எண்ணியிருந்தது ஈடேற -17

                                    17 ரயில் கிளம்பி விட்டது.. ஓடிப் போன டூப்ளிகேட் ரவிச்சந்திரன் எங்கே போயிருப்பான் என்று யோசித்த...


                                    17


ரயில் கிளம்பி விட்டது.. ஓடிப் போன டூப்ளிகேட் ரவிச்சந்திரன் எங்கே போயிருப்பான் என்று யோசித்தாள் நந்தினி.. எங்கே போயிருந்தால் அவளுக்கென்ன என்ற எண்ணம் வந்தது.. தனித்த ரயில் பயணத்தின் பயமின்றி அவள்தான் மிலிடிரிக் கம்மாண்டர் போன்ற கடுகடு முகத்துக்காரனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறாளே..
'அவனுக்கு இவன் கோடி மடங்கு பெட்டர்..'
அவனைப் போல இவன் ரோமியோத்தனம் காட்டவில்லை.. கடலை வறுக்கவில்லை.. தொண தொணக்கவில்லை.. ஆர்ட்டின் அம்புகளை ஏவி விடவில்லை.. தூண்டில் பார்வையை வீசவில்லை..
லேப்டாப்பை விரித்து வைத்து கீபோர்டை தட்டி எதையோ டைப் அடித்துக் கொண்டிருந்தான்.. அவனிடம் வேலை பார்க்கப் போகிறாளே என்ற நினைவில்..
"மே ஐ ஹெல்ப் யு..?" என்று தயக்கத்துடன் கேட்டு வைத்தாள்..
அசைவில்லாமல் விழிகளை மட்டும் உயர்த்தியவனின் பார்வையில் கேலி இருந்தது..
"நானே டூப்ளிகேட்.. எனக்கு ஹெல்ப் பண்ணினா தப்பாகிறாதா..?"
'இவன் இதையே சொல்லிக் காண்பிக்கப் போகிறான்..'
நந்தினிக்கு மொட்டைச் சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.. எதிரிலிருப்பவன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததில் உடலில் நடுக்கம் பரவியது.. அவனைப் பார்த்தால் தானே பிரச்னை.. பார்க்காமல் இருந்து விடலாமே என்று ஜன்னலின் கண்ணாடிக் கதவில் பார்வையை பதிக்க முயன்றாள் வெளியே கொட்டிக் கொண்டிருந்த மழை ஈரத்தில் புள்ளிப் புள்ளியாக நீர்த்துளிகள்
ஒன்றுகூடி மறைந்ததில் வெளியேயும் வேடிக்கை பார்க்க முடியவில்லை.. அதற்காக திரும்பி விட முடியுமா..? அவன்தான் அவள்மீதிருந்த பார்வையை இம்மியளவும் நகர்த்தாமல் அவளையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தானே..
என்ன ஆனாலும் சரி.. அவன் உட்கார்ந்திருக்கும் திசைப் பக்கம் பார்த்து விடவே கூடாது என்ற கங்கணம் கட்டிக் கொண்டவளாக மழைத்துளிகள் அடர்ந்திருந்த கண்ணாடிக் கதவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி..
நீ என்னை உற்றுப் பார்த்தால் நான் ஜன்னலின் கண்ணாடிக் கதவை உற்றுப் பார்ப்பேன் என்று சவால் விடுவதைப் போல இருந்தது அவள் செயல்..
குழந்தைத்தனமான அவளது பிடிவாதத்தை ரசிப்பதைப் போல அவன் முகத்தில் ஓர் சுவராஸ்யம் தோன்றியது.. எதிரில் இருப்பவளின் எழிலில் பார்வையைச் செழுத்தினான்.. அவனது ரசிப்பை அவள் உணர்ந்துதான் இருந்தாள்.. டூப்ளிகேட் ரவிச்சந்திரனின் ரோமியோ பார்வையைப் போல இல்லாத உறுத்தாத ரசிப்பு இது என்ற சிலிர்ப்பு மனதில் ஓடித் தொலைத்து அவள் மனதை சலனப்படுத்தியது..
"இது பனிகாலம்.." என்றான் அவன்..
எதற்காக இதைச் சொல்கிறான் என்று புரியாமல் அவன் பக்கம் பார்வையைத் திருப்பி விட்டாள் அவள்.. பார்த்து விட்டாயா என்ற வெற்றி மின்னல் அவன் கண்களில் வந்து போனதோ என்று அவளுக்குச் சம்சயமாக இருந்தது.. அதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டுமானால் அவன் கண்களை உற்றுப் பார்த்தாக வேண்டம்.. தீட்சண்யம் மிகுந்த அவன் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க அவளால் முடியுமா..?
'அப்பாடி..' அவளுக்கு மலைப்பாக இருந்தது..
'எப்படியாப்பட்ட பார்வை இது...! எதிரில் இருக்கிறவங்கள துளைச்செடுக்கிற பார்வை.. மனசை சல்லடையாக்கி சலித்து அதில இருக்கிறதை தூண்டித் துருவுகிற பார்வை.. இந்தப் பார்வையை எதிர்நோக்கற சக்தி எனக்கில்லை..'
இருந்திருந்து இப்படியாகப்பட்ட ஒருவனிடமா அவள் வேலைக்குச் சேர வேண்டும் என்றிருந்தது அவளுக்கு..
ஒளியத் தெரியாதவள் போலிஸ் டி.ஜி.பி வீட்டில் ஒளிந்தாளாம்.. அந்தக் கதையாய் அவள் கதை ஆகி விட்டதே..
அவளைத் திரும்பிப் பார்க்க வைக்கச் சொன்னானோ.. இல்லை.. வேறு கழுதைக்குச் சொன்னானோ.. அவனது இறுக்கமான வாயைத் திறந்து இரண்டு வார்த்தை முத்துக்களைச் சொல்லி விட்டான்.. அதற்கு அவள் பதில் சொல்லாவிட்டால் எஜமான
குற்றம் ஏற்பட்டு விடாதா..?
அவன் முதலாளி.. அவள் அவனிடம் வேலை பார்க்கப் போய் கொண்டிருப்பவள்.. முதலாளியின் வார்த்தைகளுக்கு அவள் செவி வாய்க்கவில்லை என்று ஆகிவிடாதா..?
இன்ன பிற காரணங்களால் அவள் தனது செம்பவள வாய் திறந்து..
"என்ன சொன்னீங்க..?" என்று கேட்டு வைத்தாள்..
ஓர் நொடி அமைதி நிலவியது.. அவன் பதிலேதும் சொல்லாமல் லேப்டாப்பில் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.. நந்தினி உதாசீனப்படுத்தப் படுவதைப் போல உணர்ந்தாள்..
'பிறகு என்ன கழுதைக்கு என் கூடப் பேசினானாம்.. இவன் பேசினா நான் பதில் பேசனும்.. நான் பேசினா இவன் பதில் பேச மாட்டானா..?' நந்தினிக்குள் சினம் துளிர்த்தது..
வலியவரிடம் சினத்தைக் காண்பிக்க முடியாது என்பது ஒரு புறமிருக்க.. சினத்தைக் காட்டி போடா நீயாச்சு, உன் வேலையாச்சு என்று தூக்கிப் போட்டு விட்டுப் போகக்கூடிய நிலையில் நந்தினி அப்போது இல்லை என்ற தன்னிரக்கம் மறுபுறம் அவளது மனதை வாட்டியது..
நந்தினி ஒளிந்து வாழ ஒரு பாதுகாப்பான இடம் தேவை.. அதை ரவிச்சந்திரன் கொடுக்கவிருக்கிறான்.. கூடுதலாக அவன் பெண்களிடம் வழியாதவனாக இருப்பது நந்தினிக்குப் பாதுகாப்புத் தானே என்ற எண்ணம் வந்ததில் நந்தினியின் மனம் சற்றுச் சமாதானமானது..
இருந்தாலும் அவளது பேச்சை சட்டை செய்யாமல் அவன் லேப்டாப்பைப் பார்க்க ஆரம்பித்ததில் ஏற்ப்பட்ட மனச்சடைவில் மறுபடியும் கண்ணாடிக் கதவின் மழைத் துளிகளைப் பார்க்க ஆரம்பித்தாள்..
இப்போது அவன் அவளைப் பார்த்தான்.. ஓரக் கண்ணால் அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்த நந்தினியின் உடலில் விறைப்பு வந்தது.. அவளை அவன் சட்டை செய்ய மாட்டானாம்.. அவள் மட்டும் அவன் திரும்பிப் பார்த்து விட்டால் விழுந்தடித்துக் கொண்டு என்னங்கி எஜமான் என்று அவனைப் பார்க்க வேண்டுமாம்..
'இதுக்கெல்லாம் வேற ஆளைப் பார்.. நான் நந்தினி..! கோடிஸ்வரன் ஒருத்தன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான்.. எனக்கு அவனைப் பிடிக்கலைங்கிற
ஒரே காரணத்துக்காக பிடிக்காத கல்யாணத்தில இருந்து தப்பிக்க ஓடி ஒளிஞ்சுக்கிட்டு இருக்கேன்.. உன்கிட்ட வேலை பார்க்க வந்தா நீ இம்புட்டுப் பந்தாக் காட்டுவியா..?'
அவளது மடித்துக் கடித்த உதடுகள் பிரதிபலித்த பிடிவாதத்தை ஊன்றிப் பார்த்தான் அவன்.. அவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே பார்க்காததைப் போல பாவனை செய்ததில் அவன் இதழ்களில் சிறு இளநகை தோன்றியது..
'எதுக்குச் சிரிக்கிறானாம்..? இவனுக்கு என்னைப் பார்த்தா கைப்புள்ள போல தோணுதா..?'
கோபத்துக்குப் பதில் அவளுக்கு கவலை வந்து தொலைத்தது.. பாகுபலி போல ஒரு திடகாத்திரமான ஆறடி உயர ஆண்மகன் ஒருவன் எதிரில் உட்கார்ந்திருக்கிறான்.. அவனது பார்வை அவளைத் துளைக்கிறது.. அது தின்று விடும் பார்வையாக
இல்லாமல் அவளைத் தூண்டித் துருவும் பார்வையாக இருக்கிறது.. அவளை அவன் ரசித்துப் பார்க்கிறான்.. அந்த ரசிப்பு அவளது அழகுக்கானதல்ல.. அவளது குழந்தைத்தனத்திற்கானது என்றால் இளம் வயதுப் பெண் கவலை கொள்ள மாட்டாளா..?
'பார்க்க நல்லாத்தானே இருக்கேன்..?' அவளுக்கு சந்தேகம் வந்து தொலைத்தது..
ஜாடையாக ஜன்னலின் கண்ணாடிக் கதவில் பிரதிபலித்த அவளது உருவத்தைப் பார்த்துக் கொண்டாள்.. நன்றாக இருப்பதைப் போலத்தான் இருந்தது..
'அழகாத்தான் இருக்கேன்.. அந்த டூப்ளிகேட் என்னைப் ஃபாலோ பண்ணினானே.. வழிசல்ன்னா வழிசல்.. அப்படியொரு வழிசலை வழிஞ்சானே.. அவன் விட்ட ஜொள்ளில இந்த கம்பார்ட்மண்டே கழுவி விட்டுட்டுப் போனானே.. நான் அழகா இல்லாமலா என்னைத் துரத்திக்கிட்டு வந்திருப்பான்..?'
தன்னம்பிக்கை தலை தூக்கியது.. எதிரில் இருப்பவன் ஆணவக்காரன் என்று மனதுக்குள் அர்ச்சனை பண்ணினாள் நந்தினி..
'இவனுக்கிருக்கிற ஹெட் வெயிட்டுக்கு உலகம் தாங்காது... இதில இவன்கிட்டே நான் வேலை பார்த்தாகனும்... எப்படியெல்லாம் துன்பம் வந்து சேர்ந்து தொலைக்குது..'
அந்தத் திமிர் பிடித்தவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.. என்ன பேசித்தொலைக்கப் போகிறானோ என்று நந்தினியின் மனம் 'பதக், பதக்' என அடித்துக் கொண்டது.. இதயத் துடிப்பு அதிகரித்தது..
'ச்சை..!' அவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது..
'விதிடா சாமி..! ஒரு வார்த்தைப் பேசறதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது.. இந்த லட்சணத்தில இவன்கிட்ட நான் வேலை பார்த்தாகனும்.. எப்படித்தான் குப்பை கொட்டப் போறேனோ.. தெரியலையே.. காலக் கொடுமை..! இப்படியுமா ஒரு மனுசன் பிளட் பிரசரை எகிற வைப்பான்..? இவன் நிமிர்ந்து பார்த்தாலே 'திக், திக், திகில்' ன்னு இருக்கு.. மர்மக் கதை தோத்துப் போயிடும்.. அப்படி அலப்பறை பன்றான்.. இந்தக் கர்வம் பிடிச்சவன் எந்த நேரத்தில என்ன சொல்லித் தொலைப்பானோங்கிற பயத்திலேயே பாதி உயிர் குறைஞ்சிரும் போல இருக்கே..'
அவன் அப்படித்தான் அமர்த்தலாகப் பேசி வைத்தான்..
"இந்தக் கோச்சில நீங்களும் நானும் மட்டும்தான் இருக்கோம்.."
'இதை எதுக்குச் சொல்லி வைக்கிறான்..?' அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.. பயத்துடன் அவனைப் பார்த்தாள்.. அந்தப் பார்வையில் அவன் முகம் கடுகடுத்தது..
"கற்பனைக் குதிரையை எக்குத்தப்பாய் பறக்க விடவேணாம்.." எரிச்சலுடன் சொன்னான்..
"என்.. என்.. என்து..?" வார்த்தைகளில் அவள் தந்தியடித்தாள்..
"ரிலாக்ஸ் யுவர் ஷெல்ப்.. நான் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறவனில்லை.. அண்டர்ஸ்டாண்ட்..?"
"அண்டர்ஸ்டாண்ட்.." நிம்மதியாக மூச்சு விட்டாள்..
"உங்களை ரேப் பண்ற உத்தேசம் எனக்குக் கிடையாது.."
"என்னது..?" மறுபடியும் அவள் அலறினாள்..
இத்தனைப் பட்டவர்த்தனமான தன்னிலை விளக்கத்தை அவள் சத்தியமாக எதிர்பார்த்திருக்க வில்லை.. எந்த விதமான நாகரிகப் பூச்சுக்களின்றி நெருஞ்சி முள்ளைப் போல அவன் பேசி வைத்ததில் வெளிப்பட்ட முரட்டுத்தனம் அவளை மருள வைத்தது..
"என்ன 'என்னது..?' எடுத்ததிற்கெல்லாம் என்னதுன்னு அலறினிங்கன்னா வேலைக்கு ஆகாது.. இந்த பர்ஸ்ட் கிளாஸ் கோச்சில நீங்களும் நானும் மட்டும்தான் இருக்கிறோம்ங்கிறது தானே உண்மை..? அது உங்களுக்குத் தெரிந்த சங்கதிதானே..? கேசுவலாத்தானே டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க..? அதை வாய் விட்டுச் சொன்னா மட்டும் பதட்டம் ஏன் வருது..?"
'அதுதானே..' என்று மனம் கேட்ட போதும் நந்தினியால் இயல்பாகி விட முடியவில்லை..
அது தெரிந்த சங்கதிதான் என்றாலும் இந்தக் கோச்சில் நீயும் நானும் மட்டும்தான் இருக்கிறோம் என்ற தெரிந்த சங்கதியை எதற்காக அவன் வாய் விட்டுச் சொல்ல வேண்டும்..? அதற்கான அவசியம்தான் என்ன..?
"எதிரில் இருக்கிறவன் ஒரு வார்த்தை சொன்னா காதில் விழுகாததைப் போல என்ன சொன்னீங்கன்னு கேட்கிறது என்ன பழக்கம்..? நான் என்ன ஆறு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கமிருந்தா சொன்னேன்..? ஒரே கோச்சில எதிர் சீட்டிலதானே உட்கார்ந்திருக்கேன்..? இங்கே நீங்களும் நானும் மட்டும்தானே..? கூட்டமிருந்தாலும் அவங்க சளசளன்னு பேசற பேச்சுச் சப்தத்திலே என் பேச்சு காதில விழலைன்னு சொல்லலாம்.. அதுவுமில்லையே.. இதைத்தான் சொல்ல வந்தேன்.. அதுக்குள்ளே மேடம் 'என்னது'ன்னு அலறி வைக்கறீங்க.. உங்களை வேலைக்கு அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன் பாருங்க. என்னைச் சொல்லனும்.. தேவைதான் எனக்கு.."
தயவு தாட்சண்யம் பார்க்காத அழுத்தமான அவனது வார்த்தைகள் அவள் அவனுக்குத் தேவையில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தின.. அவளது முகம்
கன்றி விட்டது.. அடுத்தடுத்து அவன் முன்பு தலை குனிய நேர்வதை உணர்ந்து மனதுக்குள் புழுங்கினாள் அவனிடம் வேலை பார்ப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கப் போகிறது என்பது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது.
'தப்பிக்க மார்க்கமில்லை..'
இமைகளைச் சிமிட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.. குற்றம் புரிந்து விட்டக் குழந்தையின் முக பாவனையை அவளிடம் கண்டும் அவன் இரக்கம் கொள்ளவில்லை.. கறாராகப் பேசினான்..
"எல்லோரும் உங்களுக்குத் தகுந்ததைப் போலப் பேசனும்னு எதிர்பார்க்காதீங்க.. பிராக்டிகல் லைபில அது நடக்காது.. மத்தவங்களுக்குத் தகுந்ததைப் போலப் பேசிப் பழகுங்க.. அதுதான் உங்களுக்கு நல்லது.. அண்டர்ஸ்டாண்ட்..?"
அவனது அதிகாரத்தில் அவளுக்கு அழுகையே வந்து விட்டது... முதல் சந்திப்பிலேயே அவளை அழுக வைப்பவன் போகப் போக எப்படியெல்லாம் வறுத்தெடுக்கப் போகிறானோ என்ற பயம் அடி மனதை ஆட்டிப் பார்த்தது..
"நீங்களா ஒரு முடிவுக்கு வருவது.. மனதில நினைக்கிறதையெல்லாம் யோசிக்காம பேசி விடுவதுன்னு இருக்கிற உங்க நேச்சரை மாத்திக்கனும்.. இல்லைன்னா என்னிடம் வேலை பார்ப்பது கஷ்டம்.."
'இருந்தா மட்டும் உன்னிடம் வேலை பார்க்கிறது இஷ்டமாகிடுமா..?'
நந்தினி உதட்டைச் சுழித்தாள்.. ரவிச்சந்திரனின் பார்வை சுழித்த அவளது உதடுகளில் மையமிட்டது.. அவன் வில்லன் என்பதை மறந்து நந்தினியின் முகம் சிவந்தது..
"என்ன..?"
அவன் புருவங்களை உயர்த்தினான்.. அந்த வசீகரத்தில் ஈர்க்கப்பட்ட நந்தினி ஓர்நொடி அவனை அபிமானத்துடன் பார்த்து விட்டாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -17
எண்ணியிருந்தது ஈடேற -17
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s320/8_Part%2B-%2B1.jpg
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera-17.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera-17.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy