எண்ணியிருந்தது ஈடேற -3

                                        3 "தேசிங்கோட மனைவி ராணிபாய் தேசிங்கோட வாளுக்கு மாலை போட்டு மனைவியாகிட்டாலும் ஆறு மாத கா...

                                        3


"தேசிங்கோட மனைவி ராணிபாய் தேசிங்கோட வாளுக்கு மாலை போட்டு மனைவியாகிட்டாலும் ஆறு மாத காலமா பிரிஞ்சுதான் இருந்தாங்களாம்.. அதுக்கப்புறம்தான் வந்தாங்களாம்.."
கோட்டைக்குள் நடந்தபடி சொன்னாள் உத்ரா.. கூடவே நடந்த நந்தினியின் விழிகள் அலைபாய்ந்து சுற்று முற்றும் பார்த்தன.. அவளையே அவதானித்தபடி வந்த அவனின் புருவங்கள் சுருங்கின.. எதற்காக அவள் அலைபாய்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை..
நந்தினியைப் போன்ற அழகான பெண்ணின் மனது அலைபாய்வதற்கான காரணம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.. அதுதான் காதல்..
நந்தினி காதலிக்கிறாளா என்ன..?
அதைப்பற்றி அறிய வேண்டுமானால் நந்தினியிடம் தான் பேசியாக வேண்டும்.. அதற்கு வழியின்றி உத்ரா கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்..
"அரங்கனோட உத்தரவை மீறி யுத்தத்திற்குப் போன தேசிங்கு ராஜா திரும்பி வரவேயில்லை.. தோற்றுப் போய் உயிரை விட்டு விட்டார்.. யுத்தத்தில் அவரைக் கொன்னுட்டாங்க.. சந்திரகுப்தனுக்கு சாணக்கியன் போல தேசிங்கு ராஜாவுக்கு அரங்கன் ஆலோசனை சொன்னார்.. அவர் கேட்கல.."
உத்ரா விட்ட பெருமூச்சில் அவளை உறுத்துப் பார்த்த நந்தினியின் விழிகளில் நெருப்புப் பொறி பறந்தது.
"கிடக்கிறதையெல்லாம் விட்டுட்டு கிழவியைத் தூக்கி மனையில வைக்கப் போன கதையா கதை பேசிக்கிட்டு இருக்காதடி.." என்று வெடித்தாள்.
'கிழவின்னு யாரைச் சொல்றா..?' உத்ராவுக்கு சந்தேகம் வந்து விட்டது..
அவளுக்கு சற்று ஒற்றை நாடி.. அதனால் அவளை நந்தினி 'கிழவி'யென்ற செல்ல.. இடுகுறிபெயர் கொண்டு கடுப்படிப்பது வழக்கம்..
'என்னைத்தான் சொல்றா..' உத்ராவின் கண்கள் சிவந்து விட்டன..
சிவந்த கண்களுடன் அவள் நந்தினியுடனான யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கத் தயாரானாள்..
அது என்ன அவளை நந்தினி கிழவியென்று அழைப்பது..? தனியாக இருக்கும்போது கிழவியெனச் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.. இந்திப்பட ஹீரோ போல ஒருவன் அருகிலிருக்கிறான்.. உத்ராவுடன் கதை பேசிக் கொண்டிருக்கிறான்.. அவன் முன்னால் அவளை கிழவியென்று சொல்லி வைத்தால் அவளின் இமேஜ் என்னவாது..? என்னதான் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் என்றாலும் அவளும் பெண்தானே.. அவளுக்கென்று ஒரு மனம் இருக்கிறதுதானே.. அந்தப் பெண்மனம் என்ன பாடுபடும் என்பதை நந்தினி ஓர் நொடியாவது நினைத்துப் பார்த்தாளா..? இன்று பேசும் இதே வாய் நாளை உத்ராவின் வருங்கால கணவனின் முன்னாலும் அவளைக் கிழவியென்று சொல்லாது என்று என்ன நிச்சயம்..?
நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் நடுங்கியது உத்ராவிற்கு.. இதை வளரவிடக்கூடாது என்று தீர்மானித்தாள்.. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல மனைவியாக வரப்போகிறவளின் முகத்தோற்றத்தைப் பற்றிய மதிப்பீடு உத்ராவின் வருங்காலக் கணவன் மனதில் பதிந்து விடாதா..? அவள் என்ன செய்வாள்..? நந்தினி 'கிழவி'யென்று அழைத்தால் தாங்கிக் கொள்ளலாம்.. கணவன் அப்படி அழைத்தால் தாங்கிக் கொள்ள முடியுமா..?
"யாருடி கிழவி..?" பதிலுக்கு உத்ராவும் வெடித்தாள்..
எங்கே நீதான் கிழவியென்று 'அவன்' முன்னால் சொல்லி விடுவாளோ என்ற பயம் உத்ராவின் மனதை 'வதக்.. வதக்..'கென்று வதைக்கத்தான் செய்தது..
நல்ல வேளையாக அப்படியேதும் நடந்து விடவில்லை.. எரிச்சலுடன் இருந்த நந்தினி..
"நான்தான் கிழவி..! போதுமா..?" என்று பொரிந்தாள்..
'அப்பாடி..! என்னைச் சொல்லலை..' ஆசுவாசமானாள் உத்ரா..
"நாம எதுக்கு வந்தோம்.. நீ என்ன பண்ணிக்கிட்டு இரக்கே.. கோட்டையைச் சுத்திக் காட்ட வந்தா எனக்குத்தான் நீ கைடு வேலை பாக்கனும்.. மத்தவங்களுக் கெல்லாம் கைடு வேலை பாத்துக் கதை சொல்லிக்கிட்டு இருக்கியே.. அதைத்தான் சொன்னேன்.." நந்தினி உத்ராவை விட்டு விட்டு அவனைச் சுட்டெரிப்பதைப் போல பார்த்து வைத்தாள்..
"பாரதி பாடிய சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மாங்கிற பாட்டுத் தெரியுமா..?" அவன் தேசிங்கு ராஜாவை விட்டு விட்டு பாரதியின் பாட்டுக்குத் தாவினான்.
"பாரதியோட பாட்டைத் தெரியாம இருக்குமா சார்..? அவரோட கவிதைகள்ன்னா எனக்கு அவ்வ்வ்.. ளோவ்.. பிடிக்கும்.." அளந்தாள் உத்ரா..
'அடிப்பாவி..' என்ற பார்வை பார்த்தாள் நந்தினி..
'கவிதைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்ப.. இவன்கிட்ட மட்டும் எப்படியெல்லாம் புளுகற..? பாரதி உன்னை மன்னிக்கவே மாட்டாருடி.. அவர் உயிரோட இல்லைங்கிற தைரியத்தில பேசற..'
கொதித்துப் போன நந்தினிக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டாள் உத்ரா.. அவன் கவிதை தெரியுமா என்றுதானே கேட்டான்.. கவிதை சொல் என்றா கேட்டான்..? ஆமாம், தெரியும் என்று சொல்லா விட்டால் பாரதி கோபித்துக் கொள்ள மாட்டாரா..?
"உங்க பிரண்டுக்கு சுட்டும் விழிச் சுடர் கண்கள்தான்.. ஒப்புக்கறேன்.. அதுக்காக என்னைச் சுட்டெரிக்கிறதைப் போலவே பார்க்கனுமா என்ன..?"
"அதுதானே..?"
அவன் நந்தினியை வம்பிழுக்கிறான் என்பதில் உற்சாக மத்தளம் கொட்டினாள் உத்ரா.. நந்தினியின் முகத்தில் கடுகு வெடித்தது.. எல்லாம் இவள் கொடுக்கும் இடம் என்று உத்ராவை நொந்து கொண்டாள்..
அவள் இருக்கும் நிலைமையில் எவனோ ஒரு ஹீரோ மூஞ்சிக்காரனிடம் இஞ்சி தின்ற மானைப் போல சரசம் பேச முடியுமா..?
"துப்பாக்கிதான் கையில இல்லையாம்.. மத்தபடி மிலிடிரி கம்மாண்டர்தானாம்.. காலையில டாண்ணு ஆறு மணிக்கெல்லாம் எழுந்துக்கனுமாம்.."
"என்னது..?"
கல்லூரி நாள்களில் எட்டு மணிக்கும் மற்ற விடுமுறை நாள்களில் பதினொரு மணிக்கும் எழுந்து பழக்கப்பட்ட நந்தினி அதிர்ந்து போனாள்.. விடிகாலைத் தோக்கம் மன்மதனைப் போலக் கண்சிமிட்டி அவளை மயக்கத்தில் ஆழ்த்தி விடுமே.. அப்பேற்பட்டத் தூக்கத்தை அவள் தியாகம் செய்ய வேண்டும் என்று அவளுடைய தம்பி சொல்கிறானே.. இல்லாவிட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவானாமே..
"நிஜம்மாவே அந்த ஆளு 'கன்' வைச்சிருக்கானாடா..?"
"இல்லாம இருக்குமா..? ஆள் கொழுத்த பணக்காரனாமே.. கன் இல்லாம எப்படியிருப்பான்.."
"கொழுத்த பணக்காரன் எதுக்காகடா நம்ம வீட்டில பெண் எடுக்க வர்றான்..? நாம பணக்காரங்கதான்.. கொழுத்த பணக்காரங்கன்னு சொல்ல முடியாதே.. ஊரில அவனுக்கு வேற பெண்ணா கிடைக்கலை..?"
"தஞ்சாவூரில கிடைக்காதே.. ஏன்னா.. அவரோட அம்மா பிறந்தது இந்த தஞ்சாவூரிலதானாம்.."
"அதுக்கு..? நான்தான் கிடைச்சேனா..?"
"நீதானே கிடைச்சாகனும்..? அவரோட அம்மா நம்ம அம்மாவுக்கு நாலுவிட்ட மாமன் மகளாம்.. எப்படின்னு வரைபடம் போட்டு வரைந்து காட்டவா..?"
"இருக்கிற இம்சை போதாதுன்னு உறவுமுறை வரைபடத்தை விளக்க ஆரம்பிச்சேன்னு வைய்யி.. கொன்னுருவேன்.."
"அஃது.. அந்தபயம் மனசில இருக்கனும்.. அதனால என்ன ஏதுன்னு விளக்கம் கேட்காம நான் சொல்லறதை மட்டும் கேளு.."
"சொல்லித் தொலை.."
"உனக்கு மட்டும் இது லீவு நாளில்லக்கா.. எனக்கும் லீவு நாள்தான்.. என்னைத் தொலையச் சொன்னேன்னு வைய்யி.. ஆஹான்னு காலையிலேயே வீட்டை விட்டுத் தொலைஞ்சு ஊரையெல்லாம் சுத்திட்டு ஜாமத்திலதான் வீடு வந்து சேருவேன்.. எப்படி வசதி..?"
"ஊர் சுத்தி..! எனக்குன்னு தம்பியா வந்து பொறந்திருக்கு.."
"உன் தலையெழுத்து அப்படி.. இல்லேன்னா அம்மாவோட பால்யகால சிநேகிதியான நாலுவிட்ட மாமா மக கட்டினா உன் மகளைத்தான் என் மகனுக்கு கட்டி வைப்பேன்.. நீயும் நானும் சம்பந்திகளாகனும்.. வேற இடத்தில நீ பெண்ணைக் கட்டி வைக்கக் கூடாதுன்னு சத்தியம் செய்து சத்தியமும் வாங்கியிருப்பாங்களா..?"
"என்னடா சொல்ற..?"
"அப்படியே பிளாக் அண்ட் வொயிட் சினிமாவைப் பார்க்கிற மாதிரியே இருக்கில்ல..?"
"ஆமாண்டா குமாரு.."
"எப்படி இந்தக் குமாரோட வொர்க்..? டே அண்ட் நைட்டா அம்மாவோட சேலை முந்தானையைப் பிடிச்சுச் சுத்தி பிளாஷ்பேக் மேட்டரையெல்லாம் கேதர் பண்ணி வைச்சிருக்கேனில்ல..?"
"தீயாய் வேலை செஞ்சிருக்கடா குமாரு.."
"இதைத்தான் தம்பியுடையார் கல்யாணத்துக்கு அஞ்சார்ன்னு சொல்லுவாங்க.."
"இல்லையேடா குமாரு.. இதை வேற மாதிரி தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னுல்ல சொல்லுவாங்க.."
"அது அண்ணனுக்கு.. இது அக்காவுக்கு.. இப்ப உனக்கு உன் கல்யாணம் எப்படி நிச்சயமாச்சுங்கிற விவரம் தெரியனுமா.. வேணாமா..?"
"தெரியனும்டா.. தெரியனும்.. வேண்டாம்ன்னு எப்படிடா சொல்லுவேன்..?"
"அப்ப உன் திருவாயை மூடிக்கிட்டு நான் சொல்லறதை மட்டும் கேளு.."
அக்காவையே அதட்டினான் நந்தகுமார்.. 'நேரம்டா' என்று நொந்து நூடுல்ஸ்hனபடி தலையை ஆட்டி வைத்தாள் நந்தினி.. காலம் இப்படி மாறுமென்று அவள் கனவா கண்டாள்..? வாழ்க்கை பெரும் பாரமாக அவள் தலையில் ஏறி அமர யத்தனிக்கும்போது தம்பிகாரனின் கால்கள் என்றாலும் அவள் தாள் பணிந்துதானே ஆக வேண்டும்..
"பார்த்தியாடா குமாரா.. இப்படியொரு சத்தியத்தைப் பண்ணித் தொலைச்சிருக்கிறதைப் பத்தி நாம பிறந்ததில இருந்து ஒரு வார்த்தைகூடச் சொல்லாம இந்தம்மா மறைச்சு வைச்சு மெயின்டெயின் பண்ணியிருக்காங்க.. பார்த்தியா..?"
"நினைப்பு இருந்தாத்தானே சொல்லியிருப்பாங்க..? அப்பாவுக்கே இது தெரியாதாம்.. நீ நம்மைச் சொல்ல வந்துட்ட.. சின்ன வயசிலேயே அம்மாவோட நாலு விட்ட மாமன் குடும்பம் நொடிச்சுப் போயிருச்சாம்.."
"அப்படித்தான் போகனும்.." சாபம் விட்டாள் நந்தினி.
"உன் சாபத்துக்குப் பவரே இல்ல.. நொடிச்சுப் போன மாமன் குடும்பம் தஞ்சாவூர்ல இருந்து புலம் பெயர்ந்து கன்யாகுமாரியில குடியேறிருச்சாம்.. அதுக்கப்புறம் அந்த மாமன் குடும்பம் என்ன ஆச்சு.. ஏது ஆச்சுன்னு யாருக்கும் தெரியாதாம்.. அந்த மாமனுக்கு ஒற்றைமகள்தானாம்.. கொஞ்ச நாள்வரை அம்மா சிநேகிதி ஞாபகமா அழுதுகிட்டே இருப்பாங்களாம்.. பாவாடை சட்டை பருவத்திலே பிரிஞ்ச சிநேகிதியை பாவாடை தாவணி பருவத்திலே படுசுத்தமா மறந்துட்டாங்களாம்.. எப்படியாப்பட்ட நட்பு பார்த்தியா.." கேலியாக கேட்டான் நந்தகுமார்..
'இவன் இருக்கானே..' நந்தினிக்குச் சிரிப்புத்தான் வந்தது..
நந்தகுமாரின் வயதுக்கு அதிகப்படியான விவரத்தோடு அவன் இருந்தான்.. சிரிக்காமல் எதையும் பேசி வைப்பான்.. ஆழ்ந்த சிந்தனையிலிருப்பவனிடம் ஏண்டா என்று கேட்டால்..
"ஞானத்தேடலில் இருக்கிறேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே.." என்று பில்ட்-அப் காட்டுவான்..
"ஐய்யே.. உன் மூஞ்சிக்கு ஞானத் தேடல் வேறயா..? உனக்கெல்லாம் அது செட் ஆகாதுடா.." என்பாள் தம்பியைச் சரியாக கணித்து வைத்திருக்கும் நந்தினி..
தம்பியின் மீதான அவளது கணிப்பு நூற்றுக்கு நூறு மெய்யானது என்பதை நிரூபணம் செய்வான் நந்தகுமார்.
"அதாகப்பட்டது அக்கா.. என்னோட ஞானத்தேடல் ஒரு மார்க்கமானது.. சன்யாசத்துக்கும் இதுக்கும் ரொம்பத் தூரம்.."
"அதான் தெரியுமே.. நீ ஒரு மார்க்கமானவன் கூட இல்லடா குமாரு.. பல மார்க்கமானவன்.."
"அஃது.. என்னைப் பத்தித் தெள்ளத் தெளிவா புரிஞ்சு வைச்சிருக்கிற.. ஐ அட்மைர் யு.."
"உன்னோட அட்மைரைத் தூக்கி உடப்பில போட்டுட்டு உன் ஞானத்தேடல் என்ன தேடல்ன்னு சொல்லித் தொலை.."
"தேடலில் தொலைவதாகத்தான் உத்தேசித்திருக் கிறேன் அக்கா.. இப்போ இல்ல.. இன்னும் ரெண்டு வருசம் கழிச்சு.."
"அதையேண்டாத் தள்ளிப் போடற..? இப்பவே தேடலை ஆரம்பிக்க வேண்டியதுதானே..? இந்த வருசத்தில நாள் நல்லா இல்லையா..?"
"நீ சின்னப் பெண்.."
"யாரு..? நானு..? சின்னப் பொண்ணு..? நீ மகாப் பெரியவன்..?"
"யெஸ் மைடியர் சிஸ்டர்.. உனக்கு விவரம் பத்தாது."
"இப்போச் சொன்ன பாரு.. இதை கல்வெட்டில பெறிச்சு வை.. அதைப் பார்த்தாவது அப்பா மலையிறங்கட்டும்.."
"அது மட்டும் நடக்கவே நடக்காது அக்கா.. உன்னைப் பொருத்தவரை நம்ம அப்பா மலையுச்சியில்தான் குடியிருப்பார்.."
"தடியா..! உன் வாயில நல்ல வார்த்தையே வராதா..? இந்த லட்சணத்தில இவன் ஞானத்தைத் தேடப் போறானாம்.. அதுவும் ரெண்டு வருசம் கழிச்சாம்.. ஏண்டா..?"
"அப்போத்தான் ஞானத்தேடல் வசமாகும் சகோதரி.."
"உனக்கெல்லாம் ஞானம் வந்து.. ம்ஹீம்.."
"அதாவது அக்கா.. ஒருத்தியைக் காதலிச்சு விதிவசத்தாலே அவளுக்கே தாலியைக் கட்ட வேண்டி வந்திருச்சுன்னா அவளுக்குப் புருசனாகலாம்.."
"ஆஹா..! என்ன ஒரு கண்டுபிடிப்பு.. நீ அறிவாளிடா தம்பி.."
"ரொம்பப் புகழாதே.. கூச்சமாயிருக்கு.. இன்னும் கேளு.. அதுவே பனிரெண்டு பேரைக் காதலித்து பதிமூனாவதா ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஞானியாகலாம்.. நான் ஞானியாக விரும்பறேன்.. அதுக்கு ஞானத் தேடலை ஆரம்பிக்கனும்னா இன்னும் ரெண்டு வருசம் போகனும்.. அதான் செட்டாகும்.."
"அடப்பாவி.. உருப்படுவியாடா நீ.. உன்னை யெல்லாம் தண்ணி தெளிச்சு பேச விட்டுட்டு.. தேமேன்னு இருக்கிற என்மேல அப்பா ஹிட்லர்த்தனத்தக் காமிக்கிறாரே.. இதை என்னன்னு சொல்றது..?"
இப்படித் தமக்கையைத் தலையில் அடித்துக் கொண்டு புலம்பவைப்பவன்தான் நந்தகுமார்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -3
எண்ணியிருந்தது ஈடேற -3
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s320/8_Part%2B-%2B1.jpg
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy