எண்ணியிருந்தது ஈடேற -14

                                          14 ஏற்கெனவே நந்தினியை நினைத்து மன உளைச்சலில் இருந்த உத்ரா வந்த வேகத்தில் அவனுடன் சண்டையிடக் கி...

                                          14
ஏற்கெனவே நந்தினியை நினைத்து மன உளைச்சலில் இருந்த உத்ரா வந்த வேகத்தில் அவனுடன் சண்டையிடக் கிளம்பி விட்டாள்..
"ஹேய் மிஸ்டர்.. என்ன இது..? வம்பு பண்றீங்களா..?" என்று அவள் வெடுவெடுக்க..
"வம்பா..? நானா..?" என்று கண்களை விரித்தான் அவன்.."நீங்களேதான்.. வினித் அன்றைக்கே இவன் வேணும்ன்னே வாய் வளர்த்தான்.."
அவன் செஞ்சிக் கோட்டையைப் பார்க்க வந்தவன் என்பதில் ஓர்வித பிணைப்பு ஏற்பட்டு அவனுடன் உத்ராதான நட்பாக பேசினாள் என்பதை வெகு தோதாக மறந்த வீட்டு அவன்மீது குற்றம் சாட்டினாள் உத்ரா..
அதை நினைத்துக் கொண்டானோ என்னவோ.. அவனது உதடுகள் கேலியாக வளைந்து நெளிந்தன.. உத்ரா அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை.. நந்தினியிடம் அவன் நின்று பேசி விட்ட குற்றத்திற்காக அவனை தண்டித்தாக வேண்டும் என்ற துடிப்புடன் கோள் மூட்டிக் கொண்டிருந்தாள்..
"என்ன மிஸ்டர்.. லேடிஸ்கிட்ட வாலாட்டறிங்களா..? வாலை ஒட்ட நறுக்கி விடட்டுமா..?" கோபத்துடன் முஷ்டியை மடக்கனிhன் வினித்..
"ஹைய்யோ.. பயந்துட்டேன்.."
இரு கைகளையும் உயர்த்தி விட்டு சன்னமாக விசிலடித்தான் அவன் வினித்தின் மீசை துடித்தது..
"ரெண்டில் ஒன்னு பார்க்காம நீ நகர மாட்ட.." என்று அதட்டினான்..
"சண்டையெல்லாம் வேணாம் ஹீரோ சார்.. ஒரு பெண் பக்கத்தில இருந்தாலே ஹீரோ வேசம் கட்டத் தோணும்.. இங்கே ரெண்டு பொண்ணுக இருக்காங்க.. ரத்தம் கொதிக்கத்தான் செய்யும்.. எதுக்கு வம்பு..? நான் சும்மாவே சண்டை போட மாட்டேன்.. இதில ரத்தம் கொதிக்க முஷ்டியை மடக்கிக்கிட்டு கர்ஜிக்கிற உங்ககூட சண்டை போடுவேனா..? பை bஞ்சிக் கோட்டை மேம், பை சூசைட் அட்டெம்டு மேம்.." அவன் கையாட்டி விட்டு போய் விட்டான்..
'கடைசியில் சூசைடு அட்டெம்டுன்னு பேர் வைச்சிட்டானே..' நந்தினியை வெட்கம் பிடுங்கித் திண்றது..
"நீ பண்ணி வைச்ச வேலைக்கு போற, வார டூரிஸ்ட்டெல்லாம் பேர் வைச்சிட்டுப் போறான் பாரு.." உத்ரா தலையில் அடித்துக் கொண்டாள்..
"எவனோ ஒரு ரோமியோ.. பேசற பேச்சுக்கு நந்தினி என்ன பண்ணுவாங்க..?" என்று வினித் சொன்னானோ நந்தினி தப்பித்தாளோ..
"சரிசரி.. நீயே கேரளாவுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கிற.. இந்த நேரத்திலே எவனோ ஒருத்தன் பேசின பேச்சை ஏன் நினைத்துப் பார்க்கனும்..? அவன் கிடக்கிறான்.. தறுதலை..! நீ வா.. டிரெயின் வந்தாச்சு.. உன் கம்பார்ட்மெண்டைத் தேடிப் பிடிச்சு இடத்தைக் கண்டுபிடிச்சு உட்கார வைக்கிறோம்.."
உத்ராவும் வினித்தும் ஆளுக்கொரு பையைத் தூக்கிக் கொள்ள நந்தினி ஹேண்ட் பேக்கில் புத்தகங்களையும் தண்ணீர் பாட்டிலையும் திணித்தபடி அவர்களைத் தொடர்ந்த ஓடினாள்..
வேகமாய் முன்னால் போனவர்கள் கையிலிருந்த டிக்கெட்டைப் பார்த்துக் கம்பார்ட்மெண்டைக் கண்டு பிடித்து அதன் வாயிலில் ஒட்டப் பட்டிருந்த சார்ட்டில் நந்தினியின் பெயரைத் தேடி..
"இதோ இருக்கு.." என்று கூவினார்கள்..
அது முதல் வகுப்பு ஏஸி கம்பார்ட்மெண்ட்.. இரண்டாம் வகுப்பு ஏஸி கம்பார்ட்மெண்டில் டிக்கெட் வாங்கியிருக்கலாமே என்றிருந்தது நந்தினிக்கு.. இரண்டாம் வகுப்பு ஏஸி என்றால் நான்கு மக்கள் மனிதரின் முகம் பார்த்தபடி பயணம் செய்யலாம்.. பயம் இல்லாமல் இருக்கும்.. முதல் வகுப்பில் அப்படியில்லை.. ஏதோ பெட்டியில் அடைபட்டிருப்பதைப் போல மூச்சுத் திணறும்..
உத்ராவிடம் அதைச் சொன்னபோது..
"மூச்சு முட்டுமா..?" என்று ஏதோ நகைச்சுவையைக் கேட்டு விட்டதைப் போலச் சிரித்தாள்..
"அவங்களுக்கு ஏற்படற ஃபீலிங்கை அவங்க சொல்கிறாங்க.. இதில சிரிக்க என்ன இருக்கு..?" என்று வினித் கடிந்து கொண்ட பின்புதான் சிரிப்பதை நிறுத்தினாள்..
நந்தினியின் பைகளை வைத்து விட்டு எதிர் சீட்டில் உத்ராவும் வினித்தும் அமர்ந்தார்கள்..
"அங்கே யார் வருவாங்களோ.." நந்தினி கவலையாகச் சொன்னாள்..
"யாரோ ரவிச்சந்திரன் பேர் போட்டிருக்கு.. யாராய் இருந்தா என்ன..? டி.டி.ஆர் எனக்குத் தெரிந்தவர்தான்.. சொல்லி வைத்து விட்டுப் போகிறேன்.. எதுவாக இருந்தாலும் அவர்கிட்டக் கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க.. எங்களுக்கு போன் பண்ணுங்க.." என்றான் வினித்..
அவள் வேலைக்குப் போகும் எஸ்டேட் பற்றிய விவரங்களைச் சொன்னார்கள்.. கலவரத்துடன் கேட்டுக் கொண்டாள் நந்தினி..
"கேரளாவில 'வயநாடு'ங்கிற ஊரில மலைமேலே இருக்கிற 'கேரளம் எஸ்டேட்'டுக்குத்தான் நீ வேலைக்குப் போகப் போகிற.. வயநாட்டுக்கு ஸ்ட்ரெயிட்டா டிரெயின் கிடையாது.. கோழிக்கோடு ஸ்டேசனில இறங்கிப் போகனும்.."
"ரயில்வே ஸ்டேசனில இறங்கின பின்னால எப்படிப் போகிறது உத்ரா..? பஸ் இருக்குமா..? தனியா டாக்ஸி பிடிச்சு வயநாட்டுக்குப் போக யோசனையா இருக்குடி.."
நந்தினியின் கண்களில் தெரிந்த கலவரத்தில் உத்ராவுக்கு இரக்கமாக இருந்தது.. தைரியம் கொடுக்கும் வகையில் அவள் கையைப் பிடித்துத் தட்டிக் கெடுத்து விட்டு ஒரு கவரைத் திணித்தாள்..
"பயப்படாதே நந்தினி.. இந்தக் கவரில் நீ போக வேண்டிய இடத்தைப் பத்தின விவரங்களும் விசிட்டிங் கார்டும் இருக்கு.. விசிட்டிங் கார்டில இருக்கிற பேரையும் போன் நம்பரையும் உன் போனில சேவ் பண்ணி வைத்துக்க.. வயநாடு மலைப் பிரதேசம் அங்கே டிரெயினில் போக முடியது... கோழிக்கோடு வரைக்கும்தான் நீ டிரெயினில் போக முடியும்.. அதுக்கப்புறம் ஜீப்போ.. காரோதான்.. நீ கிளம்பி வர்றதைப் பத்தித் தகவல் கொடுத்திருக்கோம்.. உன்னை ரிஸீவ் பண்ணக் கார் வரும்.. அதில வயநாட்டுக்கு போகலாம்.."
"ம்ம்ம்.."
"வாட்டர் பாட்டில் இருக்கில்ல..?"
"இருக்கு.. இப்பத்தான் வாங்கினேன்.."
"வழியில எதுக்காகவும் டிரெயினை விட்டு இறங்காதே.."
"சரி.."
"பத்திரமா இரு.. எஸ்டேட்டுக்குப் போனதும் போன் போடு.."
"ம்ம்ம்.."
கோழிக்கோடு ரயில்வே ஸ்டேசனின் அடையாளத்தை அறிந்து கொள்ள விரும்பினாள் நந்தினி.. உத்ராவோ நந்தினி எடுத்துக் கொண்டு போக வேண்டிய மருந்துகளைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்..
"வயநாட்டை கேரளாவோட சிரபுஞ்சின்னு சொல்லுவாங்களாம்டி.. வருசத்தில ஆறுமாசம் மழை பெய்து கொண்டே இருக்குமாம்.. ஜலதோசம் பிடித்தா விடாது கருப்புங்கிறதைப் போல படுத்தி எடுத்திருமாம்.. குணமாக சில, பல மாதங்கள் கூட ஆகிருமாம்.." உத்ரா விவவரித்ததில்..
"என்னடி இப்படிச் சொல்கிற..?" என்று அரண்டு போனாள் நந்தினி..
அவளுக்கு ஜலதோசம் என்றாலே அலர்ஜி.. மூக்கில் நீர் வடிய கண்கள் கோவைப் பழமாய் சிவக்க.. நுனி மூக்கு பச்சைக் கிளியின் அலகைப் போல கோவைப் பழமாகி விட.. கண்களில் கண்ணீர் கொட்ட.. தலை பாரமாய் கனக்க.. சள்ளு புள்ளென்று பாடாய் பட்டு
வீட்டில் உள்ளவர்களையும் படுத்தி எடுத்து விடுவாள்..
மழை காலங்களில் வெளிநாட்டு வாசிகள் போல உல்லன் ஸ்வெட்டரும் கம்பளிப் போர்வையுமாக சுருண்டு முடங்கி விடுவாள்.. அதிலும் அவளுக்கு சரக்கென்றால் ஜலதோசம் பிடித்து விடும்.. ஜலதோசமென்றால் அலர்ஜி என்று இருப்பவளுக்கு தூசி பட்டால்கூட அலர்ஜி வந்து ஜலதோசம் வந்துவிடும்.. மூக்கை உறிஞ்சுவதில் ஆரம்பித்து, இருமலுக்கு வந்து, காய்ச்சலில் குளிருடன் நடுங்கி ஜன்னி வந்து படுத்து விடுவாள்..
ஜலதோசத்திற்கும் நந்தினிக்கும் உள்ள இந்த ஆழ்ந்த பிணைப்பைப் பற்றி அறிந்து வைத்திருந்த தினால்தான் செஞ்சியில் நந்தினி மழையில் நனைந்து காய்ச்சலை இழுத்துக் கொள்ள முயன்றபோது உத்ரா அலறிப் பதறினாள்..
"என்னை என்னடி செய்யச் சொல்ற..? உன் அப்பா யோசித்துக் கூடப் பார்க்காத இடத்துக்கு நாடு கடத்தனும்னா இந்த கேரளத்து வயநாடுதான் அகப்பட்டது.. சேரளம் எஸ்டேட் அங்கே ரொம்ப ஃபேமஸான எஸ்டேட்டுடி.."
"என்னது..? கேரளம் எஸ்டேட்டுன்னுதானே சொன்ன..?"
"கேரளமா..? 'சேரளம் எஸ்டேட்..'டுடி.."
"சேரளமா..? நீ கேளரம்ன்னு சொன்ன மாதிரியில்ல இருந்தது.. அப்ப அப்படித்தானேடி சொன்ன..?"
"அப்பவும் 'சேரளம்'ன்னுதான் சொன்னேன்.. இப்பவும் 'சேரளம்'ன்னுதான் சொல்றேன்.."
"கேரளத்தில என்னடி 'சேரளம்'ன்னு பேர்வைச்சிருக் காங்க..?"
"கம்யூட்டரைப் படிச்சா ஹிஸ்டரியை மறந்துடனும்னு இருக்கா..? சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடுன்னு மூணு பிரிவா தமிழகம் இருந்தப்ப சேரர்கள் ஆண்ட நாடு சேர நாடு எனப் படுகிற கேரளம்.. சேர நாடு சேரளம்ன்னு மருவி மெல்ல கேரளம்ன்னு மாறிப் போச்சாம்.. பழசை மறக்காம 'சேரளம் எஸ்டேட்..'டுன்னு பேர் வைச்சிருக்காங்க.. அதைப் பாராட்டுவியா.. அதை விட்டுட்டு ஏன் அப்படி வைச்சாங்கன்னு விளக்கம் கேட்டுக்கிட்டு இருக்கிறயே.."
"தெரியாம கேட்டுட்டேன்.. போதுமா.."
"கஃப் சிரப்பில இருந்து ஜலதோசம் வராம இருக்க முன் ஜாக்கிரதை நடவடிக்கையா போட்டுக்க வேண்டிய டேப்லெட்ஸ் வரை இந்த டப்பாவில் இருக்கு.. பத்திரமா வைத்துக்க.. ஸ்வெட்டர் சால்வையெல்லாம் பர்சேஸ் பண்ணியாச்சு.. கவலையில்லை.. டிரெயின் நின்னதும் முதல் வேலையா ஸ்வெட்டரை மாட்டிச் சால்வையை போர்த்திக்கிட்டு இறங்கு.. அங்கே ரொம்பக் குளிரும்.."
பொதுவாக வெயில் காலத்தை விட மழைக் காலங்களை பாதுகாப்பு இல்லாததைப் போல உணர்வாள் நந்தினி.. அதிகக் குளிரும் சலசலவென்ற மழையுமாக அவளுக்குள் ஜில்லிப்பு ஏற்படும்.. வீட்டுக்குள்ளேயே முடங்கச் சொல்லும்..
வருடத்தில் இரண்டு மாதங்கள் வந்து போகும் மழைக் காலத்தையே தாங்கிக் கொள்ள முடியாதவள் சொதசொதவென மழை பொழியும் மலை பிரதேசத்தில் எப்படித் தாக்குப் பிடிப்பாள்..
வெளிறிப் போன நந்தினின் முகத்தைப் பார்த்த உத்ரா..
"பழகிட்டா சரியாப் போயிரும்டி.." என்று ஆறுதல் சொன்னாள்..
என்னத்தைப் பழகி என்று தோன்றினாலும் அதைச் சொல்லி என்னத்தை ஆகப் போகிறது என்று பேசாமல் இருந்து விட்டாள் நந்தினி..
உத்ரா கொடுத்த கவரையும் மருந்து டப்பாவையும் வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டாள்.. நந்தினியுடன் பேசிக் கொண்டிருந்த உத்ராவின் செல்போன்
ஒலித்தது..
"குல தெய்வத்துக்கு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு கல்யாணப் பத்திரிக்கையையும் வைத்து விட்டோம்.. வீட்டுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கோம்.. நீ திண்டிவனத்தில இருந்து வந்துட்டியா..?" மறுமுனையில் அகிலா கேட்டாள்..
"வந்துட்டேன்ம்மா.." அப்பட்டமான அக்மார்க் பொய்யை அயராமல் அள்ளி விட்டாள் அகிலா பெற்ற உத்ரா..
"வீட்டிலே நீ இல்லையாமே.." என்ற அகிலாவின் வார்த்தைகளில் அக்கினிப் பிழம்பான உத்ரா செல்போனை கையில் மூடிவிட்டு..
"அதுக்குள்ள சி.ஐ.டி வேலை பார்த்துட்டாங்க பார்த்தியா.." என்று நந்தினியிடம் முறையிட்டாள்..
"அவங்க எப்படி சி.ஐ.டி வேலை பார்த்தாலும் நீ கடுக்கா கொடுத்து எஸ்ஸாகிடற பாரு.. அங்கே நிக்கிற நீ.." என்றான் வினித்..
"மாமியா பக்கம் ஜால்ராவா..? பிழைக்கத் தெரிந்த மருமகன்தான் நீங்க.." வினித்துக்கு சான்றிதழ் வழங்கிய உத்ரா செல்போனை காதுக்கு கொடுத்து..
"யாரும்மா சொன்னது..?" என்றாள்..
"எதுத்த வீட்டு அகிலாண்டம்தான் சொன்னா..? ஏன்..? அவகூடச் சண்டைக்குப் போகப் போகிறயா..?" என்றாள் அகிலா..
"அது கூட.. சண்டை போட்டுட்டாலும்.. கழுதையில.. ஏம்மா அதுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது.. ராத்திரியில எருமைக் கன்னுக்குட்டியை கண்டு பிடிச்சுருமாக்கும்..?"
"இப்போ எதுக்குடி இந்த பழமொழியைச் சொல்கிற..?"
"நான் பக்கத்து வீட்டு பர்வதம் அக்காகிட்டப் பேசிக்கிட்டு இருக்கேன்.. வீட்டில இருந்தாத்தானே அகிலாண்டம் அக்கா வியாக்கினம் பேசும்..? நந்தினியை தஞ்சாவூர் பஸ்ஸில ஏத்தி விட்டுட்டு திண்டிவனம் போய் தேவையான திங்ஸை வாங்கிட்டு அப்பவே வந்துட்டேனே.."
"சரி சரி.. நாங்க வர்ற வரைக்கும் அங்கேயே பேசிக்கிட்டு இரு.."
அகிலா போனை அணைத்துவிட..
"ஸ்ஸ் அப்பா.." என்று கன்னங்களை உப்பிக் காற்றை ஊதியபடி இந்தப்பக்கம் செல்போனை அணைத்தாள் உத்ரா..
"உங்கம்மா பக்கத்து வீட்டு பர்வதம் அக்காகிட்டக் கேட்டு வைச்சா என்ன செய்வ..?" வேடிக்கையாக கேட்டான் வினித்..
"அந்தக்கா ஆமாம்ன்னு சொல்லும்.."
"ஓஹோ.. ரெண்டு பேரும் கூட்டு களவானிகளா..?"
"அப்படித்தான் வைத்துக்கங்களேன்.."
"நீயே சரின்னு சொல்லிட்ட பின்னாலே நான் என்ன மாட்டேன்னா சொல்லப் போறேன்..?"
வினித் குறும்பாக கண்களைச் சிமிட்டியதில் எதைப் பற்றிச் சொல்கிறான் என்று யோசித்த உத்ரா அது எது என்று கண்டு கொண்டவளாக..
"படவா.." என்று வினித்தின் கைகளில் அடித்தாள்..
"ஹா.. ஹா.."
"இந்த ஆம்பளைப் புத்த இருக்குதே.."
செல்ல கோபத்துடன் வினித்தை கிள்ளி விட்டு ஹேண்ட்பேகை தோளில் மாட்டியபடி எழுந்தாள் உத்ரா..
"அம்மா வர்றதுக்கு முன்னால நான் செஞ்சியில இருந்தாகனும் நந்தினி.. உன் அப்பாவுக்கு நீ எழுதிய லெட்டரை ஆன் தி வேயில கொரியர் பண்ணிட்டுப் போயிடறேன்.. நியுயார்க்கில இருக்கிற சரோஜா சீனியரும் போன் போட்டுப் பேசிருவாங்க.. உன் வீட்டுக்குத் தகவல் போயிரும்.. அதைப்பத்தி நீ கவலைப் பட்டுக்காதே.."
"ஆண்ட்டி வர்றதுக்கு முன்னாலே செஞ்சிக்குப் போயிருவியா..?"
"வினித் காரில் டிராப் பண்ணிருவார்.. தெரு முனையில இறங்கி பர்வதம் அக்கா வீட்டுக்குப்  போயிருவேன்.. இதைப் பத்தியும் நீ கவலைப் பட்டுக்காதே.."

உன்னைப் பற்றி மட்டும் கவலைப்படு என்று சொல்கிறாளா உத்ரா..? நந்தினியின் கண்களில் துயரக் கண்ணீர் முட்டியது..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -14
எண்ணியிருந்தது ஈடேற -14
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s320/8_Part%2B-%2B1.jpg
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy