எண்ணியிருந்தது ஈடேற -8

8 இவள் என்னத்தைச் செய்யப் போகிறாள் என்ற எண்ணம் ஊடாடினாலும் எதையாவது செய்து விடுவாள் என்றுதான் நம்பினாள் நந்தினி.. உத்ராவின் குணம் அத...

8


இவள் என்னத்தைச் செய்யப் போகிறாள் என்ற எண்ணம் ஊடாடினாலும் எதையாவது செய்து விடுவாள் என்றுதான் நம்பினாள் நந்தினி.. உத்ராவின் குணம் அத்தகையது.. அவள் சொல்ல மாட்டாள்.. சொன்னால் சொன்னதைச் செய்து விடுவாள்..
அந்த நம்பிக்கையை அதிகப் படுத்துவதைப் போல மறுநாள் முழுவதும் செல்போனும் கையுமாகவே அலைந்தாள்.. வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் மொட்டை மாடியிலேயே வாசம் செய்தாள்.. செல்போனில் ஆழ்ந்து விவாதித்தாள்.. அவள் முகபாவத்தைப் பார்க்கும் போது இந்தியாவையே புரட்டிப் போடப் போகும் அதி முக்கிய முடிவுகளை எடுத்துக் கொண்டிருப்பதைப் போல தோன்றி வைத்ததில் தன்னிலை மறந்து நந்தின்கு சிரிப்புச் சிரிப்பாக வந்தது.. பேசியபடியே நிமிர்ந்து பார்த்த உத்ரா புருவங்களை உயர்த்தி விழிகளால் என்னவென்று கேட்டாள்..
"ச்சும்மா.." வாய் பொத்தி 'களுக்' கென்று சிரித்து வைத்தாள் நந்தினி..
உத்ராவின் முகத்திலிருந்த தீவிரபாவம் மறைந்து சிரிப்பு பரவியது.. அவளது குரலிலும் சிரிப்புத் தொற்றியது மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த நபர் அதைப் பற்றி வினவியிருக்க வேண்டும்..
"இங்கே நந்தினிதான் சிரிப்பை மூட்டறா.." என்று செல்லமாக புகார் செய்தாள்..
"....."
"அவ அப்படித்தான் சிரிப்பா.. தஞ்சாவூருக்கு போனா மட்டும் சிரிப்பை மறந்துருவா.. பாவம்.."
"....."
"அதெல்லாம் ஃபெர்பெக்ட் கேர்ள்தான்.. என்ன ஒன்னு.. இதைச் செய் அதைச் செய்ன்னு கமாண்ட் பண்ணினா பிடிக்காது.. தானாச் செய்யனும்னு நினைப்பா.."
உத்ரா தொடர்ந்து பேசினாள்.. அவள் பேசி முடிக்கும் வரை மொட்டை மாடியில் நீட்டிக் கொண்டிருந்த தென்னங்கீற்றை வருடிக் கொண்டிருந்த நந்தினி.. அவள் பேசி முடித்ததும்..
"யார்கிட்டடி என்னைப் பத்திக் கதை அளந்த..?" என்று கேட்டாள்..
"ஷட்-பி கிட்டத்தான்.." சிந்தனையுடன் சொன்னாள் உத்ரா..
"அடிப்பாவி..! என்னமோ ரொமான்ஸில கரை கண்டவ மாதிரி அவரைப் பத்திப் பேசினாலே கண்ணைச் செறுகிக்கிட்டுப் பேசுவ.. அவர்கூட செல்போனில
பேசறப்ப மட்டும் என்னவோ செங்கிஸ்தானோட ஒப்பந்தம் போடறதைப் போல மூஞ்சியை வைச்சுக்கிட்டுப் பேசுவியா..? பாவம்டி அவரு.."
"பாவம்தான்.. என்ன செய்கிறது..? எனக்கு நீ வந்து பிரண்டா வாய்ச்சிருக்கியே.. உன் முன்னால ரொமான்ஸ் வந்து தொலைக்கும்ங்கிற..?"
உத்ராவின் பதிலடியில் வாயை மூடிக் கொண்டாள் நந்தினி.. நிச்சயதார்த்ததில் கலந்து கொள்ள வருகிறேன் பேர்வழியென்று வந்து செஞ்சிக் கோட்டையிலிருந்து குதிக்க முயன்ற அவளால் வாயைத் திறந்து பேச முடியுமா..? உத்ராவாக இருக்கப் போய் அவள் வீட்டிலும், நந்தினியின் வீட்டிலும் அந்த தற்கொலை முயற்ச்சியைப் பற்றி வாயைத் திறக்காமல் இருக்கிறாள்.. வேறு ஒருவராக இருந்தால் கதையே வேறு..
"ஸாரிடி உத்ரா.." வருத்தத்துடன் சொன்னாள் நந்தினி..
"நீ பண்ணி வைக்க இருந்த வேலைக்கு எத்தனை ஸாரி சொன்னாலும் போதாது.. உன் பக்கத்தில இருக்கிற நியாயத்தை நினைச்சுப் போனாப் போகுதுன்னு விடறேன்.. வினித் ஒரு ஐடியா சொல்றார்.."
வினித் உத்ராவை மணக்கப் போகும் மாப்பிள்ளை.. அவனது காதுகள் வரை நந்தினியின் தற்கொலை முயற்சி போய் விட்டதே என்று நந்தினி மனத்தாங்கல் கொண்டாள்..
"இதையெல்லாம் அவர்கிட்டச் சொல்லனுமா உத்ரா..?"
"சொல்லைன்னா எப்படி வழி கிடைக்கும்..? நானா எதையும் செய்ய முடியாது நந்தினி.. உன்னைப் போலதான் நானும்.. புரிஞ்சுக்க.." வெடுவெடுத்தாள் உத்ரா..
"இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு கோவிச்சுக்கற..? சொல்லனுமான்னுதானே கேட்டேன்..? ஆமாம்.. சொல்லித்தான் ஆகனும்னு நீ சொன்ன அதுக்கென்னன்னு கேட்டுக்கப் போறேன்.." நந்தினி வெள்ளைப் புறாவை பறக்க விட்டாள்..
"இப்படியே மெயின்டெயின் பண்ணு.." எச்சரித்த உத்ரா வினித் சொன்ன ஐடியாவைப் பற்றி விவரித்தாள்..
"வினித்தோட பிரண்டுக்கு பிரண்டுக்கு பிரண்டோட ஒன்னு விட்ட அண்ணனோட பிரண்டுக்கு பிரண்டு பெரிய பிஸினெஸ் மேனாம்.. கேரளாவில ஏலக்காய் எஸ்டேட், தேயிலை எஸ்டேட், ரப்பர் பேக்டரி, சணல் பேக்டரின்னு எக்கச்சக்க பிஸினெஸ் இருக்காம்.. எல்லாத்தையும் கவனிச்சுக் கண்ட்ரோலில வைச்சுக்கிற மாதிரி ஜெனரல் மேஜேனர் போஸ்ட் வேகண்டாம்.. பேசாம உன்னை அங்க வேலையில சேர்ந்துக்கச் சொல்கிறார்.."
"வேலையா..?"
''வென வாய் பிளந்தாள் நந்தினி.. இமைகளைக் கொட்டி விழித்தாள் அவளது விழிகளுக்கு முன்னால் விரல் சொடுக்கி கவனத்தை ஈர்த்த உத்ரா கைவிரல்களை விரித்து..
"என்ன்ன்ன்.. ன..?" என்று ஒருதினுசாக வினவினாள்..
"இதையேண்டி நான் நினைச்சுப் பாக்கல..?"
"புத்தியிருந்தா நினைச்சுப் பார்த்திருப்ப.. நீதான் புத்தியை கடன் கொடுத்திட்டு உக்காந்திருக்கயே.."
"யாருக்குடி கொடுத்தேன்..? உனக்கா.."
"உன்கிட்டப் புத்தியைக் கடன் வாங்கினா விளங்கிரும்.. நான் உருப்பட்டாப்புலதான்.. இருக்கிற புத்தியே போதும்.."
"ஏண்டி என்னைத் திட்டற..?"
"நீ பண்ணி வைக்க இருந்த வேலைக்குக் கொஞ்சச் சொல்கிறயா..?"
"அதுக்காக அதையே சொல்லிக் காட்டுவியா..?"
"அடங்குடி.. இப்போ உன் முன்னால தப்பிக்கிறதுக்கு இருக்கிற வழி இது ஒன்னுதான்.. என்ன சொல்ற..? அந்த வேலைக்குப் போறயா.. இல்லையா..?"
இல்லையென்று நந்தினியால் மறுக்க முடியவில்லை.. அதே சமயத்தில் முன்பின் தெரியாத அண்டை மாநிலத்தில் ஏதோ ஒரு பெயர் தெரியாத எஸ்டேட்டில் மலை பிரதேசத்தில் வேலைக்குப் போகிறேன் என்று ஒப்புக் கொள்ளவும் பயமாக இருந்தது.. அதை உத்ராவிடம் சொன்னபோது..
"ஒன்னு இதுக்குப் பயப்படு.. இல்லைன்னா அதுக்குப் பயப்படு.." என்று சிடுசிடுத்தாள்..
"கோவிச்சுக்காதேடி உத்ரா.. பயமாயிருக்குடி.."
"பயந்தா வேலைக்கு ஆகாது நந்தினி.. நீ தெளிவா ஒரு முடிவை எடுத்துத்தான் ஆகனும்.. இது ஒன்னுதான் உனக்கான ஒரே வழி.. கட்டாயக் கல்யாணத்தில இருந்து தப்பிக்கத் தற்கொலைதான் செய்துக்கனும்னு இல்லை.. தலை மறைவாகவும் இருக்கலாம்.. கொஞ்ச நாள் போனா நம்ம பொண்ணு திரும்பி வந்தாப் போதும்ன்னு உன் பேரண்ட்ஸே மனம் மாறிருவாங்க.. அப்ப நான் உனக்குத் தகவல் சொல்றேன்.. வேலையை ரிசைன் பண்ணிட்டுத் திரும்பி வந்திரு.."
உத்ரா சொல்வதைக் கேட்க இலகுவாகத்தான் இருந்தது.. அதை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் போது மலைப்பாக இருந்தது..
"எப்படிடீ..?" நந்தினி குழந்தை போல விழித்தாள்.. உத்ராவுக்கு பாவமாகத்தான் இருந்தது.. என்ன செய்வது..? வேறு வழியில்லையே என்று கைகளை விரித்தாள்..
"நானும் வினித்தும் உனக்காக மூளையைக் கசக்கி யோசித்ததிலே இந்த வழிதான் கிடைச்சது நந்தினி.. உன்கிட்ட செர்டிபிகேட்ஸ் இல்லை.. அதை எடுக்கனும்னா நீ தஞ்சாவூருக்குப் போயாகனும்.. அப்படிப் போனா மாட்டிக்குவேன்னு சொல்ற.."
"ஆமாமாம்.. நிச்சயமா மாட்டிக்குவேன்.. என்னைக் கார்னர் பண்ணிக் கல்யாணம் வரைக்கும் கொண்டு போய் நிறுத்திருவாங்க.."
"அதுக்குத்தான் சொல்றேன்.. இந்த வேலையை ஒப்புக்கன்னு.. பாரு நந்தினி.. சென்னையிலோ, பெங்களூரில வேலைக்குச் சேரனும்னா உன் செர்டிபிகேட் தேவைப்படும்.. அட அதையாவது உன் தம்பி கிட்டத் தாஜா பண்ணிக் கடத்தச் சொல்லிரலாம்ன்னு வை.. நீ வேலை பார்க்கிற கம்பெனியை மோப்பம் பிடிச்சு உன் அப்பா தேடி வந்தாலும் வந்திருவார்.."
"கட்டாயம் வருவார்.." நந்தினியின் உடல் நடுங்கியது..
மேகநாதன் அப்பேற்பட்டவர்.. அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியாது.. அவரிடம் எதை மறைக்க வேண்டும் என்று நந்தினி ஒளித்து வைப்பாளோ அது மிகச் சரியாக அவர் கைகளில் அகப்பட்டு விடும்..
"என்ன இது..?" என்ற அவரது சிம்ம கர்ஜனையில் நந்தினியின் சர்வாங்கமும் நடுங்கி விடும்..
"உன் அப்பாவைப் பத்தித் தெரிஞ்சு வைத்திருக் கிறதினாலதான் சொல்றேன்.. கம்யூட்டர் என்ஜினியரிங் படித்த உன்னை ஐ.டி கம்பெனிகளிலதான் தேடுவார்.. கேரளா மலைகள் மேல தேட மாட்டார்.. அவருக்கு கால்வலின்னு நீதானே சொன்ன.."
"ஏண்டி.. கால்வலி இருந்தா மகளைத் தேட கேரளாப்பக்கம் வரமாட்டாருன்னு எப்படி நீ சொல்லலாம்..?"
"அறிவுக் களஞ்சியமே..! கேரளாவில நம்ம ஊர் மாதிரி காரும், பஸ்ஸீம், ஆட்டோவுமா இருக்காது... எங்கே போகனும்னாலும் ஜீப்தான்.. சில இடங்களுக்கு
ஜீப் போகாது.. முட்டி வலியைப் பத்தி யோசிக்காம மலையேறித்தான் ஆகனும்.. இப்பச் சொல்லு... அந்தப் பக்கமா உன்னைத் தேடிக்கிட்டு உன் அப்பா வருவாருங்கிற..?"
"வரவே மாட்டார்.."
நந்தினியின் முகம் ஒளிர்ந்தது.. அவளைத் தோளில் தூக்கி வளர்த்த தந்தையின் கைகளில் அகப்பட்டு விடாத இடத்தில் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டதை நினைத்து துயரம் வந்ததில் அவள் முகம் மறுபடியும் ஒளியிழந்து வாடியது.
அவள் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த உத்ரா..
"இப்ப என்ன..?" என்றாள்..
"அப்பாவிடமிருந்து ஒளிந்து தப்பிக்கனும்னு நினைக்கறேனே.. அதை நினைச்சா மனசு வலிக்குதுடி.." நந்தினி அழுது விட்டாள்..
தோழியின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட உத்ரா..
"நீயென்ன வேணும்னா செய்யற..? உன்னைத் தேடி அவரை அலைய விடனும்னு உனக்கென்ன வேண்டுதலா இருக்கு..? சிச்சுவேசன் இப்படி அமைஞ்சு போயிருச்சேடி.." என்று தேறுதல் சொல்லிச் சமாதானப் படுத்தினாள்..
நந்தினி சமாதானமாகவில்லை.. தந்தைக்கும், தாய்க்கும் துன்பம் கொடுக்கப் போகிற வருத்தம் அவள் மனதில் எழுந்தது..
"அப்பா நல்லவர்டி.. அதட்டுவாரே தவிர அடிக்க மாட்டார்.. அந்த அதட்டலில் அக்கறை இருக்கும்.. இது வேணும்னு எதையாவது மனசில நினைச்சுக்கிட்டு அப்பாகிட்டக் கேட்கப் போவேன்.. எப்படின்னு தெரியாது உத்ரா.. நான் மனசில நினைச்சது அவர் கையில இருக்கும்.. எனக்காக வாங்கிட்டு வந்திருப்பார்.." நந்தினியின் விழிகள் நீரில் மின்னின..
"இப்பவும் அப்படித்தானோ என்னவோ.. உன் மனசுப் பிரகாரம்தான் கல்யாணத்தை பிக்ஸ் பண்ணியிருக்காரோ என்னவோ.. ஒருதரம் உனக்காக பிக்ஸ் பண்ணியிருக்கிற மாப்பிள்ளையை நேரில் பார்த்துப் பேசிப் பாரு நந்தினி.. எனக்கென்னவோ நீ தேவையில்லாம பயப்படற யோன்னுதான் தோணுது.. இப்பவும் லேட்டாகிறலை..
உன் வீட்டுக்குத் தெரியாம உன் தம்பிகிட்டப் பேசி அவரோட போன் நம்பரை வாங்கறேன்.. பேசிப்பாரு.. அதுக்கப்புறமா முடிவு பண்ணு.." உத்ரா ஆலோசனை சொன்னாள்..
"வேண்டவே வேண்டாம்.." பதறிப் போனாள் நந்தினி..
"அம்மா, அப்பா மனசு வருத்தப்படும்ன்னு இந்த அளவுக்கு யோசிக்கிறவ சூசைட் பண்ணிக்கனும்னு நினைக்கலாமாடி..?"
"செத்த ஒரு நாள் வருத்தத்தோட போயிரும் உத்ரா.. அந்தச் சாவையும் ஆக்ஸிடெண்ட் போலச் சாகனும்னு தான் செஞ்சிக்கே வந்தேன்.. மலையுச்சியில கால் தடுக்கி விழுந்துட்டான்னு நினைத்துக்குவாங்க.. சாட்சிக்கு நீயும் இருப்பேன்னு நினைச்சேன்.."
"வாயிலேயே போட்டிருவேன்.. பேசறா பாரு பேச்சு.. இதில இவளோட புத்திசாலித்தனத்தை நான் மெச்சிக்கனுமாம்.. திட்டத்தை விளக்கிச் சொல்றா.. பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்ன்னு நினைச்சுப் பார்த்திருந்தா இப்படிப் பேசியிருக்க மாட்டேடி.. எங்கேயிருந்தாலும் பெத்த பிள்ளை உயிரோட இருந்தாப் போதும்ன்னுதான் அவங்க மனசு நினைக்கும்.. அவங்க பிக்ஸ் பண்ணியிருக்கிற மாப்பிள்ளையை உனக்குப் பிடிச்சிருந்தா கழுத்தை நீட்டு.. இல்லேன்னா போராடிப் பாரு.. அது முடியலைன்னா தலை மறைவா எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிரு.. அப்படிப் போகப் போகிறதை அவங்களுக்கு லெட்டர் மூலமா தெரியப் படுத்திரு.. நீ கல்யாணமே பண்ணிக்க வேணாம்.. எங்க மகளாகவே காலம் முழுக்க இருந்திரும்மான்னு அவர்களே கதறிக்கிட்டு உன் வழிக்கு வந்திருவாங்க.. அதை விட்டுட்டுத் தற்கொலை அது இதுன்னு பினாத்தினன்னு வைய்யி.. காபியில மயக்க மருந்தை கலந்து  கொடுத்துட்டு உங்க அப்பாவுக்கு தகவல் அனுப்பி வர வைச்சு தஞ்சாவூருக்கு உன்னை பார்சல் பண்ணி அனுப்பி வைச்சிருவேன்.. எப்படி வசதி..?"
இதுதான் வசதி என்று சொல்ல முடியுமா என்ன..? 'காபியிலே மயக்க மருந்தா..?' நந்தினிக்கு திகிலாக இருந்தது..
'இவள் செய்தாலும் செய்வாள்..'
அந்த வீட்டில் இருக்கும் வரை காபியே குடிக்கக் கூடாது என்ற முன் ஜாக்கிரதை முடிவை எடுத்தாள்.. எடுத்த முடிவை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அவளால் காப்பாற்ற முடியவில்லை.. 'கமகம' வென்ற காபியின் வாசனை சமையலறையைத் தாண்டி, மாடிப் படிகளில் பயணித்து, மாடி ஹாலைத் தாண்டி, மொட்டை மாடிக்கு வந்து நந்தினியின் நாசியில் நுழைந்ததில் அவள் சங்கல்பத்தை மறந்து..
"எங்கே காபி..? எங்கே காபி..?" என்று பறந்தாள்..
"இருடி பறக்காதே.." என்று உத்ரா அவளை அமர்த்திப் பிடிக்க வேண்டியிருந்தது..
காபித் தம்ளர்கள் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்ததும் உத்ராவை முந்திக் கொண்டு பாய்ந்து காபித் தம்ளரைக் கைப்பற்றி உறிஞ்ச ஆரம்பித்தபோது நந்தினியின் மனச்சாட்சி..
'இங்கே ஓர் வார்த்தை ஓர் சொல்லில் நிற்கும் நந்தினியென்ற மாணிக்கம் எங்கே தொலைந்து போனாள்..?' என்று தேட ஆரம்பித்தது..
"இன்னைக்குப் பூராவும் யோசி நந்தினி.. ஈவினிங் வரைக்கும் டயம் எடுத்துக்க.. இதைவிடப் பெட்டரா உனக்கெதும் வழி தோணினாலும் சொல்லு.. அதை ஃபாலோ பண்ணலாம்.."
உத்ரா சொல்லி விட்டாள்.. நந்தினியின் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,97,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -8
எண்ணியிருந்தது ஈடேற -8
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s320/8_Part%2B-%2B1.jpg
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy