இது நீரோடு செல்கின்ற ஓடம் -13

13 ஒரு யுகத்துக்கு உண்டான அத்தனை காதலையும்.. உன்னிடம் மட்டும் கண்டேன் நான்..! காலையில் எழுந்தபோது மனம் புத்துணர்வுடன் இருந்தது.....

13
ஒரு யுகத்துக்கு உண்டான அத்தனை காதலையும்..
உன்னிடம் மட்டும் கண்டேன் நான்..!


காலையில் எழுந்தபோது மனம் புத்துணர்வுடன் இருந்தது.. அலம்பி விட்டதைப் போல பளபளப்புடன் இருந்தது அவள் மனசு..
"ம்மா.. காபி..."
சோம்பல் முறித்தபடி எழுந்தவள் குரல் கொடுத்தாள். குளியலறைக்குள் புகுந்தவள் பல் தேய்த்து முகம் கழுவி ஈரமுகத்தை டவலால் துடைத்தபடி.. உமாவைத் தேடிப் போனாள்..
சமையலறையில் காபி கலந்து கொண்டிருந்த உமா மகளைக் கண்டதும் மலர்ச்சியாக சிரித்தாள். அங்கு குடிவந்ததிலிருந்து அவள் அப்படித்தான் சிரிக்கிறாள் என்பதை நினைவு கூர்ந்தாள் மிருதுளா...
"நம்ம வீட்ட விட இந்தவீடு பெரிசாவும்.. வசதியாவும்.. அழகாவும் இருக்கு.." திருப்தியுடன் சொன்னபடி காபியை நீட்டினாள் உமா..
"சத்தமா சொல்லிராதீங்க.. அப்பா காதில விழுந்தா சண்டைக்கு வந்திருவார்.. ஆயிரம்தான் இருந்தாலும் அது அவர் கட்டின வீடு.. இது குவார்ட்டர்ஸா இருந்தாலும் ஊரான் கட்டின வீடுதானே.." காபியை உறிஞ்சியபடி சமையலறையின் மேடையில் தாவி அமர்ந்து கொண்டாள் மிருதுளா..
"அவர் மனசிலயும் இது இருக்கு.. அவர் பாக்கிற பார்வையிலேயே திருப்தி தெரியுது.. ஆனா அழுத்தக்கார மனுசன்.. வெளியில சொல்ல மாட்டார்.." கணவரின் அந்தத் தன்மையை ரசித்துச் சிரித்தாள் உமா..
"உங்களுக்குத்தான் பேச்சுத்துணைக்கு அக்கம் பக்கத்தில யாருமில்ல.." தாயைத் தனிமைப் படுத்தி விட்ட குற்ற உணர்வுடன் சொன்னாள் மிருதுளா..
"நீ வேற.. நேத்து அந்த வேலைக்காரப் பொண்ணு சாந்தா நம்ம வீட்டுக்கு வந்திருந்தா.. அவ ஒரு ஆளு இந்த ஊருக்கே சமானம்.. பேச வாயைத்திறந்தா அருவியா ஊர்க்கதை.. உலகக் கதைன்னு அத்தனையும் கொட்டுது.. அவகூட பேசிக்கிட்டே வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டேன்னா பாரேன்.. இவ இருக்கப்ப அக்கம் பக்கத்தில ஆளு தேவையா..?" தலையை ஆட்டித் தோள்களைக் குழுக்கினாள் உமா..
"அதைச் சொல்லுங்க.." மிருதுளா ஆமோதித்தாள்..
"இயற்கையான காத்து.. வீட்டுக்கு முன்னாலே தோட்டம்.. குப்பை கூளமில்லாத அழகான சூழ்நிலை.. நெருக்கடியில்லாத தனியான பெரிய வீடு.. இதெல்லாம் சென்னையில கிடைச்சிருக்குமா..? சொல்லு.."
"கிடைக்காதுதான்.."
"இத்தனைக்கும் மேலா.. அங்கே ரெண்டு போர்சனுக்கும் வாடகை வருது.. அப்பாவோட டெஸிக்னேசன் சூபர்வைசரா ஆகியிருக்கு.. சம்பளமும் மூணுமடங்கா கூடவருது.. இதைவிட சந்தோசம் இருக்க முடியுமா..? சொல்லு.."
"இருக்காதுதான்.."
மிருதுளாவுக்கு தாயின் மனநிறைவில் சந்தோசமாக இருந்தது.. அவளின் முடிவால் அவளுடைய குடும்பம் மேம்பட்ட நிலையைத்தான் அடைந்திருக்கிறது என்பதில் அவளுக்கும் மனநிறைவு ஏற்பட்டது..
"என் சம்பளத்தை விட்டுட்டிங்களேம்மா.." நினைவு படுத்தினாள்..
"அதைக் கணக்கில் எடுத்துக்கக் கூடாது கண்ணு.." உமா திரும்பி மகளின் கன்னம் தொட்டுக் கிள்ளி முத்தம் கொடுத்தாள்..
"உன் சம்பளம் உன்னோடது.. அதைத் தனியா சேர்த்துக்கிட்டு வருவோம்.. உன் கல்யாணத்தப்ப உன் கையில ஒப்படைச்சிருவோம்.. அதில எனக்கு உரிமையில்ல கண்ணம்மா.. எனக்கு உரிமையானது உன் அப்பாவின் சம்பளம் மட்டும்தான்.. என்னதான் நீ பெரிய டீச்சரா இருந்தாலும்.. உன் அப்பாவின் பெண்டாட்டின்னு சொல்லிக்கத்தானே எனக்குப் பிடிக்கும்..? அந்த வகையில டீச்சரம்மாவோட அம்மாங்கிறதவிட.. சூப்பர்வைசரின் பெண்டாட்டிங்கிறதில இருக்கிற பெருமையே தனி.. அதைச் சொல்லி புரிய வைக்க முடியாது.."
"கலக்கறிங்கம்மா.."
"சென்னையில உன் அப்பா கிளார்க்கா இருந்தாரு.. கம்மியான சம்பளம்.. உன் அப்பாவ விட திறமை கம்மியானவங்களுக்கெல்லாம் பிரமோசன் கிடைச்சு உன் அப்பாவுக்கு முன்னாலே போயிட்டாங்க.. இப்படி மனுசரையும் திறமையையும் மதிக்காத இடத்தில உங்க அப்பா வேலை செய்கிறாரேன்னு எனக்கு இருக்கும்.. இதுவே கவர்ண்மென்ட் வேலையா இருந்திருந்தா நம்ம புருசன் எங்கேயோ போயிருப்பாரேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும்.."
தன்போக்கில் காய்களை நறுக்கியபடி வெகு இயல்பாக பேசிக் கொண்டிருந்தாள் உமா.. காபித்தம்ளரை கொடுப்பதற்காக வந்த சபாபதி சமையலறை வாசலிலேயே நின்று விட்டார்.. திறந்து கொண்ட மனைவியின் மனக் கதவின் வெளியாக கொட்டிய அவள் உள்ளக் கிடக்கையில் அவர் மனம் கசிந்தது.. தன்னைவிட அரசு வேலை பார்க்கும் ஒருவரை மனைவி உயர்வாக எண்ணிவிட்டாளோ என்று அவர் மனதில் புகைந்து கொண்டிருந்த ரகசிய புகைச்சல் அடங்கி விட்டது.. மகளுடனான மனைவியின் சம்பாஷணையில் அவர் மனம் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கியது..
'என் உமா..' மனதிலிருந்த சந்தேக மேகம் விலகியவராக அவர் மனைவியை அலாதியான பிரியத்துடன் பார்த்தார்...
"இதோ.. அப்பாவே வந்துட்டாரு.."
அவரைப் பார்த்துவிட்ட மிருதுளா சமையலறை மேடையை விட்டுக் குதித்தபடி சொன்னாள்.. அடுப்பில் வாணலியை ஏற்றியபடியே திரும்பிப் பார்த்த உமாவின் விழிகளில் காதல் மின்னியது..
"என்னவாம் உன் அப்பாவுக்கு.. செகண்ட் டோஸ் காபி வேணுமாக்கும்..?" செல்லமாக நொடித்தாள்..
"ஆமாம்ன்னா அவ குடுக்க மாட்டாளாக்கும்..?" மனைவியின் பாசையிலேயே சபாபதியும் பதில்சொன்னார்..
"சூபர்வைசர் சார் மூணுமடங்கு சம்பளமா வாங்கப் போறத காபி குடிச்சே கரைக்கப் போறாரு.." உமாவின் வார்த்தைகளில் பெருமை தொனித்தது..
"அட.. சூபர்வைசர் பெண்டாட்டிக்குத்தான் பானையை யானையாக்கிற வித்தை தெரியுமே.. அப்புறமா எதுக்காக சூபர்வைசர் கவலைப்படப் போறான்..?" சபாபதியின் வார்த்தைகள் துள்ளளுடன் வெளிவந்தன..
கணவன் மனைவிக்கான அன்யோன்யம் பல பரிபாசைகளை உள்ளடக்கியது.. ஒரு பார்வையிலே ஓராயிரம் சங்கதிகளை பரிமாறிக் கொள்ள அந்த பரிபாசையால் முடியும்..
உமா கணவருக்காக காபியை கலந்தபடியே செல்லக் கோபத்துடன் அவரைப் பார்த்தாள்.. அவருக்கு மட்டும் சொந்தமான அந்தப் பார்வையை பத்திரப் படுத்திக் கொள்ளத் துடிக்கும் மனதுடன் அவரும் அவளைப் பார்த்தார்..
அவர்களின் அந்தரங்க மௌன உரையாடலை அறியாதவளாக.. அவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் வெளியே போகும் உணர்வில்லாதவளாக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்த வண்ணம் மிருதுளா தோட்டத்தில் நடந்து விட்டு வரக் கிளம்பி விட்டாள்..
"எனக்காக.. வா - நான்..
                உனக்காக வா...
     என்னைக் காணவா.. - என்னில்
                உன்னைக் காண வா.."
மிருதுளா ஹாலைக் கடந்த போது டிவியில் கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் கதாநாயகி பாடிக் கொண்டிருந்தாள்.. அந்த இசையில் ஈர்க்கப்பட்டவளாக அதே பாடலை பாடிய வண்ணம் தோட்டத்திற்குள் நடந்தாள் மிருதுளா.. மெலிதான கைதட்டல் ஓசை கேட்டதும் பாட்டை நிறுத்தி விட்டு சுற்று முற்றும் பார்த்தாள்..
"காலையிலேயே பாட்டுக் கச்சேரியா..?"
ஆரஞ்சு வண்ணப் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்திருந்த மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த விக்ரம் கேட்டான்..
'நேத்து ராத்திரி இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு நீ தன்னந்தனியா பாட்டுக் கச்சேரி நடத்தலாம்.. நான் விட்ட விடிகாலையிலே தோட்டத்திலே தனியா நடக்கிறப்ப ரெண்டு வரியைப் பாடிரக் கூடாதா..?'
மனதுக்குள் நினைத்ததை அவள் கேட்கவில்லை.. நேற்று இரவு பார்த்தவன் வேறு ஒரு விக்ரமோ என்ற சந்தேகத்தை அவள் மனதில் உண்டு பண்ணும்படி வெகு உற்சாகமாக அவன் நின்றிருந்தான்..
'இவனா அவன்..?' மனதுக்குள் அவள் கேட்டுக் கொண்டாள்..
"தோட்டத்துப் பக்கம் எதுக்கு வந்த..? பாட்டுப் பாடவா..?" என்றான் அவன்..
"இல்லை.. விதை போட்டு செடி வளர்க்கலாம்ன்னு ஒரு ஐடியா.. அதான் இடத்தைப் பார்க்க வந்தேன்.." இடக்காக அவள் பதில் சொன்னாள்..
"அதையெல்லாம் உன் வீட்டுத் தோட்டத்தில் வைத்துக்க.. இது என்வீடு.. இங்கே தோட்டவேலை பார்க்க திலகர் இருக்கான்.." செமத்தியாக பதிலுக்கு கொடுத்தான் அவன்..
"நினைச்சேன்.." என்றாள் அவள்..
"என்ன நினைச்ச..?" அவன் பார்வை கூர்மையுடன் அவளை அளந்தது..
'இந்தக் கண்ணை வைத்துக்கிட்டு சும்மா இருக்கானா..?'
அவளால் அவனைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.. அவன் விழிகளைப் பார்த்தால் அவன் பார்வையில் அவள் தொலைந்து போய்விடுவாள் என்ற அச்சம் அவளுக்குள் எழுந்தது.. நேர்முகத் தேர்வின் போது இமைக்கும் பொழுதிற்குள் பார்த்து விட்ட ஒரு சின்னஞ்சிறு பார்வைக்காக சகலமும் அவனே என்று நினைக்க வைத்தவன் அவன்.. இவன் பார்வையைப் பார்க்கக் கூடாது.
மிருதுளா வானத்தை ஆராயத் தொடங்கினாள்.. வான் பாதையில் கார் மேகங்கள் தொடர் சங்கிலியைப் போல பயணம் செய்ததில்..
"இன்னைக்கு மழை வரும் போல.." என்று கருத்துத் தெரிவித்தாள்..
"நான் கேட்டேனா..?" அவன் கேட்டான்..
"நினைச்சேன்னு சொன்ன.. என்ன நினைச்சேன்னு கேட்டா.. அதுக்குப் பதில் சொல்லாம வானிலை ஆராய்ச்சி பண்ற..? உன் மனசில என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்க.."
'அதைவிட உன் மனதில் என்னதான் இருக்கு..?'
அவள் கேட்க விரும்பினாள்.. அத்தனை சொத்துக்கும் அதிபதியானவன் எதற்காக ஏதுமற்ற வறியவனைப் போல இருள் சூழ்ந்த வான் பாதையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான் என்ற கேள்வியை அவள் கேட்க விரும்பினாள்.. ஆனால் கேட்கவில்லை..
அந்தரங்கம் புனிதமானது என்றால் அந்தரங்க சோகமும் புனிதமானதுதான்.. அவனுடைய சோகம் தனிப்பட்டது.. அவனுக்கு உரியது.. அதை பகிர்ந்து கொள்ள அவன் நினைத்தால் மட்டுமே அவள் கேட்டுக் கொள்ளலாம்.. முடியாது என்று அவன் மனதுக்குள் புதைத்துக் கொண்டால் எந்தவிதக் கேள்வியையும் அவள் கேட்க முடியாது.. கேட்கவும் கூடாது..
அவர்கள் மௌனமாக நின்றார்கள்... அவள் முகத்தை அவனும் வானத்தை அவளும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. எதற்காக அவன் முகம் பார்த்துப் பேச அவள் மறுக்கிறாள் என்ற புதிர் அவனுக்கு விடுபடவே இல்லை...
"எதை நினைச்சே..?" அவன் கேள்வியை மாற்றிக் கேட்டான்..
"என்னடா.. வந்து நின்னு இவ்வளவு நேரமாகுதே.. இன்னும் கரெஸ் சார் இது அவரோட வீடுன்னு சொல்லிக் காட்டலையேன்னு நினைச்சேன்.. நினைச்சு முடிக்கறதுக்-குள்ள சார் அதைச் சொல்லிக் காட்டிட்டிங்க.."
பவ்யமான குரலில் சொன்னவளை இமைக்காமல் அவன் பார்த்தான்.. எங்கே..? அவன் பார்வையை அவள் பார்த்தால்தானே.. ஒன்று மரத்தைப் பார்த்தாள்.. இல்லை மண்ணைப் பார்த்தாள்.. வானத்தைப் பார்த்தாள்.. பூக்களை பார்த்தாள்.. கேட்டைப் பார்த்தாள்.. காரைப் பார்த்தாள்..
அவள் பார்வை ஓரிடத்தில் தேங்கி நிற்காமல் அங்குமிங்குமாக ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டிருந்தது..
அனைத்தையும் பார்த்தவள்.. அவனை மட்டும் பார்க்கவேயில்லை.. அதில் அவனுக்குள் மெலிதான கோபம் வந்தது.. அவனை அவள் வேண்டுமென்றே அலட்சியப் படுத்துவதைப் போல அவன் உணர்ந்தான்..
"இங்கே பார்.. உன்னை டாவடிக்கிற ஐடியாவெல்லாம் எனக்கு இல்லை.." சுள்ளென்று பேசினான்..
"டாவா..?" அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது..
'இவனுக்கு இப்படிக் கூடப் பேசத் தெரியுமா..?'
"களுக்.." என்று வாய் பொத்தி சிரித்தவளைப் பார்த்தவனின் முகத்தில் இளக்கம் வந்தது.. அவன் கோபம் குறைந்தது..
'என்னம்மா சிரிக்கிறா..!'
மனம் விட்டுச் சிரித்தவளின் கண்கள் பூவாக மலர்ந்து அவள் சிரிப்போடு சேர்ந்து சிரித்ததில்..
'இவள்தான் எத்தனை அழகு..' என்று அவன் வியந்து போனான்..
அவள் அழகாக இருந்தாள்.. செலூலாய்ட் பூக்களைப் போல இல்லாமல் மொட்டு விட்டு மலர்ந்த புதுரோஜாவின் வண்ணத்தில் அவள் கன்னம் இருந்தது.. அவளைப் பார்க்க வேண்டுமென்ற இச்சை அவனைத் தூண்டில் மீனாக கவர்ந்து இழுத்தது.. அவர்களுக்கு இடையே ஊடாடிக் கொண்டிருந்த அதிகாலை குளிர்காற்றில் அவளின் முன்பக்க முடிகற்றை கொத்தாக அவள் முகத்தில் விழுந்து அவள் முகத்திற்கு தனி சோபையை அளித்தது..
"சார்.. எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை.." அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்..
'அதானே.. இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனை எப்படி நீ டாவடிப்பாய்..?' அவன் மனதில் சினம் எழுந்தது.
அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் வேறு திக்கில் அவன் பாய்ந்தான்..
"இன்னைக்கு ஈவினிங்கே ஆரம்பிச்சிரு.."
"எதை..?"
"உன் டியூசனை.."
"இன்னைக்கேவா..?"
அவள் தயங்கினாள்.. அவள் தயக்கத்தில் அவனுக்கு கோபம் வந்துவிட்டது..
"இன்னைக்கேவான்னு இந்த மயங்கு மயங்கினா என்ன அர்த்தம்..?"
"மயங்கினேனா..? நானா..? உங்களைப் பார்த்தா..?"
அது இவனுக்கு எப்படித் தெரியும் என்று அவள் திகைத்தாள்.. அவனோ.. உன்னைப் பார்த்தெல்லாம் நான் மயங்குவேனா என்று அவள் கேட்டு விட்டதைப் போல உணர்ந்தான்.. சரவெடியாய் பொரிந்தான்.. அவளுக்குப் பரிச்சயமில்லாத அந்த கோபத்தில் அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்..
"என்னைப் பார்த்து மயங்குன்னு நான் உன்னிடம் சொன்னேனா..?"
"இல்லையே சார்.."
"உன்னை சைட் அடிக்கிறதைப் போல பார்த்திருக்கேனா..?"
"தெரியாதே சார்.."
"என்ன தெரியாது..?"
"நீங்க என்னைப் பார்ப்பீங்கன்னாலும் நான் உங்களைப் பார்க்கிறதில்லையேசார்.. அதனால உங்க பார்வை சைட் அடிக்கிற பார்வையா இல்லை சாதாரணப் பார்வையான்னு எனக்குத் தெரியவே தெரியாது சார்.."
அவள் அப்பாவியாக இமை கொட்டியதில் அவனுக்கு ஆத்திரம் பன்மடங்கானது..
"நீ பெரிய கட்டழகி..!"
"அப்படியா சார்..?"
"கொலைவெறியைக் கிளப்பாதே.. உன் மனசில அப்படியொரு எண்ணமிருந்தா ரப்பரைப் போட்டு முதலில் அழி.."
"ஆகட்டும் சார்.. மனசில எழுதி வைக்கிற எழுத்துக்களை அழிக்கிற ரப்பரைப்பத்தி நான் கேள்விப் படலை சார்.. உங்களுக்குத் தெரிந்திருந்தா வாங்கிக் கொடுங்க சார்.."
"கொழுப்பா..?"
"ஆமாம் சார்.. நான் ஒற்றைப் பெண் பாருங்க.. எங்க அப்பா சம்பாத்தியத்தில எங்க அம்மா சமைச்சுப் போட்டத உணக்கையா தின்னு வளர்ந்த கொழுப்பு.."
"ஏய்ய்.. உன்னையெல்லாம் சைட் அடிக்கனும்கிற அவசியம் எனக்கில்லை.. தெரிந்ததா..?"
"தெரிந்தது சார்..."
"நாம பெரிய அழகி.. விக்ரம் நம்பளையே பார்த்துக்- கிட்டு இருக்கான்கிற மனப்பாலெல்லாம் குடிக்காதே.."
"சரி சார்.."
"உன்னையெல்லாம் கணக்குப் பண்ணனும்கிற உத்தேசமே எனக்கு இல்லை.."
"சந்தோசம் சார்.."
நான் பிழைத்தேன் என்ற ரீதியில் அவள் சொல்ல அவளை பஸ்பமாக்கியே தீருவது என்ற கங்கணம் கட்டிக் கொண்டவனாக விக்ரம் கொலைவெறியுடன் அவளைப் பார்த்தான்...
"ஆக மொத்தம் தாங்கள் சொன்னதன் சாராம்சம் இதுதானே சார்..?"
"எது..?"
"நான் அழகில் சேர்த்தியில்லை.. அப்படியொரு தன்னம்பிக்கை என் மனதில் துளியூண்டு இருந்தாக்கூட நான் அழி ரப்பரைப் போட்டு அதை அழித்து விடனும்.. எனக்கு கொழுப்பு அதிகம்.. என்னைத் திரும்பிப் பார்க்கிற உத்தேசமே உங்களுக்கு இல்லை.. நீங்ய யதார்த்தமா பார்த்தாலும் பதார்த்தமா பார்க்கிறதா நான் நினைத்து விடக் கூடாது.."
"என்னது..?"
அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு அவள் பண்ணிய அழும்பில் அவனுக்கு அவளை எப்படித் திட்டுவதென்றே தெரியவில்லை..
"ஆகமொத்தம் தங்களுக்கு என்னைக் கணக்குப் பண்ற ஐடியாவே இல்லை.. இல்லையா சார்..?"

சந்தேகம் கேட்டவளை முறை.. முறையென்று முறைத்தான் விக்ரம்..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இது நீரோடு செல்கின்ற ஓடம் -13
இது நீரோடு செல்கின்ற ஓடம் -13
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s320/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
https://1.bp.blogspot.com/-InspH71XR4I/XRwyUi2hXMI/AAAAAAAAAqQ/QzRNxgL6exkK1D3NssUBKubDfCTwNzCVACPcBGAYYCw/s72-c/Ithu%2BNeeroducelkindra%2BOdam%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/ithuneeroduselkinraodam-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy