி என்ன..? அவங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு..? ஸ்கூல் கரெஸ்ஸோட வீட்டுப் பார்ட்டி.. அட்டெண்ட் பண்ணப் போனேன்.. மொக்கிட்டு வந்தேன்.. அதுக்கு மேலே ஒன்னுமில்ல.."
"இல்லடி.. இப்பேற்பட்ட டெர்ரரையே மயங்க வைச்சிருந்தா அவங்க எப்பேற்பட்ட அழகியாயிருக்கனும்..?"
இப்படிச் சொன்ன மிருதுளாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள் சங்கீதா.. தோழியின் துளைக்கும் பார்வை மனதை ஊடுறுவி விடுமோ என்று பயந்து போனவளாக பதைக்கும் மனதோடு தரையை பார்த்தாள் மிருதுளா..
"ஆக்சுவலா மிருதுளா.. டெர்ரரப் போல ஆளு இருக்கிற வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குக் கூட யாரும் குடிபோக மாட்டாங்க.. இவனிடம் கடி வாங்கனுமான்னு ஒதுங்கியே இருப்பாங்க.. இத்தனை வருசமா இங்கே வேலை செய்கிறவங்க எல்லாம் அவர் வரப்போறார்ன்னு தெரிஞ்சா லீவைப் போட்டுட்டு ஓடிருவாங்க.. வந்திருக்கிறார்ன்னு தெரிஞ்சா ஒளிஞ்சிக்கிறதுன்னு இடம் தேடுவாங்க.. மத்தவங்களை விடு.. நான் இங்கே வேலையில சேர்ந்து மூணு வருசமாகுது.. இத்தனை வருசத்திலே அவரை நேருக்கு நேரா நான் ஒரு தடவை கூடப் பார்த்ததில்லை.. அது உனக்குத் தெரியுமா..?"
"பார்ட்டிக்கு போயிருக்கயே..."
"அது கூட்டத்தோட கோவிந்தா கேஸ் மிருதுளா.. அப்ப அவரோட அப்பாம்மா உயிரோட இருந்தாங்க.. அவங்க முன்னாலே டெர்ரர் அடக்கித்தான் வாசிப்பாராம்.. அந்த தைரியத்திலேதான் ஸ்கூலே அங்கே போனது.."
"அதுக்குப் பின்னாலே நடந்த பார்ட்டிகளுக்கு போகலையா..?"
"அதுக்குப் பின்னாலேதான் பார்ட்டியே நடக்கலையே.."
"என்னது..?!"
மிருதுளா ஆச்சரியப்பட்டுப் போனாள்.. அவ்வளவு பெரிய கோடிஸ்வரன்.. இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன்.. மூன்று வருடங்களாக பிள்ளைகளின் பிறந்த நாளைக் கொண்டாடியதே இல்லையா..?
"அது எனக்குத் தெரியாது.. பட் பெர்த்தே பார்ட்டின்னு எதையும் கொடுத்ததில்லை.. அது மட்டும் எனக்குத் தெரியும்..." என்றாள் சங்கீதா..
"டெர்டரோட மிஸஸ் ஏதும் சொல்லலையா..?"
"மகராசி.. மூணாறுக்குப் போகனும்னு ஹஸ்பெண்ட்.. குழந்தைகளோட சம்மர் வெகேசனுக்குப் போயிருக்கா.. போன இடத்தில தடுக்கி விழுந்து மலைப் பள்ளத்தாக்கிலே உருண்டு செத்துட்டாளாம்.."
"ஓ.. அதனாலேதான் டெர்ரர் மனசு வெறுத்துப் போய் எந்த பார்ட்டியையும் செலபரேட் பண்றதில்லையா..?"
"டெர்ரருக்கு மனசு வெறுத்துப் போச்சா.. இல்லையான்னு எனக்குத் தெரியாது.. அந்த மகராசி போனதினால மனசு வெறுத்துப் போகலை.. அது மட்டும் எனக்குத் தெரியும்.."
"என்னடி இது.. காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட வொய்ஃப் கண் முன்னாலே மலையுச்சியிலேயிருந்து தடுக்கி விழுந்து செத்துப் போயிட்டான்னா எந்த மனுசனுக்கும் மனசு வெறுத்துப் போகாதா.. அது டெர்ரரா இருந்தாக்கூட அப்படித்தான் ஆகும்டி.. எப்படி டீ அவங்க கால்தடுக்கி உருண்டாங்க..?"
"அவளா விழுந்தாளோ.. இல்லை.. டெர்ரர்தான் தள்ளி விட்டாரோ.. யாருக்குடி அது தெரியும்..?"
"சங்கீதா.."
"ஜஸ்ட் எ ஜோக்.."
சங்கீதா கண்சிமிட்டினாள்... மிருதுளாவினால் இரண்டு நிமிடங்களுக்கு எதுவும் பேச முடியவில்லை.. மிரண்ட பார்வையுடன் அமர்ந்து விட்டாள்.. அவளைத் தண்ணிரைக் குடிக்க வைத்து தேற்றி தந்நிலைக்கு கொண்டுவர சங்கீதா பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.. ஒருவழியாக தண்ணுணர்விற்கு வந்த மிருதுளாவை அவள் ஆழமாகப் பார்த்தாள்..
"இந்த அளவுக்கு பூஞ்சை மனசை வைத்துக்கிட்டு எந்தத் தைரியத்திலேடி நீ டெர்ரரோட பங்களாவுக்குப் பக்கத்திலே குடிபோன..? அவர் பெயரைக் கேட்டாலே எல்லோரும் ஹாஸ்பிடலில் போய் அட்மிட் ஆகிடறாங்க.. நீ என்னடான்னா பயமேயில்லாம அவர் பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்க அவர் வீட்டுக்குள்ளேயே போய் வர்ற.. பயமாயில்லையா..?"
இல்லை என்பதை எப்படி இவளிடம் சொல்வது என்று யோசித்தாள் மிருதுளா.. அவனைப் பார்க்க அவளுக்கு பயமாயில்லை.. ஆசையாக இருக்கிறது என்று சொன்னால் அதை இவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற நினைவில் அவள் மௌனித்து விட்டாள்..
"வேலைக்கு என்னடி..? படிச்சிருக்க.. நல்ல மார்க் வாங்கியிருக்க.. எஃபிஸியண்ட் டீச்சர் வேற.. உன் திறமைக்கு உனக்கு எங்கே வேனும்னாலும் வேலை கிடைக்குமே மிருதுளா.. வேலை நிலைக்கனும்னா டெர்ரர் வீட்டு டியூசனில மாட்டியிருக்க..?"
'இல்லை சங்கீதா..' மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் மிருதுளா..
'வேலைக்காக அவன் வீட்டு டியூசனுக்குப் போகலை.. அவன் முகத்தைப் பார்க்கனும்கிறதுக்காக அவன் வீட்டு டியூசனுக்குப் போறேன்.. என் வேலை நிலைக்கனும்னு இந்த டியூசனை நான் ஒப்புக்கலை... அவனுக்காகத்தான் இந்த வேலையையே நான் ஒப்புக்கிட்டேன்..'
மௌனமாக இருந்த மிருதுளாவை அனுதாபத்துடன் பார்த்தாள் சங்கீதா.. அவள் விழிகளில் எதுவோ இருந்தது.. அது காருண்யமா.. பரிதாபமா.. இரக்கமா.. என்று கணித்துச் சொல்ல மிருதுளாவினால் முடியவில்லை.. மூன்றுக்கும் ஒரே பொருள்தான் என்றாலும்.. மூன்று வார்த்தைகளும் பொருந்தும் இடம்.. பொருள்.. ஏவல்.. நூலிலையில் வித்தியாசப் படுபவை.. அந்த மூன்றும் கலந்த கலவையாக சங்கீதாவின் பார்வை இருந்தது..

"நீ டெர்ரர் வீட்டுத் தோட்டத்திலே குடியிருக்கிறதினால இதைச் சொல்றேன்.. மூணாறில டெர்ரரோட வொய்ப் இறந்து போன கொஞ்ச நாளிலேயே டெர்ரரோட அப்பாவும்.. அம்மாவும் அடுத்தடுத்து இறந்து போயிட்டாங்க.. டெர்ரரோட பிள்ளைகள் சிரிப்பை மறந்துட்டாங்க.. 'தீ' அழகாயிருக்கும் மிருதுளா.. தொட்டுப் பார்க்க நினைச்சா.. எரிச்சுரும்.."


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -16
இது நீரோடு செல்கின்ற ஓடம் -16
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy