இது நீரோடு செல்கின்ற ஓடம் -15

15 என்னதான் பிரயத்தனங்களை  மேற்கொண்டாலும்.. என்மனதை விட்டு உன்னை  அகற்ற முடியவில்லை.. எப்படி அவன் பிள்ளைகளை அவள் வீட்டுக்கு ...

15
என்னதான் பிரயத்தனங்களை 
மேற்கொண்டாலும்..
என்மனதை விட்டு உன்னை 
அகற்ற முடியவில்லை..


எப்படி அவன் பிள்ளைகளை அவள் வீட்டுக்கு அவள் அழைத்துப் போகலாம்..?
கோப நடையுடன் அவன் அவளது வருகைக்காக காத்திருந்தான்.. சாந்தா கிளம்பினாள்.. அவன் பார்வையில்..
"டீச்சரம்மா வீட்டுக்குப் போகிறேன்ங்கய்யா.." என்று விளக்கம் சொன்னாள்..
'ஏன்.. மகாராணி இங்கே வரமாட்டாளா..?'
அவன் பார்வையின் பொருள் புரிந்தவளாக..
"அந்தம்மாவோட அப்பாதான் சொன்னாருங்கய்யா.. ராத்திரி நேரத்தில வயசுப் பொண்ணை அடுத்தவங்க வீட்டுக்கு எப்படி அனுப்பறதுன்னு கேட்டாருங்கய்யா.. பிள்ளைகளைக் கொண்டு வந்து விட்டுட்டு கூப்பிட்டுக்-கிட்டு போன்னு சொன்னாருங்கய்யா.." என்ற தொடர்ந்த விளக்கத்தைக் கொடுத்தாள் சாந்தா..
'ஓ...! ராத்திரி நேரத்தில இந்தாளோட மக என் வீட்டுக்கு வந்தா நான் சூறையாடிருவேனில்ல...'
அவனால் அன்று இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை.. விடிந்தவுடன் அவளைப் பார்த்து நான்கு வார்த்தை கேட்டு விடவேண்டும் என்பதற்காகவே தோட்டத்துக்குப் போனான்.. அங்கே அவள் இல்லை..
'தப்பிக்கப் பார்க்கிறாளா..?'
அவள் வராவிட்டால் அன்று பள்ளிக்குச் சென்று விடுவது என்று தீர்மானித்தான் விக்ரம்.. அந்த தீர்மானத்தை மட்டும் அவன் நிறைவேற்றியிருந்தால் பள்ளியின் ஆசிரியர்களும்.. ஊழியர்களும் அலறிக்கொண்டு ஒட்டு மொத்தமாக விடுப்புக் கடிதத்தைக் கொடுத்திருப்பார்கள்.. அதற்குக் காரணமான மிருதுளாவையும் ஒருவழி பண்ணியிருப்பார்கள்.. அந்த அளவுக்கு கொலை வெறியுடன் அவன் இருந்தான்..
அப்படி ஏதும் நேர்ந்து விடாமல் அவர்களை ரட்சிக்க வந்த தேவதையாக மிருதுளா தோட்டத்துப் பக்கமாக வந்து விட்டாள்.. இயல்பாக பூச்செடியின் பூக்களைப் பறித்தபடி வந்தவளை வெட்டவா கொல்லவா என்று பார்த்து வைத்தான் விக்ரம்.. அவனைக் கண்டதும் திரும்பிப் போய்விடலாமா என்ற அவசர யோசனை அவள் விழிகளில் ஓடியதைப் படித்து விட்டவன்..
"என் வீட்டில் இருந்துக்கிட்டே என்கூட கண்ணாமூச்சி ரே.. ரே..ன்னு விளையாடறியா..?" என்று உறுமினான்..
"ஆமாம் சார்.. உங்களுக்கு வயது திரும்பிருச்சு.. நீங்க சின்னபப்பா.. உங்ககூட கண்ணாமூச்சி ரே.. ரே..ன்னு கண்ணைப் பொத்தி விளையாடப் போறேன்.. ஏன்
சார் உங்க குழந்தைகள்கூட விளையாட வேண்டிய விளையாட்டை உங்ககூட விளையாடனும்னு சொல்கிறிங்க..?"
வழக்கப்படி அவன் முகம் பார்க்காமல் செடியிலிருந்த பூவைக் கிள்ளி முகர்ந்தபடி பதில் சொன்னாள் மிருதுளா..
"எந்த கட்டு திட்டத்துக்கும் அடங்கக் கூடாதுங்கிற முடிவோட இருக்கியா..? உன் இஷ்டப்படிதான் இருப்பியா..?" எரிந்து விழுந்தான் அவன்..
"நீங்க என்ன கட்டுதிட்டம் போட்டீங்க..? எதை நான் மீறினேன்..?" திரும்பவும் ஒரு பூவைக் கிள்ளினாள் மிருதுளா..
"பூக்களைப் பறிக்காதேங்கிற வார்த்தைகளை உன் வாழ்க்கையில நீ கேட்டதே இல்லையா..?"
"இல்லை.."
"பதில் சொல்லனும்கிறதில சொல்றயா..?"
"நிஜமாவே இல்லைங்கிறதுதான் என்னோட பதில்.. நான் பிறந்து வளர்ந்த சென்னையில தொட்டியிலதான் ரோஜாச் செடியை வளர்க்க முடியும்.. அதை வைக்கக்
கூட எங்க வீட்டில இடம் கிடையாது.. இருக்கிற இடத்தையெல்லாம் வீடெடுத்து கட்டிட்டாரு எங்கப்பா.. அப்பத்தான் ரெண்டு போர்சனா கட்ட முடியும்.. ஒரு போர்சனோட வாடகையும் கிடைக்கும்.. நாங்க குடியிருக்கிற வீட்டுக்கு வாடகையும் மிச்சமாகும்ங்கிறது அவரோட கணக்கு.. பேங்க் லோனைக் கட்ட எங்களுக்கு வேற வழி தெரியலை.. அப்படியிருக்கிறப்ப பூந்தோட்டத்துக்கு நாங்க எங்கே போகிறது..?"
"இதனால நீ சொல்ல வருவது எதுவோ.."
"நான் பூந்தோட்டத்தையே பார்த்ததில்லைங்கிறப்ப பூக்களைப் பறிக்காதேங்கிற வார்தைகளை எப்படிக் கேட்டிருக்க முடியும்..?"
"நீ அப்படி வர்றியா..?"
'எப்படி வந்தாலும் நீ விடவா போற..?'
மிருதுளா நினைத்ததுதான் நடந்தது..
"ஏன்.. உன் காலேஜில் பூச்செடியே இல்லையா..? வறண்ட பாலை வனத்திலேயே உன் காலேஜ் இருந்துச்சு..?" அவன் குத்தலாகக் கேட்டான்..
"இல்லையே.. சிங்காரச் சென்னையில் தான் என் காலேஜ் இருக்குது.. அங்கே பூச்செடியும் இருக்கும்.. மரமும் இருக்கும்.. பூங்கா மாதிரி குளுகுளுன்னுதான் இருக்கும்.. அதுக்கு இப்ப என்னாங்கறிங்க..? அந்த காலேஜை விலைக்கு வாங்கப் போறிங்களா..?"
"அதுக்கு எதுக்கு வேலை மெனக்கெட்டு சென்னைக்குப் போகனும்..? நான் காலேஜ் ஆரம்பிக்கனும்னா தூத்துக்குடியிலேயே மூலைக்கு மூலை காலேஜ் ஆரம்பிப்பேனே.. எனக்கெதுக்கு அந்த வேலை..? இருக்கிற பிஸினெஸ்ஸை பார்க்கவே நேரம் பத்தலை..."
"அப்புறம் எதுக்காக என் காலேஜ் பக்கம் உங்க கடைக்கண் பார்வையைத் திருப்பினீங்க.."
"அதை விலைக்கு வாங்கத் திருப்பலை.. அங்கேயிருக்கிற பூச்செடிகளை நீ இப்படித்தான் பிடுங்கி எறிவயா..?"
"ஏன் சார் அபாண்டமா பேசறிங்க.. ஒரு பூவைக் கிள்ளினதுக்கா இப்பேற்பட்ட குற்றச்சாட்டு..? விளங்கிரும் போங்க.. எங்க காலேஜில மரத்தையே பிடுங்கிப் போட்டாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.. இதில பூக்களைப் பறிக்காதேங்கிற வார்த்தைகளை எதுக்காக சொல்லப் போறாங்க..?"
"ரௌடி காலேஜா..?"
அவன் மட்டம் தட்டிப் பேச அவளுக்கு கோபம் வந்து விட்டது.. அது எப்படி அவன் அவள் காலேஜை மட்டம் தட்டிப் பேசலாம்..? அவளைப் பேசினால் அவள் கேட்டுக் கொள்வாள்.. அவள் படித்த காலேஜைப் பேசினால் எப்படிக் கேட்டுக் கொள்வாள்..?
"அது நீங்க படித்த காலேஜா இருக்கும் சார்.. எங்க காலேஜ் சாத்வீகமான காலேஜ்.." என்று சொல்லி விட்டாள்.
அவன் முகம் மாறியது.. உதட்டைக் கடித்தபடி அவளை உறுத்துப் பார்த்தான்.. அவள் என்னடா இது.. எனக்கு வந்த சோதனையென்று வேறுதிக்கில் பார்த்தாள்..
"ஏன் என் பிள்ளைகளை உன் வீட்டுக்கு கடத்திக்-கிட்டுப் போன..?"
அவன் கேள்வியில் கலவரமானவள் சுற்று முற்றும் பார்த்தாள்..
"யார் காதிலேயாவது விழுந்து வைச்சிரப் போகுது சார்.. அப்புறம் அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க..?"
"என்ன நினைப்பாங்க..?"
"பிள்ளை பிடிக்கிறவன்னு நினைச்சிர மாட்டாங்களா..?"
"உங்கப்பா மட்டும் உன்னை 'ரேப்' பண்ணக் காத்திருக்கிற வில்லனைப் போல என்னை நினைக்கலாமா..?"
"என்னது..? ? ?..."
அவள் அரண்டே போனாள்.. தெளிவோடுதான் பேசுகிறானா என்று அவன் முகம் பார்த்தாள்.. போதை மயக்கம் எதுவும் தென்படவில்லை.. அவளது ஆராயும் பார்வையை அவன் கண்டு கொண்டு விட்டு..
"குடிச்சிருக்கேனான்னு பாக்கறியா..?" என்று கேட்டு வைத்தான்..
'ஆமாம் என்று பதில் சொன்னால் இவன் என்னத்தைக் கிழித்து விடுவான்..?' அவள் கோபத்துடன் மௌனமானாள்..
"உன் அப்பா என்னை வில்லனாக்குறார்.. நீ குடிகாரனாக்கற.. அப்பாவும் பெண்ணும் ஒரு முடிவோட தான் என் வீட்டு காம்பவுண்டுக்குள்ள கால் வைச்சிருக்கீங்க.."
"உங்களுக்கு என்னதான் வேணும் சார்..?"
"நிச்சயமா நீ வேணாம்.. இதை உன் அப்பாவின் காதில் போட்டு வை.. என்னவோ என் பிள்ளைகளை விட்டுப்போக நீ என் வீட்டுக்கு வந்தால் உன் கையைப் பிடித்து நான் இழுத்து விடுவேன்னு கனவு காண்கிற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம்.."
"தேவைதான் சார் எனக்கு.. இப்ப எதுக்காக இந்த வில்லங்கப் பேச்சையெல்லாம் பேசிக்கிட்டு வர்றீங்க.."
"என் வீட்டுக்கு வந்துதான் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கனும்.. அதை விட்டுட்டு அவங்களை உங்க வீட்டுக்கு வரவைச்சிருக்கீங்க.. அதுவும் சாந்தா பிள்ளைகளைக் கொண்டு வந்து விட்டுட்டு கூப்பிட்டுக் கிட்டுப் போகனும்னு சொல்லியிருக்கீங்க..? வாட் இஸ் திஸ்..?"
"இது ஒரு தகப்பனாரோட கவலை சார்.. இப்ப வைசாலி குழந்தை..! நாளைக்கு அவ வளர்ந்துடுவா.. அப்பப் புரியும் உங்களுக்கு பெண்ணைப் பெத்தவரோட கவலை எப்படியிருக்கும்ன்னு.."
"பயமுறுத்தறியா..?"
"ஊஹீம்.. நீங்களும் ஒரு மகளுக்கு அப்பா..! இதை நினைவு படுத்தறேன்.. நைட் டைமில மட்டும்தான் சார் அப்பா அப்படியொரு கண்டிசனைப் போட்டிருக்கார்..? காலையில போடலையே.. மார்னிங் டயத்திலே நான் உங்க வீட்டுக்கு வந்து டியூசன் சொல்லித்தர்றதில அவருக்கு எந்தவித அப்ஜெக்சனும் இல்லை சார்.."
ஏனோ அவளின் வாதத்துக்கு எதிர்வாதம் புரிய அவனால் முடியவில்லை.. அவள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதை அவன் உணர்ந்தான்.. கோபத்தில் சிவந்து விட்டிருந்த அவள் முகத்தைப் பார்த்தான்.. அவன் முகத்தைப் பார்க்காமல் வேறு திக்கில் பார்த்துக் கொண்டிருந்தவளின் கோபத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது..
'ரேப்.. அது.. இதுன்னு பேசினது அதிகப்படியோ..' குற்ற உணர்வுடன்..
"ஸாரி.." என்றான்..
"ஸாரி சொல்லிட்டா சரியாப் போச்சா..?" அவள் நறுக்கென்று கேட்டாள்..
"வேற என்ன செய்யனும்கிற..?"
"அவசரப்பட்டு வார்த்தையை விடக்கூடாது சார்.. பூக்களைப் பறிக்காதேன்னு வியாக்கினம் மட்டும் சொல்லத் தெரியுது.. இது தெரியாதா..?"
"என்னமோ தெரியலை.. விடேன்.."
"குட் ஜோக்.. இவ்வளவு பெரிய பிஸினெஸ் மேன்.. உங்களுக்கு இந்த வார்த்தையை பேசக் கூடாதுன்னு தெரியலையா..? ஐ கான்ட் பிலிவ் திஸ்.."
"வேணும்னு யாராவது பேசுவாங்களா..?"
"நீங்க பேசுவீங்க சார்.. உங்களுக்குத்தான் கோபம் வந்துட்டா தலை கால் தெரியாதே.. எதிராளியை ஒரு வழிபண்ணியாகனுமே.."
"நீ எனக்கு எதிராளியா..?"
"பின்னே இல்லையா..?"
அவள் கோபத்துடன் போய் விட்டாள்.. அவள் போனதிக்கையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு என்ன வகையான பெண் இவள் என்ற வியப்பு ஏற்பட்டது.. ஏனோ அவளின் கோபம் அவனை பாதித்தது..
அவனுடைய பள்ளியிலும்.. கம்பெனிகளிலும் அவனைக் கண்டாலே அலறுவார்கள்.. அவனை எதிரே பார்க்க நேர்ந்து விட்டால் பூமிக்குள் ஒளிய இடமிருக்கிறதா என்று தேடுவார்கள்.. அவனது கோபத்திற்கு ஆளாகி விட்டதாக தெரிந்து விட்டாலோ சுனாமி வந்தாலும் அதில் ஏறி ஓடி விடுவார்கள்.. அவனைப்பற்றி கேள்விப் பட்டு விட்டால் அவர்களுக்கு குளிர்ஜூரம் வந்துவிடும்..
அந்த அளவுக்கு அவன் கோபம் பிரசித்திபெற்றது..
இவளோ இந்த அளவுக்கு அவன் கோபப்பட்டும் எனக்கென்ன என்று அதை எதிர்கொண்டாள்.. அவள் செய்கைக்கான விளக்கத்தையும் கொடுத்து விட்டு.. அவனையே குற்ற உணர்வில் ஆழ்த்திவிட்டுப் போய் விட்டாள்..
'இவளுக்கு என்மேல பயமே இல்லையா..?'
அவன் இதழ்கள் சுழித்து வளைந்தன.. லேசான இளநகை அவன் இதழ்களில் படிந்தது.. அவனைக் கண்டால் அஞ்சி நோக்கும் விழிகளையே பார்த்துப் பழக்கப் பட்டிருந்தவனுக்கு.. அச்சமில்லாமல்.. அவன் முகத்தையும் பார்க்காமல்.. எங்கேயோ பார்த்தபடி 'டாண் டாண்..' என்று பதில் சொல்லும் அவளின் அந்த நேர் கொண்ட குணத்தைப் பிடித்திருந்தது..
'என் முகத்தைப் பார்த்துப் பேச மாட்டாளோ..'
வீட்டுக்குள் போனவன்.. கண்ணாடியின் முன்னால் நின்று தன் முகம் பூச்சாண்டியின் முகத்தைப் போல இருக்கிறதா என்று ஆராய்ந்தான்..
'நல்லாத்தானே இருக்கேன்..? அப்புறமும் ஏன் பார்க்க மாட்டேங்கிறா..?'
அன்று முழுவதும் இந்தக் கவலைதான் பெருங்கவலையாக இருந்தது அவனுக்கு.. அவனுடைய செகரட்டரி அவன் முகத்தைப் பருகு.. பருகென பார்த்து வைக்க.. என்றைக்கும் அவள் முகத்தை கல்லோ.. மண்ணோ என்று பார்த்து வைப்பவன்.. அன்று அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.. அதில் அவள் மகிழ்ந்து போய் விட்டாள்.. அவன் சிந்தையில் அவளின் மகிழ்வு பதிந்தது.. மற்ற பெண்களிடமும் அவன் அதையே தேட.. அவர்கள் முகம் சிவந்து போனார்கள்..
'இவங்கல்லாம் என் முகத்தைப் பார்க்கிறப்ப.. அவ மட்டும் ஏன் பார்க்க மாட்டேங்கிறா..?'
அவனுக்கு அது ஒரு சவாலாக இருந்தது.. ஒருவேளை அவளுடைய சுபாவமே அதுதானோ என்ற எண்ணக் கீற்றும் அவன் மனதில் ஓடியது.. அப்படியில்லை யென்பதை அன்று மாலை அவன் பள்ளிக்குப் போனபோது கண்டு கொண்டான்.. மிருதுளா குணசீலனின் முகம் பார்த்துப் பேசியபடி எதிரில் வந்தாள்..
'இவன் முகத்தை மட்டும் பார்ப்பாளா..?'
அவன் முகம் கடுத்துப் போனான்.. மிருதுளாவுடன் பேசும் மகிழ்வில் ஸ்டைலாக பேசுவதாக நினைத்துக் கொண்டு முகத்தில என்னென்னவோ பாவங்களைக் கொண்டு வந்து அஷ்ட கோணல் மன்னனாகிக் கொண்டிருந்தான் குணசீலன்.. அவனின் அந்த முகபாவத்தில் சிரிப்பு பொங்கி வர.. அதை அடக்கிக் கொள்ளப் படாதபாடு பட்டபடி லேசான குறுஞ்சிரிப்புடன் அவன் பேச்சுக்கு தலையை அசைத்துக் கொண்டிருந்தாள்.
'இவன் கிட்ட மட்டும் சிரிப்பாளா..? நான் இவளுக்கு எதிராளி.. இவன்..? சேக்காளியா..?'
விக்ரமின் கோபம் கரையுடைக்கலாமா என்று யோசித்தது.. அதையுணராத அப்பாவி குணசீலன்.. எதிரே கரெஸ்பாண்டென்ட் வந்து கொண்டிருப்பதை அறியாதவனாக.. அவனுடைய வீர தீரத்தைப் பற்றி கப்ஸா விட்டுக் கொண்டிருந்தான்.. உலகில் உள்ள அத்தனை போர்க்கலைகளும் அவனுக்கு பரிச்சயமானவை என்று அள்ளி விட்டான்.. அவனுடைய தயவை அவன் குடியிருக்கும் ஏரியாவின் தாதாக்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றெல்லாம் சணல் கயிரைத் திரித்தான்.. இந்த வேலை மூலமாக அவனுக்குக் கிடைப்பது உபரி வருமானம்தான் என்று கூசாமல் பொய் சொன்னான்.. அவன் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு அவனுக்கு சொத்து சுகம் இருக்கிறது என்று பந்தா காண்பித்தான்.. வான் பாதைக்கு ஏணி வைக்காமலே ஏறிவிடுவேன் என்று மட்டும்தான் அவன் சொல்லவில்லை.. அதற்குள் எதிரே வந்த விக்ரமைப் பார்த்துவிட்டான்.. அவ்வளவுதான்.. அவ்வளவு நேரமும் அளந்து விட்டுக் கொண்டிருந்த அவன் வாய்..
"பே.. பே.. க.. க.." என்று குழறியது..
எதற்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சனை அவன் எதைக் கண்டு அந்த நிலைக்கு ஆளானான் என்பதை அறிய வேண்டி திரும்பிப் பார்த்த மிருதுளாவின் கண்களில் விக்ரமைக் கண்டதும் மின்னல் வந்தத..

'டெர்ரரா..?' அவள் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் முகம் திருப்பி விரைந்து விட்டாள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -15
இது நீரோடு செல்கின்ற ஓடம் -15
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy