எண்ணியிருந்தது ஈடேற -19

                                      19 "ஆஹா..! அறிவுத் திருக்கடல் சார் நீங்கள்.." அவள் சூட்டிய புகழாரத்தை ஏற்றுக் கொள்...

                                      19


"ஆஹா..! அறிவுத் திருக்கடல் சார் நீங்கள்.."
அவள் சூட்டிய புகழாரத்தை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று யோசிக்கிறவனைப் போல புருவங்களை நெரித்து வைத்தவன்..
"இப்ப அறிவுத்திருக்கடல்ங்கிற.. இதுக்கு முன்னே அடா, புடான்னு சொன்ன..?" என்று கேட்டு வைத்தான்..
"அது சரி.." என்று தலையை ஆட்டிய நந்தினி..
"வாங்க, போங்கன்னு கூப்பிட்ட பாஸ் திடிர்ன்னு மரியாதையைத் தூக்கிக் கடாசிட்டு 'வா, போ'ன்னு பேசுவாராம்.. நான் மட்டும் பேச்சு வாக்கில 'அட..' ன்னு ஆச்சரியக் குறியோட சொல்லிட்டா அதையே பிடிச்சுக்கிட்டுத் தொங்குவாராம்.. வாட் எ ஜட்ஜ்மெண்ட்.." என்று போலியாக வியந்தாள்..
"தெங்கினேனா..?"
"அட..! இதுவும் பேச்சுவாக்கில வந்ததுதான் சார்.."
"திரும்பவும் 'அட' வா..?"
"நீங்க இருக்கீங்களே.."
அவள் தலையை ஆட்டிச் சிரித்தபோது அவன் கண்களில் வந்து சென்ற மின்னலை அவள் கவனிக்க வில்லை.. சம்பாஷணையின் சுவராஸ்யத்தில் கரைந்திருந்தாள்.. ஓர் அழகான அரும்பு இதழ் விரித்து மலர்வதைப் போல இயல்பான சம்பாஷணை அவர்களுக்குள் முகிழ்ந்திருந்தது.. அதையறியாத குழந்தைத்தனத்துடன் அவள் சம்பாஷணையைத் தொடர்ந்ததில் அவன் முகத்தில் சன்னமான மென்மை படர்ந்தது..
"நான் இருக்கப் போய்த்தான் உனக்கு வேலை கொடுக்க முடிந்திருக்கு.. நீயும் பிடிக்காத மேரேஜில இருந்து எஸ்ஸாகி தலைமறைவாய் இருக்க சேரவள நாட்டுக்கு ஓடி வர முடிஞ்சிருக்கு.."
"ஓடி வந்திருக்கேன்னு சொல்லாதீங்க சார்.. ஐ ஹேட் தட் வெர்ட்.." முகம் சுளித்தாள் நந்தினி.. அந்த முகச்சுளிப்பை உன்னிப்பாய் அவதானித்தவன்.. "ஏன்..?" என்று கேட்டான்..
"அதென்ன ஓடி வந்திருக்கேன்னு பட்டுன்னு பேர் கட்டறீங்க.. நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது.." படபடத்தாள் நந்தினி.. அவள் முகம் சிவந்து விட்டது..
"இப்ப நீ செய்திருக்கிறதுக்குப் பெயர் என்னவாம்..?" நிதானமாக கேட்டான் அவன்..
"இதுக்குப் பெயர் வேலை பார்க்க வருகிறது.. ஓடி வர்றதில்லை.. என்னை யாரன்னு நினைத்தீங்க..?" ரோசத்துடன் அவள் கேட்டாள்..
"நந்தினின்னு நினைத்தேன்.. நந்தினிதானே நீ..?"
இலகுவான அவனது கேள்வி சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்தி மறுபடியும் மிக அழகானதொரு சம்பாஷணைக்கு அவர்களை இட்டுச் சென்றது.. தடதடக்கும் ரயிலின் ஆட்டத்திலிருந்து தப்பிக்கப் பிடிமானம் தேடியவளாக சாய்ந்து நின்றாள் நந்தினி..
"என்னவோ 'யார் நீ..?'ன்னு கேட்கிறதைப் போலவே இருக்கு.. ஆனாலும் இது அநியாயம் சார்.. உங்களிடம் வேலை பார்க்க வந்தா 'வா, போ'ன்னு கூப்பிடுவீங்களா..?"
பச்சை குழந்தை போலக் கேட்டவளின் கன்னத்தைக் கிள்ளிக் காதைத் திருக வேண்டும் போல இருந்தது அவனுக்கு.. அப்படியொரு ஆசை அவனுக்குள் கிளர்வதை உணராத அறியாமையோடு அவனிடம் ஒட்டுதலாகப் பேசிக் கொண்டிருந்தவளின் சிறுபிள்ளைத் தனத்தில் வசீகரிக்கப் பட்டான் ரவிச்சந்திரன்.. குறுகுறுவென பார்த்து வைத்தான்.. அவனது அந்தப் பார்வை நந்தினியை ஏதோ செய்ய வெட்கத்துடன் உதட்டைக் கடித்தபடி அடிப் பார்வையில் அவனை ஆராய்ந்தாள்.. தூண்டில் போடும் உணர்வில்லாமல் தூண்டில் போட்ட அவளது பார்வைக்கு இரையான ரவிச்சந்திரன்..
'இதை இவள் அறிவாளா..?' என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான்..
அவளது அந்த அறியாமையே அவளுக்கு அலாதியானதொரு சோபையைத் தந்தது.. சிலுசிலுக்கும் பனிக்காற்று உடலைத் துளைத்ததில் அவள் மீதான ரவிச்சந்திரனின் ஆசையும் அதிகரித்தது..
அவன் ஒன்றும் பெண்களை அறியாதவனல்ல.. அதைச் சொன்னால் நந்தினி எப்படி எடுத்துக் கொள்வாள் என்று யோசித்தான்.. பயந்து விடுவாள்.. ஓடும் ரயிலில் இருந்து குதித்து விட யத்தனித்தாலும் யத்தனிக்கலாம்.. அவனைப் பெண் பித்தன், பொறுக்கி, காமுகன் என்று பலவாறாக நினைத்தாலும் நினைத்து விடலாம்..
எது எப்படியோ.. அவனைப் பற்றிய அவந்த விவரத்தை அறிந்தால் இதுபோன்ற குழந்தைத்தனமான ஒட்டுதலுடன் அவனிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டாள் என்பது மட்டும் நிச்சயம்..
ஏனோ தெரியவில்லை.. அவள் விலகி நின்று ஒட்டுதலில்லாமல் பேச நேர்வதை ரவிச்சந்தினால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.. அவன் கோடிஸ்வரன்..! வெறும் கோடிஸ்வரன் மட்டுமல்ல.. கேரள சமஸ்தானத்தின் ராஜ வம்சங்களில் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்.. கேரளாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் அறியப்பட்ட இளம் தொழிலதிபன்..!
ராஜ வம்சத்துக்கேயுரிய அனைத்து சாமுத்திரிகா லட்சணங்களும் ரவிச்சந்திரனிடம் குவிந்திருந்தன.. ஆடிறக்கும் மேல் உயரம்.. தேக்குமரம் போன்ற உடல்கட்டு.. செதுக்கி வைத்ததைப் போன்ற முக அமைப்பு... நீண்ட கை, கால்கள் என்று அவன் இளம் பெண்களின் மனதைச் சுண்டியிழுக்கும் கம்பீரமான வனப்போடு இருந்தான்.. அதில் வசியம் செய்யப்பட்ட பலர் அவனை வசியம் செய்ய முயன்று தோற்றிருக்கிறார்கள்..
எவராலும் வசியம் செய்ய முடியாத அந்த வசியக்காரனின் மனதை வசியம் செய்யும் வசீகரியாக தான் இருப்பதை அறியாமல் அவனிடம் வாயாடிக் கொண்டிருந்தாள் நந்தினி..
அதுதான்.. அவன் யாரென்று அறியாத அவளது குழந்தைத்தனம்தான் அவனை ஈர்த்தது.. எடுத்த எடுப்பில் அவனைப் பார்த்த மறு நொடியிலேயே..
"ஹீ ஆர் யு மேன்..?" என்று கேட்டு அவனை அயர வைத்தாள் நந்தினி..
ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து வியாபார இதழ்களும் அவனது புகைப்படத்தால் தங்கள் இதழ்களின் அட்டைப் படத்தை அலங்கரித்திருக்கின்றன.. வெளிநாடுகன் வர்த்தக இதழ்களும் அவனது பேட்டிகளையும், புகைப்படங்களையும் பிரசுரித்திருக் கின்றன.. கேரளாவில் அவனை அறியாதவர்கள் இல்லை.. அப்படிப்பட்டவனைத்தான் 'யார் நீ..?' என்று கேட்டு வைத்தாள் நந்தினி..
அதையும் அதிகார தோரணையில் கேட்டு வைத்தாள்.. கூடவே டி.டி. ஆரிடமும், ரயில்வே போலிஸிடமும் புகார் பண்ணவா என்று மிரட்டினாள்.. அவனது உயரத்தை அறியாத அவளது பேதைத்தனம் அவளை கூர்ந்து பார்க்க வைத்தது.. வாயாடியவளை வம்புக்கு இழுக்க வைத்தது.. அவளைக் குத்திக் காட்டிப் பேசுவதைப் போலப் பேசி அவள் மனதை குடைந்து அவளைப் பற்றிய செய்திகளைக் கிரகிக்க வைத்தது.. அவளை கூர்ந்து பார்க்க வைத்தது.. அவனது பார்வையில் சிலிர்த்துப் போனவளின் பிரத்யேக சிறுபார்வையில் அவனை நனைய வைத்தது..
எத்தனையோ பெண்களுடன் நெருக்கமாக இருந்தபோது கிடைக்காத ஓர் பரவசம் அவளது பிரத்யேகமான சிறுபார்வையில் கிடைத்தது.. குளிர்காற்று உடலை சில்லிட வைத்ததில் குளிருக்கு இதமாக அவளை அணைத்துக் கொண்டால் என்ன என்று சலனம் கொண்டான் ரவிச்சந்திரன்..
ஓடிக்கொண்டிருந்த ரயிலின் திறந்திருந்த வாசல் வழியே வந்த குளிர்காற்று மேனியை சிலிர்க்க வைத்ததில் துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக் கொண்டாள் நந்தினி..
ரவிச்சந்திரனின் பார்வை அவள் உணராமல் அவளை மேய்ந்தது..
கள்ளமற்ற அவளது முகத்தின் அறியாமையில் அவன் மனம் அசைந்தது.. அவனது பார்வையின் மாறுபாட்டை அறியாதவளாய் அவள் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு வெள்ளையாய் சிரித்தவள்..
"குளிருது.." என்றாள்..
சடசடவெனப் பெய்த மழையின் சாரல் அவள் மீது விழுந்து தெறித்ததை இமைகளை மூடி சிலிர்த்து அனுபவித்தாள்.. அவள்மீது விழும் மழைத்துளிகளில் அவள் சிலிர்த்தது அவளோடு சேர்ந்து நனைந்திட வேண்டுமென்ற ஏக்கத்தை அவன் மனதில் விதைத்தது..
"குளிறிலும் மழையிலும் நனைந்துக்கிட்டு இங்கே நிற்கனுமா என்ன..? சீட்டுக்குப் போயிரலாமே.." என்றான்..
"இதுகூட நல்லாயிருக்கில்ல.." நகர மனமில்லாமல் அவள் கேட்டதில் அவன் இதழ்களில் சிறு முறுவல் வந்தது..
'இவள் குழந்தையேதான்..'
மெல்லிய பிரியம் அவன் மனதில் சூழ்ந்தது.. அவளையே உற்றுப் பார்த்தான்.. தீர்க்கமான அவனது பார்வையின் வேகம் தாளாமல் வெட்கிச் சிவந்தவளைப் பார்க்க அவனுக்குப் பிடித்திருந்தது..
'இவளை வாங்க, போங்கன்னு சொல்லனுமாம்..' அவனது சிரிப்பு விரிந்தது..
"ஏன் சிரிக்கறீங்க..?" சிறு குழந்தையாக அவள் சிணுங்கினாள்.
"நேற்று பைனல் எக்ஸாம் முடிச்சுட்டு ரிசல்ட் வர்றதுக்குள்ள வேலை பார்க்க வந்து நின்னிருக்க.. உன்னை வாங்க, போங்கன்னு கூப்பிட்டா என் வயசுக்கு என்ன மரியாதை..?"
"அடேங்கப்பா.. தடியூண்டற கிழவர்தான் நீங்க.. போவீங்களா.." உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள் நந்தினி..
அவளது சுழித்த உதடுகளில் தடுக்கி விழுந்தான் ரவிச்சந்திரன்.. அவளின் ஒவ்வொரு அசைவும் ஆயிரம் அழகுகளை அள்ளித் தெளித்தது.. புதுப்புதுப் பரிணாமங்களில் வெளிப்பட்ட அவளது அழகில் ரவிச்சந்திரனுக்குள் ஓர்விதமான கிளர்ச்சி பரவியது..
"எங்கே போகச் சொல்ற..?" உல்லாசமாக சிரித்தான்..
இது போலச் சிரிப்பது தான்தானா என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.. அவ்வளவு எளிதில் அவன் சிரித்துப் பேசிவிட மாட்டான்.. அதுவும் பெண்களிடம் சிரிக்கவே மாட்டான்.. பேச நேர்ந்தாலும் ஒரிரு வார்த்தைகளில் முடித்து விடுவான்.. அநாவசியமான பேச்சுக்களைத் தவிர்த்து விடுவான்..
அவனது இந்த குணாதிசியம் பெண்களை அவனிடமிருந்து தள்ளி நிறுத்தியிருந்தது.. பணத்துக்காக அவனிடம் நெருக்கும் கொண்ட பெண்களிடம் நெருக்கமாக அவன் இருப்பான்.. நெருக்கத்தைக் கடந்த பின்பு அவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து வெட்டி விடுவான்.. ஒட்டிப் பழக
அனுமதிக்க மாட்டான்.. அடுத்து அவர்களை முகம் பார்க்க நேர்ந்தாலும் அறிமுகமற்றப் பார்வையுடன் கடந்து சென்று விடுவான்.. துச்சமாகப் பார்க்கும் அவனது பார்வையின் உதாசீனம் அவனிடம் உரிமை கொண்டாட விழையும் பெண்களைத் தள்ளி நிறுத்தி விடும்..
அந்த ரவிச்சந்திரன்தான் அவனிடம் அடைக்கலமாக வேலை தேடி வந்திருக்கும் பெண்ணிடம் வெகு சகஜமாக கலந்துரையாடிக் கொண்டிருக்கிறான்..
பணத்துக்காக அவனுடன் நெருக்கமாக இருந்த பெண்களுடன் நந்தினியை ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு என்று அவனது மனச்சாட்சி அவனைச் சாடியதில் மற்ற எண்ணங்களைத் தவிர்த்து விட்டு எதிரில் நிற்பவளை மட்டும் மனதில் நிறுத்தினான் அவன்..
"போகிறதுக்கு உங்களுக்கு இடமா இல்லை..? நீங்கள்தான் உலகம் சுற்றும் வாலிபராமே.. உத்ரா வாயைத் திறந்தாலே உங்க புராணம்தான்.. அள்ளி வீசினாளே.."
"அதாவது இல்லாததைச் சொன்னாங்கன்னு சொல்ற.."
"அநியாயம் சார் இது.. என்னை மட்டும் 'வா, போ..'ன்னு சொல்வீங்க.. அவளை மட்டும் 'அவங்க, இவங்க'ன்னு சொல்வீங்களா..?"
"உன்னைப் பார்த்தா இன்னைக்குத்தான் எல்.கே.ஜி யில சேர்ந்த பாப்பா மாதிரி தெரியுது.. அவங்க அப்படி இல்லையே.."
"நீங்க பார்த்தீங்களா..?"
"பார்க்கலைதான்.. ஜஸ்ட் ஒரு கெஸ்ஸிங்தான்.. பட்.. உன்னைப் போல மேரேஜீக்குப் பயந்துக்கிட்டு ஓடி ஒளியாம, அசாத்திய மனதைரியத்தோட மேரேஜை ஃபேஸ் பண்றாங்களே.. இதில இருந்தே உன்னை விட அவங்க மெச்சூர்ன்னு தெரியுதே.."
"சான்ஸ் கிடைச்சா போதும்.. ஓட்ட ஆரம்பிச் சிருவீங்களே.."
"ஹா.. ஹா.."
"எல்லாம் சரிதான்.. எதுக்கெடுத்தாலும் லட்சுமணன் சீதைக்குக் கோட்டைப் போட்டான்.. ராமனுக்கு ரூட்டைப் போட்டான்னு ராமாயணம் பேசி பெண்ணடிமைத்தனத்தை  என்கரேஜ் பண்றீங்க பாருங்க.. அங்கேதான் நான்சின்கா இடிக்குது.."
"இதிகாசத்தில் உள்ளதைத்தானே சொன்னேன்..?"
"லட்சுமணன் கிழிச்ச கோட்டை சீதை தாண்டியதாலே ஒன்னும் அவளுக்குத்து துன்பம் வரலை.. இந்த லட்சுமணன் சூர்ப்ப நகையின் மூக்கை அறுக்காமல் தேமேன்னு இருந்திருந்தா இந்த வில்லங்கமே வந்திருக்காது.."
"பாருடா.."
அவளது லாஜிக்கை ரசித்துச் சிரித்தான் ரவிச்சந்திரன்.. எல்லாவற்றுக்கும் ஒரு புதிய கோணத்தை வைத்திருக்கும் அந்த யௌவன சுந்தரியிடம் உரையாடுவது அவனுக்குப் பேரின்பமாக இருந்தது.. வெறும் உரையாடலில் இதுபோன்ற சுகானுபவம் கிடைக்கக்கூடும் என்பதை அன்றுதான் அவன் உணர்ந்தான்..
"என்னத்தைப் பார்க்கச் சொல்கறீங்க..?"
அவனைப் போலவே வசீகரமாக அவள் புருவங்களை உயர்த்தி இறக்கியதில் மயங்கிப் போனான்..
'என்னைப் பாரேன்..' என்று சொல்ல அவன் மனம் ஆசை கொண்டது.. அதைச் சொல்லாமல்..
"ராமாயணத்தைப் பார்க்கச் சொன்னேன்.." என்று சொல்லி வைத்தான்..
"பார்த்தது வரைக்கும் போதும் சார்.. போரடிக்குது.." என்றாள் நந்தினி..
"இப்படி வாயடிக்கிறவளுக்கும் மிலிட்டிரி டிஸிப்ளினுக்கும் சரிப்பட்டு வராதுதான்.." ஒப்புக் கொண்டான் ரவிச்சந்திரன்..
"இப்பப் புரியுதா..? ஏன் நான் அந்த மேரேஜில இருந்து எஸ்கேப் ஆகி வந்திருக்கேன்னு..?"
"புரியுது, புரியுது.. ஈஸியா லைஃப் இருக்கனும்னு நீ நினைக்கிற.. நேர்த்தியெல்லாம் உனக்குப் பிடிக்காதுதான்.."
"நேர்த்திங்கிறது அழகான விசயம் சார்.. கட்டுப் பாடோட அதை ஜாயின் அடிக்கக் கூடாது.."
விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள் நந்தினி.. அவளது பேச்சைக் கவனிக்காமல் அசையும் 

அவளது உதடுகளையே ஆழ்ந்து பார்க்க ஆரம்பித்தான் ரவிச்சந்திரனாகப்பட்ட அந்த 

உள்ளம் கவர் கள்வன்



 
Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -19
எண்ணியிருந்தது ஈடேற -19
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s320/8_Part%2B-%2B1.jpg
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy