எண்ணியிருந்தது ஈடேற -10

                                  10 மஞ்சள் தடவிய கல்யாணப் பத்திரிக்கைகள் கட்டுக் கட்டாக பூஜையறையில் அடுக்கப் பட்டிருந்தன.. உத்ராவின...

                                  10


மஞ்சள் தடவிய கல்யாணப் பத்திரிக்கைகள் கட்டுக் கட்டாக பூஜையறையில் அடுக்கப் பட்டிருந்தன.. உத்ராவின் தாய், தந்தையும் சொந்த பந்தங்களும் கண்மூடி வேண்டி முடித்ததும் கற்பூரம் ஊதுபத்தி கொளுத்தி வணங்கி விட்டு கல்யாண பத்திரிக்கைகளை எடுத்து வந்து ஹாலின் டீப்பாயில் பரப்பினார்கள்..
"முதல் பத்திரிக்கையை குல தெய்வத்துக்கு வைக்கனும்.."
ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.. மறுநாள் குலதெய்வக் கோவிலுக்கு கிளம்புவதென்றும் முடிவானது.. அதே நாளில் நந்தினியை கேரளாவுக்கு ரயிலேற்றி விட கிளம்பப் போவதாக உத்ரா தீர்மானித்தாள்.. நந்தினியின் மனம் நடுங்கியது..
"அம்மாவோட மைண்ட் ரிலாக்ஸா இருக்க விடக் கூடாது நந்தினி.. பரபரன்னு இருக்க வைக்கனும்.. ரிலாக்ஸா இருந்தா திண்டிவனத்துக்குப் போனவ திரும்பி வர இவ்வளவு நேரமான்னு திண்டிவனத்துக்கு ஆளை அனுப்பி என்னைத் தேட ஆரம்பிச்சுருவாங்க.. யார் கண்டது..? உன்னை தஞ்சாவூருக்கு பஸ் ஏத்தி விட வேற யாரையாவது துணைக்கு அனுப்பிட்டு என்னை வீட்டிலே நிறுத்தினாலும் நிறுத்திரலாம்.. நல்ல வேளையா எங்க குலதெய்வம் நமக்குக் கை கொடுத்திருச்சு.. குலதெய்வக் கோவிலுக்குப் பத்திரிக்கை வைக்கக் காலையிலே கிளம்பிப் போனா நைட்டுத்தான் திரும்பி வருவாங்க.. மதியச் சாப்பாடு கோவிலில தயார் ஆகிரும்.. சாமி கும்பிட்டு, பந்தி பரிமாறி சாப்பிட்டு மரத்தடி நிழலில கால நீட்டி உட்கார்ந்து உறவு மொறை ஊர்களில நடந்திருக்கிற சங்கதிகளை கடை பரப்பி அசை போட்டுட்டு.. மெல்ல நகர்ந்து.. சொந்த பந்த வீடுகள்ல நடக்கிற சங்கதியில வந்து நின்னு பொறணி பேசி முடிக்கிறதுக்கும் வெளில் தணியறதுக்கும் சரியா இருக்கும்.. திரும்பவும் சாமி கும்பிட்டுட்டு கார்களில அடைஞ்சு பக்கத்து டவுனில காபி பலகாரம் மொக்கிட்டு இருட்டின பின்னாடி உள்ஸீ, புஸ்ஸீன்னு வீட்டுக்கு வந்து சேர்வாங்க.. நான் எங்கே போனேன், என்ன பண்ணினேன்னு கேக்கக் கூட அம்மாவுக்கு தெம்பு இருக்காது.. வயித்துக்கு எதையாச்சும் போட்டுட்டுத் தூங்கப் போயிருவாங்க.. நான் தப்பிச்சுருவேன்.."
உத்ரா சொல்லச் சொல்ல இதில் இத்தனை விவரங்கள் இருக்கிறதா என்றிருந்தது நந்தினிக்கு..
'இவதான் எத்தனை தெளிவா திட்டம் போடறா..!'
சென்னைக்கு போய் வருவதற்கே இவ்வளவு தூரத்துக்கு யோசித்து காய் நகர்த்துபவள், கேரளாவுக்கு நந்தினியை அனுப்ப எவ்வளவு யோசித்திருப்பாள்..? வினித்தை எத்தனை கேள்விகள் கேட்டிருப்பாள்..?
உத்ரா நந்தினியை பாதுகாப்பான இடத்திற்குத்தான் அனுப்பி வைக்கிறாள் என்ற நம்பிக்கை நந்தினியின் மனதில் வந்தது.. அந்த நெகிழ்ச்சியை அவளது விழிகள் பிரதிபலித்ததில்..
"என்ன்ன்.. ன..?" என்றாள் உத்ரா சந்தேகமாக..
என்னவென்று உத்ராவிடம் சொல்லி விட முடியுமா..? அப்படியென்றால் என்மீது நம்பிக்கை இல்லாமல்தான் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாயா..? இப்போதுதான் என்மீது உனக்கு நம்பிக்கை வந்ததா என்று பாய்ந்து விடுவாளே..
"ஒன்னுமில்லடி.. ச்சும்மா யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.." நந்தினி மழுப்பினாள்..
"யோசிச்சியா..? நீ யோசிச்சா ஆபத்தாச்சே.." என்றாள் உத்ரா..
நந்தினியின் தற்கொலை முயற்சியை அவள் சுட்டிக் காட்டுவதைப் புரிந்து கொண்ட நந்தினி உதட்டைக் கடித்தபடி..
"அப்போ அது ஒன்னுதான் பெட்டர் ஆப்சனா தோணுச்சு உத்ரா.. மாற்று ஆப்சன் தோணவே இல்லை.." என்று சொன்னாள்..
"முட்டாள்கள்தான் ஒற்றை ஆப்சனில தொங்கிக்கிட்டு இருப்பாங்க.. நீயென்ன முட்டாளா.."
"பிரச்னை வராதவரைக்கும் எல்லோருமே புத்திசாலிகள்தான்.."
"பேச்செல்லாம் தெளிவாப் பேசிரு.. செயல்ன்னு வர்றப்ப கோட்டை விட்டிரு.."
நந்தினியின் தலையில் சின்னக் குட்டு வைத்தாள் உத்ரா.. தலையைத் தடவியபடி பரிதாபமாக பார்த்த நந்தினியின் தோற்றத்தில் மனம் கசிந்தவள் தோழியைக் கட்டிக் கொண்டாள்..
"முயல்குட்டி மாதிரி முழிக்கறியேடி.. பயப்படாதே.. வினித்துக்கு தெரிஞ்ச இடம்தான்.. நீ பத்திரமா வேலை செய்யலாம்.."
"ம்ம்ம்.."
"நீ கேரளாவுக்கு கிளம்பிப் போகிறதுக்கு முன்னாலே உன் அப்பாவுக்கு லெட்டர் எழுதி கொரியரில அனுப்பி வைச்சிரு.."
"ஐயையோ.."
"அதுக்குள்ள ஏண்டி அலறுகிற..? வெளிநாட்டில வேலை கிடைச்சிருக்கு.. நியுயார்க் போகிறேன்னு எழுது.. நம்ம சீனியர் சரோஜா நியூயார்க்கிலதான் வேலை செய்கிறாங்க.. மிமிக்ரியில அவங்க எக்ஸ்பர்ட்டுன்னு உனக்குத்தான் தெரியுமே.. நம்ம காலேஜில எந்த பங்சன் நடந்தாலும் அவங்களோட மிமிக்ரி புரோக்ராம் 'ஆட்' ஆகிருமே.. அவங்கிட்ட விவரம் சொல்லி அவங்க போன் நம்பரை உன் போன் நம்பரா உன் பேரண்ட்ஸ்கிட்டக் கொடுக்கலாமான்னு கேட்டேன்.. ஓகேன்னு சொல்லிட்டாங்க.. ஸோ.. நீ ஸிம் கார்டை மாத்திரு.. வேய ஸிம் வாங்கி வைச்சிருக்கேன்.. அதை யூஸ் பண்ணு.. உன்னோட போன் நம்பரா அவங்க நம்பரை லெட்டரில எழுதி அனுப்பிரு.."
"அப்புறம் என்ன ஆகும்..?"
"உன் வீட்டில இருந்து சரோஜா சீனியருக்குப் போன் போகும்.. அவங்க பிடிக்காத கல்யாணத்தை நிறுத்தின பின்னாலே இந்தியாவுக்கு வர்றேன்.. இல்லேன்னா வரவே மாட்டேன்னு சொல்லிருவாங்க.."
"இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகுமா உத்ரா..?"
"கட்டாயமா வொர்க் அவுட் ஆகும்.. லெட்டரில நீ தெளிவா எழுதிரு.. உன் மனசைச் சொல்லிரு.. சரோஜா சினியரோட போன் நம்பரை உன் போன் நம்பரா கோட் பண்ணிரு.. உன்னோட போன் நம்பரை மாத்தி வேற சிம் கார்ட் போட்டிரு.. லெட்டர் மட்டும் போதும்.. தப்பித் தவறி உன் புது நம்பரில இருந்து உன் அப்பாவுக்கு போன் பண்ணிராதே.."
"ஏண்டி..?"
"இது கூடத் தெரியலை.. நீயெல்லாம் கம்யூட்டர் என்ஜினியர்ன்னு வெளியில சொல்லிராதே.."
"ஓகே.. சொல்லலை.. ஏன்னு நீ சொல்லு.."
"அடி என் அரதப் புத்திசாலி பிரண்டே..! உன் அப்பாவோ கெட்டிக்காரர்.. உன் போன் நம்பர டிரேஸ் பண்ணி நீ இருக்கிற இடத்த கண்டு பிடிச்சிர மாட்டாரா..?"
"கேரளாப் பக்கம் வர மாட்டார்ன்னு சொன்ன..?"
"கேரளாவுக்கு நீ போயிருப்பேன்னு யோசிக்க மாட்டார்ன்னு தான் சொன்னேன்.. பெங்களூர், சென்னை, ஹைதராபாத்துன்னுதான் தேடுவார்.. கேரளாப் பக்கம் தேட மாட்டார்ன்னுதான் சொன்னேன்.. நீ கேரளாவில இருக்கிறத உன் போன் நம்பர் காட்டிக் கொடுத்திருச்சுன்னா முட்டியைத் தடவிக்கிட்டு வீட்டிலே உட்கார்ந்திருப் பார்ன்னு சொல்லலை.. அவருக்குத்தான் முட்டி வலி..! அவரோட ஆள் படை அத்தனைக்குமா முட்டி வலி..?"
ஆஹா.. என்று அயர்ந்து போனாள் நந்தினி.. இந்த உத்ராதான் எப்படியெல்லாம் யோசித்துத் தெளிவாக திட்டம் தீட்டுகிறாள்..!
"எப்புடிடீ..?" ஆனந்தப் பரவசமானாள்..
"அடங்கு.." ஒற்றைச் சொல்லில் நந்தினியின் பிரமிப்பை லட்சியம் பண்ணாமல் கடந்தாள் உத்ரா..
"ஆக.. நான் அப்பாகிட்டப் பேசவே கூடாதுங்கிற.."
நந்தினிக்கு ஏக்கமாக இருந்தது.. அவளுடைய அம்மா, அப்பா, தம்பி மற்றும் அப்பப்பா, அப்பம்மா, உற்றர் உறவினர், தஞ்சாவூர் கிராமம், காவேரிக்கரை என்று அனைத்தும் ஞாபகத்தில் வந்து நின்றதில் தேம்பி அழுக ஆரம்பித்தாள்..
"இப்ப என்ன அலுவலுக்கு கண்ணீரில கப்பல் விடற..?" உத்ரா பல்லைக் கடித்தாள்..
"என்னடி பேசற..? உனக்கென்ன.. உன்னோட அப்பா சும்மான்னு குடும்பத்தோட இருக்கிற.. நான்தானே குடும்பத்தை விட்டுட்டு தலை மறைவா ஓடறேன்..?"
"என்னைப் பாத்துப் பாத்து வயித்தெரிச்சல் படறதுக்குன்னே செஞ்சிக்கு வந்திருக்கிற.. உன்னை மாதிரி ஒருத்தி.. இல்லையில்லை.. நீ ஒருத்தியே போதும்.. இன்னொருத்தியை இந்த உலகம் தாங்காது.. நான் 'நல்ல்ல்ல்ல...லா' வாழ்ந்திருவேண்டி.."
"உத்ரா.."
"என்னடி பிசாசே..?"
"கோபமா..?"
"இல்லை.. சந்தோசம்..! உன்னால நான் படற டென்சன் இருக்கே.. என்னைப் போல கல்யாணப் பொண்ணு எவரும் இருக்க மாட்டா.."
நந்தினி மூக்கை உறிஞ்சினாள்.. கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.. பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டாள்.. உத்ரா அசைந்தே கொடுக்கவில்லை..
"இந்த பிலிமையெல்லாம் வேறு எங்காவது காட்டு.." என்று சொல்லி விட்டாள்..
"வேற என்னடி செய்யனும்..?"
வேறு வழியின்றி உத்ரா காட்டும் வழிக்கே வந்தாள் நந்தினி..
"அஃது.. இப்படியே மெயின்டெயின் பண்ணு.. உன் அப்பா சரோஜா சீனியரோட நம்பர டிரேஸ் பண்ணுவார்.. அது தெள்ளத் தெளிவா நியூ யார்க்குன்னு காட்டும்.. நீ நியூயார்க்கிலதான் இருக்கேன்னு நம்பிருவார்.."
"அப்போ சரோஜா சீனியர்தான் எங்க அப்பாவுக்கு மகளா..?"
"அவங்க அப்பாவுக்குத்தான் அவங்க மகள்.. உன் அப்பாவுக்கு நீதான் மகள்..! உன் வாய்ஸைப் போல மிமிக்ரி மட்டும்தான் பண்ணுவாங்க.. உங்கப்பா சொத்தில பங்கெல்லாம் கேட்க மாட்டாங்க.."
"நான் என்ன அப்படியா சொன்னேன்..?"
"நீ சொன்னாலும் சொல்லுவ.. யாருக்குத் தெரியும்..? நீ எந்த நேரம் எதைச் செய்வ.. எதைப் பேசுவன்னு ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குதே.."
"விடுடி.. விடுடி.."
"இத்தனை கேள்வி கேட்கிறவ எஸ்கேப் ஆகிறதுக்கான திடத்தையும் போட்டிருக்கனும்.. அதையெல்லாம் விட்டிருவா.. தலை வலிக்க அதையிதை யோசித்து எந்த ஓட்டை உடைசலும் இல்லாம பிளான் பண்ணி டயாக்ரம் வரையாத குறையாச் சொன்னா இல்லாத நொட்டனைக் கேள்வியாக் கேப்பா.."
"அம்மா..! சாமி..! தெரியாத்தனமாக் கேட்டுட்டேண்டி.."
நந்தினி கன்னத்தில் போட்டுக் கொண்டதில் கோபம் குறைந்த உத்ரா பெருமூச்சுடன் தோழியைப் பார்த்தாள்..
"புரிஞ்சுக்க நந்தினி.. உனக்காக நான் ரிஸ்க் எடுக்கலாம்.. வினீத் ரிஸ்க் எடுக்கலாமா..? எனக்காக அவர் இந்த வேலையில் இறங்கியிருக்கார்.. உனக்கு மனசில்லைன்னு தெரிஞ்சா எதுக்காக உன் பிரண்டை ஃபோர்ஸ் பண்றேன்னு என்னைத்தான் கோவிச்சுக்குவார்.. நீ மட்டும் சூசைட் அது இதுன்னு பயம் காட்டாம இருந்தேன்னு வை.. இந்தப் பிளானுக்கே வேலை இருக்காது.. உன்னைத் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்துட்டு நிம்மதியா நானுண்டு, என் வினீத் உண்டு, எங்க கல்யாணம் உண்டுன்னு இருந்திருப்பேன்.. உன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சிருக்க மாட்டேன்..
இந்தப் பாடு பட்டிருக்க மாட்டேன்.."
குற்ற உணர்வுடன் சங்கடப்பட்டாள் நந்தினி.. உத்ராவின் பக்கமிருந்த நியாயம் அவளுக்குப் புரிந்தது.. வேறு ஒருத்தியாக இருந்திருந்தால் என் கல்யாண நிச்சயத்துக்கு நீ வரவில்லையென்று நான் ஏங்கினேனா.. எதற்காக வந்து எனக்கு இடைஞ்சலை உண்டாக்குகிறாய் என்று தாளித்துக் கொட்டியிருப்பாள்.. தஞ்சாவூருக்குப் போன் போட்டு நந்தினியின் குடும்பத்தை வரவழைத்து உங்கள் வீட்டுப் பெண் செய்வது நியாயமா என்று நிற்க வைத்துக் கேள்வி கேட்டிருப்பாள்.. நீங்களாச்சு.. உங்கள் வீட்டுப் பெண்ணாச்சு.. எங்களுக்கு இந்தத் தலைவலி வேண்டாம் என்று ஒப்படைத்திருப்பாள்..
உத்ரா அப்படிச் செய்யவில்லை.. நந்தினி செய்யவிருந்த வேலையில் ஆடிப் போய் விட்டாள்.. அவளைக் காட்டிக் கொடுக்காமல் அவளுடைய பிரச்னை தீர என்ன வழியென்று யோசித்து வழி காட்டுகிறாள்.. அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விட்டு விட்டு நந்தினி குட்டையைக் குழப்பலாமா..?
"ஸாரிடி உத்ரா.." தோழியின் கையைப் பிடித்துக் கொண்டாள்..
"நீ சொல்கிற ஸாரிக்கு வேல்யூ இல்லைன்னு தௌசண்ட் டைம் நானும் சொல்லியாச்சு.. உன் மர மண்டையில ஏறுகிறதா இல்லை.."
குற்றம் செய்து விட்ட குழந்தை போல மலங்க மலங்க விழித்தாள் நந்தினி..
"சரி.. சரி.. பச்சைப் புள்ளை போல முழிக்காதே.." என்று மலையிறங்கினாள் உத்ரா..
"இந்த நம்பரில இருந்து யார்கிட்டயும் பேசக் கூடாதா..?"
"மண்டு.. மண்டு.. அப்படிச் சொன்னேனா..? என்கிட்டப் பேசு.. கேரளாவில உனக்குப் புதிதா அறிமுகம் ஆணவங்கக்கிட்டப் பேசு.."
"அவங்ககிட்ட நான் ஏன் பேசனும்..?"
"ஆரம்பிச்சுட்டியா..? உன் வீட்டாரைத் தவிர யார்கிட்ட வேணும்னாலும் பேசலாம்ங்கிறதைத்தான் அப்படிச் சொன்னேன்.. புதுசா யார்கிட்டயும் கிளை கொண்டாடச் சொல்லலை.. போதுமா..?"
"இப்படிப் படபடன்னு பேசாதேடி.. எனக்குப் படபடன்னு வருது.."
நந்தினி நெஞ்சைப் பிடித்து உத்ராவை அரள வைத்தாள்.. கேரளாவுக்கு கொண்டு செல்ல தேவையான உடைகள் இருக்கிறதா என்று உத்ரா விசாரித்தாள்..
"பங்சன்ங்கிறதினால பத்துப் பத்தினைஞ்சு செட் டிரஸ்ஸ அடுக்கிக்கிட்டு வந்திருக்கேன்.. எல்லாமே காஸ்ட்லி ஸாரிஸ், சுடித்தார் செட்தான்.. ஜ்வல்ஸ் வேற இருக்கு.."
"இருக்கட்டும்.. நீ போகிற இடம் பத்திரமான இடம்தான்.. ஜ்வல்ஸீக்கு ஒன்னும் ஆகாது.. வேற நைட்டிஸ் அது இதுன்னு நிறைய வேணுமே.."
"ஒரு வாரம் ஸ்டே பண்ற ஐடியா இருந்ததினால நிறைய அள்ளிப் போட்டுக்கிட்டுத்தான் வந்திருக்க கேண்டி.. இப்போதைக்கு இது போதும்.."
"இருந்தாலும் சென்னையில கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணிக்கலாம் நந்தினி.."
"எதுக்குடி.. இருக்கிறது போதும்.."
"நீ போகிற இடம் கேரளாடி.. மலைபிரதேசம்.. கடை, கண்ணின்னு எதுவும் பக்கத்தில் இருக்காது.. தேவையானதை இங்கேயே வாங்கிக்கிறது பெட்ட ரில்லையா..?"
உத்ரா பேசப்பேச நந்தினியின் அடி வயிற்றில் கலவரம் மூண்டது.. அறியாத ஊருக்குப் போகப் போகிறாளே என்ற பயம் எழுந்தது.. அதை உத்ராவிடம் சொல்லாமல் மறைத்து தனக்குள் புதைத்துக் கொண்டாள்..

போதும்.. அவளால் அவளுடைய தோழிபட்ட தொல்லைகள் எல்லாம் போதும்... திருமண நிச்சயதார்த்தத்திற்கு வருகிறேன் பேர்வழியென்று வந்து விட்ட அவளுடைய துயரச் சுமையைத் தூக்கித் தோழியின் தலைமீது சுமத்தி விட்டாள்.. அதிலிருந்து தோழியை விடுவித்து விட்டு அவள் அங்கிருந்து அகன்று விடவேண்டும்.. கண் காணாமல் எங்காவது போய் விடவேண்டும்.
  

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -10
எண்ணியிருந்தது ஈடேற -10
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s320/8_Part%2B-%2B1.jpg
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy