எண்ணியிருந்தது ஈடேற -12

                                      12 கடல்காற்று முகத்தில் படிந்தது.. பகல் நேரத்து மெரினா கடற்கரை சந்தடிகளில்லாமல் அழகான அமைதியுட...

                                      12


கடல்காற்று முகத்தில் படிந்தது.. பகல் நேரத்து மெரினா கடற்கரை சந்தடிகளில்லாமல் அழகான அமைதியுடன் ஆளை ஈர்த்தது.. சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்த வெயிலின் வெம்மை மழை மேகங்களால் மாறி இதமான குளிர் வெயிலாய் மேனியை வருடிக் கொடுத்தது.. கடல் நீரில் கால் பதிய நின்றிருந்தாள் நந்தினி.. சற்றுத் தொலைவில் எதற்காக சென்னைக்கு வந்திருக்கிறோம் என்பதை மறந்தவளாக வினித்தின் மார்பில் சாயாத குறையாக ஒட்டி உறவாடி பேசிக் கொண்டிருந்த உத்ராவுக்கான தனிமையைக் கொடுத்து தள்ளி நடந்தாள்..
வினித்துடன் விரல்கள் பிணைய நின்றிருந்த உத்ரா என்ன பேசிக் கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை.. வினித்தைக் கடித்துத் தின்று விடுவதைப் போல அத்தனை ஆசையுடன் பார்த்தாள்.. இதுபோன்ற காதல் எந்த ஆண்மகனின் மீதாவது தனக்கு ஏற்படுமா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் நந்தினி.. விடை கிடைக்கவில்லை..
வினித்தும் சும்மா இல்லை.. உத்ராவின் பார்வைக்கு சற்றும் குறையாமல் அவளை மேய்ச்சல் நிலம் போல பார்த்து வைத்தான்.. உத்ரா அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தபடி பேசினால் அவன் நொடிக்கொரு முறை அவளது மூக்கைக் கிள்ளி, காதைத் திருகி, நெற்றி வகிட்டில் முகத்தைப் பதித்து என்று சேஷ்டைகள் பலவற்றை செய்து கொண்டிருந்தான்..
காதலித்தால் இது போல எல்லாம் செய்ய வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.. அதுபற்றி அவளுக்கொன்றும் தெரியவில்லை.. அவளது பட்டறிவில் இதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை.. முன்னே பின்னே காதலித்திருந்தால் தெரிந்திருக்கும்.. அவளுக்குத்தான் அதற்கான வாய்ப்புக் கிட்டவேயில்லையே.. பரிச்சயமில்லா காதல் உணர்வுகளைப் பற்றி அவளால் அவதானிக்க முடியவில்லை..
"ம்ப்ச்.."
"சும்மாயிருங்க.."
"நந்தினி இருக்கா.."
"நீங்க இருக்கீங்களே.."
இந்த நான்கு வார்த்தைகள்தான் மாறிமாறி நந்தினியின் காதுகளில் விழுந்தன.. நந்தினி இருப்பதற்கும் வினித்தை நீங்க இருக்கீங்களே என்று உத்ரா சொல்வதற்கும் என்ன சம்பந்தம் என்று ஒரு மண் துகளும் புரியாததினால் கடலலையை வெறித்தாள் நந்தினி..
'இன்று இங்கே.. நாளை எங்கோ..?'
அவளது மனம் கலங்கியது.. உத்ராவின் வீட்டில் உறவினர்களின் கலகலப்பான பேச்சுக்கு நடுவே இருந்த மனதிடம் கரைவதைப் போல இருந்தது.. நந்தினி கலவரமாக உணர்ந்தாள்..
இனியேதும் செய்ய முடியாது.. தஞ்சைக்குத் திரும்புவது ஒன்றும் பெரிய விசயமில்லை.. உத்ராவிடம் சொன்னால் சந்தோசப் பட்டுத்தான் போவாள்.. சரியான முடிவு என்று கை குழுக்கி வழியனுப்பி வைப்பாள்.. அங்கேதான் பிடிக்காத திருமணம் நந்தினிக்காக காத்திருக்கிறதே..
"போகலாமா நந்தினி..?"
வினித்துடன் கொஞ்சிப் பேசி முடித்து விட்டவளாக உத்ரா அழைத்தாள்.. நந்தினி திரும்பிப் பார்த்து தலையசைத்தாள்.. வினித் நட்புடன் சிரிக்க பதிலுக்கு சோகையாக சிரித்தாள்..
"பயப்பட வேண்டாம் சிஸ்டர்.. எனக்குத் தெரிந்த இடத்தில்தான் வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. நீங்க பத்திரமா இருக்கலாம்.. நம்பிக் கிளம்புங்க.."
வினித்தின் ஆறுதலான வார்த்தைகளில் நந்தினியின் மனக் கலவரம் சற்று குறைவதைப் போல இருந்தது.. மனக் கிலேசம் அகலாதவளாக தலையசைத்தவளின் விழிகளில் தெரிந்த மருட்சியில் வினித் உத்ராவைப் பார்த்தான்..
"ரொம்ப பயப்படறாங்களே உத்ரா.." என்றான்..
"ரெண்டு நாளா இந்தக் கதைதான்.. பட் நோ அதர் வே வினித்.. இவ தஞ்சாவூருக்குத் திரும்பிப் போக மாட்டேன்னு மல்லுக் கட்டறாளே.."
உத்ரா அலுத்துக் கொண்டாள்.. வினித் அவளின் கையைப் பற்றித் தட்டிக் கொடுத்ததில் தன்னால்தானே என்ற குற்றஉணர்வு நந்தினிக்கு வந்தது..
வினித் என்ன நினைப்பான்..? அவனது வருங்கால மனைவியின் மன நிம்மதி நந்தினியால் பாதிக்கப் படுகிறது என்றுதானே நினைப்பான்..?
"புது ஊருக்குத் தெரியாத மனுசங்க மத்தியிலே வேலை பார்க்கப் போகிறோமேங்கிற பயம்தான்... வேற ஒன்னுமில்லை.. ஐ கேன் மேனேஜ்.." அவசரமாகச் சொன்னாள்..
வினித் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான்.. அவனுடைய புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று விளங்காமல் உதட்டைக் கடித்துக் கொண்டாள் நந்தினி.. ஏனோ உத்ராவிடம் அவளுக்கு இருந்த தோழியெனும் பற்றுதல் கலந்த உரிமை வினித்தின் முன்னால் விலகுவதைப் போலத் தன்னை அன்னியமாக உணர்ந்தாள்..
"டிரெயினுக்கு இன்னும் டைமிருக்கு நந்தினி.. உனக்குத் தேவையான திங்ஸை பர்ச்சேஸ் பண்ணிக் கலாமா..?"
உத்ரா கேட்டதற்கு தலையை அசைத்தாள்.. உத்ரா வினித்திடமிருந்து விலகி நந்தினியின் பக்கமாக நடந்தாள்.. நந்தினிக்கு அது ஆறுதலாக இருந்தது.. அத்தியாவசித் தேவைகள் என நினைத்த பொருள்களை யோசித்து யோசித்து நந்தினி சொல்ல உத்ரா அவற்றைத் தேர்வு செய்து கொடுத்தாள்.. பில் வந்தபோது வினித் பணம் கொடுக்கப் போனான்..
"வேண்டாம்.. என்னிடம் பணமிருக்கு.." அவசரமாக தடுத்து விட்டு பணத்தைக் கொடுத்தாள் நந்தினி..
"ஏண்டி.. அவர் உன் அண்ணன் போல.. பில்லை அவர் பே பண்ணினா என்னவாம்.." உத்ரா கோபித்துக் கொண்டாள்..
"அண்ணன் போல என்ன உத்ரா.. உன் ஹஸ்பெண்ட் எனக்கு அண்ணனேதான்.. செஞ்சிக்கு கிளம்பினப்ப கை நிறைய பணம் கொடுத்துத்தான் அப்பா அனுப்பி வைச்சார்.. உன் இஷ்டம் போல செலவளின்னு சொன்னார்... இப்பன்னு இல்லை.. எப்போதுமே அப்பா தேவைக்கு அதிகமாவே தான் பணம் கொடுப்பார்.. திடிர்ன்னு செலவு வந்திட்டா என்ன செய்வேன்னு கேட்பார்.."
தந்தையின் நினைவில் நந்தினியின் கண்கள் கலங்கின.. அதை வினித் பார்த்து விடக் கூடும் என்று அவசரமாக இமைகளைச் சிமிட்டிக் கண்ணீரைத் தடுத்தபடி உத்ராவிடம் சிரித்தாள்..
"உன் வீட்டில என்னைப் பார்ஸைத் தொட விட்டியா..? செலவே இல்லையேடி.. அப்பா கொடுத்த பணம் அப்படியே இருக்கு.. டிரெயின் டிக்கெட்டை அண்ணனே ரிசர்வ் பண்ணி வைத்திருக்கார்.. இந்தச் செலவையாவது நான் செய்ய வேணாமா..?"
"எப்படிச் சமாளிக்கிறான்னு பாருங்க.."
தோழியின் தோள்களை அணைத்தபடி வினித்திடம் சொன்னாள் உத்ரா.. அவன் சிரித்தபடி தலையை ஆட்டி அதை ஆமோதித்தான்.. மதிய உணவுக்கு ஹோட்டலுக்குப் போனார்கள்.. உத்ராவுக்கு வேண்டியதை தேர்வு செய்து சொல்லச் சொல்லி மெனு கார்டை அவள் பக்கமாக தள்ளி வைத்தான் வினித்..
இது போல மாப்பிள்ளையை தேர்வு செய்யும் உரிமையை நந்தினியின் பக்கமாக மேகநாதன் நகர்த்தி விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..?
தன்னிரத்தில் நந்தினி மூழ்கியிருக்க.. அவளுக்கு என்ன வேண்டுமென்று கேட்டு பதில் வராததினால் அவளது கைகளைத் தட்டினாள் உத்ரா..
"எந்த உலகத்தில் இருக்கேடி.."
"என்ன உத்ரா..?"
"ஐந்து நிமிசமா உனக்கு என்ன வேணும்னு கேட்டுக்கிட்டு இருக்கேன்.. அசையாம உக்காந்திருக்க.."
"ஐ'ம் ஸாரிடி.. ஏதோ நினைப்பில இருந்துட்டேன்.."
வினித் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் தடுமாறினாள் நந்தினி.. உத்ரா இரக்கத்துடன் தோழியைப் பார்த்தாள்..
"ஸாரியெல்லாம் எதுக்கு..? எனக்கு உன் நிலைமை புரியுது.. என்ன புட் வேணும்னு சொல்லு.."
"ஏதாவது ஒன்னு.. உனக்குப் பிடிச்சதை ஆர்டர் பண்ணு.."
நந்தினியின் முகம் பார்த்து எதையோ சொல்ல முயன்றாள் உத்ரா.. வினித் உத்ராவின் விழிகளுக்குள் பார்த்து மறுப்பாக தலையசைத்தான்.. அமைதியாகி
விட்ட உத்ரா அவளுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் சொன்னாள்... ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்த வேளையில் நந்தினிக்கு ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தாள் உத்ரா.. வினித் அதில் தலையிடாமல் மௌனமாக கவனித்துக் கொண்டிருந்தான்..
"உலகத்தோட எந்த மூலையில இருந்தாலும் செல்போன் நம்மை தொடர்பில வைத்திருக்கும் நந்தினி.. தினமும் நான் பேசுவேன்.. ஆப்டர் மேரேஜ் நானும் வினித்தும் உன்னைப் பார்க்க கேரளா வர்றோம்.."
"பரவாயில்லை உத்ரா.. உங்க ரெண்டு பேரையும் இந்த அளவுக்கு தொந்தரவு பண்ணியதே போதும்.. இனியும் எனக்காக உங்க டயத்தை ஸ்பெண்ட் பண்ண வேணாம்.. நீங்க ஹனிமூனுக்கு ஏதாவது ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போகிறதுதான் பெட்டர்.. இந்த அளவுக்கு செய்ததே அதிகம்.."
"முட்டாள் மாதிரி பேசாதேடி.. அதிகம் கம்மின்னு அளவுகோல் பார்க்கிறா.. கேரளாவுக்கு ஹனிமூன் கொண்டாட வரக் கூடாதா..? அதுவும் டூரிஸ்ட் ஸ்பாட்தாண்டி.. கல்யாணம் ஆனவுடன் மறுவீட்டு விருந்து அது இதுன்னு சுத்திக்கூட்டமா இருக்கும்.. உன்னைப் பார்க்க வர முடியாது... ஹனிமூனுக்கு யாரும் சுத்தி வளைத்து ஒட்டிக்கிட்டு.. கூட வர மாட்டாங்க.. அந்தச் சாக்கில உன்னைப் பார்க்க ஓடி வந்திரலாம்ல்ல.."
உத்ராவின் கண்சிமிட்டலில் உயிர்த்தாள் நந்தினி.. கேரளாவில் அவள் தனியாக இருந்தாலும் அடிக்கடி உத்ரா அவளைப் பார்க்க வருவாள் என்பதில் ஓர் பாதுகாப்பு உணர்வு அவள் மனதில் படிந்தது..
தான் இத்தனை பயந்தவளா என்ற கேள்வி அவள் மனதில் வந்தது.. யோசித்துப் பார்த்தபோது அது உண்மை என்பது அவளுக்குப் புரிந்தது.. சுதந்திரம் வேண்டும் என்பதெல்லாம் சும்மா.. எப்போதும் கும்பலின் மத்தியில் பாதுகாப்பாக இருப்பதையே அவள் விரும்பியிருக்கிறாள்.. தனித்துப் பயணித்ததில்லை.. தனித்து இருந்ததில்லை என்ற உண்மை இப்போது விளங்கியது..
தஞ்சையில் மூச்சு முட்டுகிறது என்று சென்னைக்குப் படிக்கப் பறந்தவர் தனியே ஊர் சுற்றியதில்லை... விடுமுறை நாள்களில் தோழிகளுடன் வெளியே போனாலும் விளக்கு வைப்பதற்குள் ஹாஸ்டலுக்குத் திரும்பி விடுவாள்.. ஹாஸ்டலின் விதிமுறைகளை மதித்து நடக்கும் ஒரே மாணவி நந்தினி மட்டும்தான் என்று ஹாஸ்டல் வார்டன் மெச்சி மற்ற மாணவிகளின் காதுகளில் புகையை வரவழைப்பாள்... வயிற்றெரிச்சல் படும் தோழிகள் பகைவர்களாக மாறி நந்தினியிடம் சாமியாடி அவளைத் தோப்புக்கரணம் போட வைப்பார்கள்..
இதையெல்லாம் யோசித்துத்தான் அவளுடைய அப்பா அவளைக் கேட்காமலே திருமணத்தை நிச்சயித்து விட்டாரோ.. பயந்த சுபாவம் கொண்டவளுக்கு முரட்டுத்தனமான கணவன்தான் பாதுகாவலாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டாரோ..
இந்த எண்ணம் மனதில் தோன்றியதும் நந்தினியின் பயம் நாலுகால் பாய்ச்சலில் ஓடோடிப் போனது..
'எனக்கென்ன பயம்..? நான் தைரியமா இருப்பேன்..'
மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.. பயமாய் இருக்கிறது என்று உத்ராவிடம் அனத்துவதை நிறுத்தி விட்டாள்..
ஆர்டர் கொடுத்த உணவு வகைகள் வந்து விட்டன.. உத்ராவின் பக்கமாக தட்டுக்களை நகர்த்தி வைத்தான் வினித்.. தனிப்பட்ட அவன் கவனிப்பில் உத்ரா சொந்தத்துடன் அவனைப் பார்த்து விட்டு நந்தினிக்காக தட்டுக்களை அவள் பக்கம் நகர்த்தி வைத்தாள்.. வினித்தும் உத்ராவும் ரகசியப் பார்வைகளும் தீண்டல்களுமாக சந்தோசமாக இருந்தார்கள்... அவர்களைப் பார்க்காததைப் போலத் தட்டிலேயே கவனமாக உணவு வகைகளை காலி செய்து முடித்தாள் நந்தினி.. கைகழுவ எழுந்தவள் உத்ரா சாப்பிட்டு முடித்து விட்டதைப் பார்த்ததும் தயங்கி நின்றாள்..
"வினித் இன்னும் சாப்பிட்டு முடிக்கலைடி.. நீ போ.. நான் அப்புறமா ஹேண்ட் வாஷ் பண்ணிக்கிறேன்.." என்று சொல்லி விட்டாள் உத்ரா..
தனித்துக் கை கழுவப் போன நந்தினிக்கு இதைப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது.. உத்ராவை அவள் கூப்பிட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது.. வினித்தும் அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை எப்படி அவள் மறந்தாள்..? வினித்திற்கும் உத்ராவிற்கும் இடையே நிலவிய அன்யோன்யம் அவள் மனதில் ஏக்கத்தை விதைத்தது.. இது போல மணவாழ்க்கை அவளுக்கு அமைந்திருந்தால் இப்படி அனாதைபோல முன் பின் தெரியாத ஊருக்கு ஓடி ஒளிய வேண்டிய அவலம் அவளுக்கு நேர்ந்திருக்காதே என்ற எண்ணம் வருவதை அவளால் தடுக்க முடியவில்லை..
அடுத்துச் செய்ய எந்த வேலையும் இல்லாததால் அவர்கள் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனுக்கு போனார்கள்.. கைக்கடிகாரத்தைப் பார்த்த வினித் உத்ராவிடம்..
"மங்களூர் எக்ஸ்பிரஸ்.. வர ஒன்னவராகும் உத்ரா.. நாம வெயிட் பண்ணியாகனும்.." என்றான்..
பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் அவர்கள் மூவரும் சாய்ந்து அமர்ந்தார்கள்.. வினித் உத்ராவின் பக்கமாக நெருங்கி ஒட்டி உட்கார்ந்து அவள் தோளைச் சுற்றிக் கை போட்டான்.. அந்த நெருக்கத்தில் உத்ரா கிளர்ந்திருக்க வேண்டும்.. நந்தினி அருகிலிருப்பதை மறந்தவளாக அவளும் நகர்ந்து வினித்தின் மீது
அப்பி அவன் மடியில் கை வைத்து தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.. ரகசியம் பேசுவதைப் போல அவள் காதோரம் முகத்தை புதைத்த வினித் அவள் கூந்தலின் வாசனையை முகர்ந்தபடி அவளது காதில் முத்தமிட்டான்.. உத்ராவின் இதழ்கள் வினித்தின் தோளில் முத்தமிட்டன..
நந்தினிக்குச் சங்கடமாக இருந்தது.. அவர்களைப் பார்த்தும் பார்க்காததைப் போல எவ்வளவு நேரம்தான் இருப்பது..?
"டிரெயினில் படிக்க மேகசினும், குடிக்க வாட்டர் பாட்டிலும் வாங்கிட்டு வந்துடேறன் உத்ரா.."
அவர்களைத் திரும்பிப் பார்க்காமல் எழுந்து பிளாட் பாரத்திலிருந்த கடைக்கு நடந்து விட்டாள்.. அங்கு நின்றிருந்தவன் அவளைப் பார்த்ததும்..
"ஹலோ.." என்றான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -12
எண்ணியிருந்தது ஈடேற -12
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s320/8_Part%2B-%2B1.jpg
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera-12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera-12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy