எண்ணியிருந்தது ஈடேற -11

                                     11 குலதெய்வக் கோவிலுக்கு அங்காளி , பங்காளிகளுடன் போயித்தான் கல்யாணப் பத்திரிக்கையை வைக்க வேண்டு...

                                     11


குலதெய்வக் கோவிலுக்கு அங்காளி, பங்காளிகளுடன் போயித்தான் கல்யாணப் பத்திரிக்கையை வைக்க வேண்டும் என்ற நியதியை யார் வகுத்தார்களோ தெரியவில்லை.. உத்ராவின் வீட்டில் உறவு ஜனங்களின் கும்பல் அதிகமாகியிருந்தது..
கலவையான பேச்சுக்களும், சிரிப்புக்களும் படு சுவராஸ்யமாக காதுகளில் விழுந்தன..
"ம்ஹீம்.. மழை வெள்ளம் வந்தாலும் வந்தது.. கடை முழுக்க தண்ணி ரொம்பி ஏகப்பட்ட நஷ்டம் மாப்பிள்ள.. இன்னும் எழுந்த பாடா இல்ல.." என்று யாரோ
ஒரு உறவினர் பக்கத்திலிருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்..
"இங்கே பாருடா.. சொந்த கதையை சொல்றேன் பேர்வழின்னு இவன் நொந்த கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கான்.." என்று எங்கிருந்தோ மறைவாக ஒரு குரல் ஒலித்தது..
புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு வேண்டாத ஆள் போல.. புலம்பிக் கொண்டிருந்தவர் சுற்று முற்றும் பார்த்தார்.. எவரென்று கண்டு பிடிக்க முடியவில்லை..
"அட.. யாருய்யா அது..? என் பேச்சுக்கு எசப்பேச்சு பேசறது..?" என்று சவுண்டு விட்டும் பார்த்தார்..
கசகச பேச்சுச் சப்தத்தில் இவர் சப்தம் எடுபட வில்லை..
"சொந்த பந்த குடும்ப அரசியல்ல இதெல்லாம் சகஜம்டி.." கண்சிமிட்டிச் சிரித்தாள் உத்ரா..
நந்தினிக்கும் சிரிப்பு மூளத்தான் செய்தது.. உத்ராவின் குடும்பம் கார்களிலும் வேன்களிலும் நிரம்பி இந்தப் பக்கம் நகர்ந்த மறுநிமிடம் அவளும் உத்ராவும் சென்னைக்கு கம்பி நீட்டியாக வேண்டும்..
அந்த படபடப்பு மனதை அரித்து மயக்கத்தை வரவழைத்தது.. அதிலிருந்து விடுபட மற்றவர்களின் அரட்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.. மனம் அதில் லயிக்கவில்லையென்றாலும் படபடப்பு சற்றுக் குறைந்தது..
உத்ராவின் அத்தை மகன்கள் என்று இரண்டு இளைஞர்கள் வந்திருந்தார்கள்.. இருவருமே திருமணமாகப் போகும் மாமன் மகளை போட்டி போட்டு சைட் அடித்தார்கள்.. சொந்தத்தில் திருமணம் செய்து கொடுக்கக் கூடாதென்று கண்டு பிடித்துக் சொன்ன அறிவியலின் மீது கொலை வெறியாக இருந்தார்கள்..
"பாவம்டி.." அவர்கள் மீது பரிதாபப் பட்டாள் நந்தினி..
"பாவமா..? யாரு..? இவனுகளா..? நீ வேற.. இவனுக தெய்வீகக் காதலைப் பத்திக் கேட்டேன்னு வை.. இப்படிச் சொல்லமாட்ட.."
"நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்க உத்ரா.."
"சரியாப் புரிஞ்சுக்கனும்னா இவனுக பேசறதைக் கவனி.. அதுக்கப்புறமா பரிதாபப் படு.."
அந்த இளைஞர்களின் பேச்சுக் காதில் விழுவதைப் போல பால்கனியை ஒட்டி நந்தினியை நிற்க வைத்தாள் உத்ரா.. போர்டிகோவில் நின்று கொண்டிருந்தவர்களின் பேச்சுக்குரல் தெளிவாக காதுகளில் நுழைந்தது..
"என்னடா இப்பவே இப்படி வெளிலடிக்குது.." என்றான் ஒருவன்..
"மச்சினிச்சியை சைட் அடிக்கிறதைக் கண்டுக்கிட்ட பெண்டாட்டி போல உக்கிரமா இருக்குடா.." மற்றவன் வர்ணனை செய்தான்..
'கேட்டுக்க..' என்பதைப் போல பாவனை செய்தாள் உத்ரா.. உள்ளங்கையால் வாயைப் பொத்தின நந்தினியின் விழிகள் விரிந்தன..
"இதுக்கே அசந்தா எப்படி..? இன்னும் கேட்டுப் பாரு.." உத்ரா முணுமுணுத்தாள்..
"என்னடா அண்ணா.. கண்ணு சிவந்திருக்கு.. செம்மயா சரக்கடிச்சுட்டு மட்டையாகிட்டயா..?"
"இல்லைடா.. காலங் கார்த்தாலே தெருச் சண்டை.. தூக்கம் கெட்டுப் போச்சு.. காதுக்குள்ள சைரன் ஊதறதைப் போலக் கத்திக் கத்திச் சண்டை போடறாளுக.. எனக்கு வந்த கோபத்தில லெப்ட் அண்ட் ரைட் வாங்கிரனும்னுதான் எழுந்திருச்சுப் போனேன்.."
"ஒரு பிடி பிடிச்சிருப்பியே.."
"எங்கே..? சண்டை போட்டுக்கிட்டு இருந்தது எதிர்வீட்டு திவ்யாவும் பக்கத்து வீட்டு ரம்யாவும்.. வாயைத் திறக்க முடியும்ங்கிற.."
"அது முடியாதுதான்.."
நந்தினிக்கு சிரிப்பு வந்து விட்டது.. சிரிப்புச் சத்தம் கேட்டு விட்டால் இந்தியாவின் இளைய தலைமுறை அண்ணாந்து பால்கனியைப் பார்த்து விட்டு அலம்பல் காட்டி விடும் என்று ஒற்றை விரலை வாயில் வைத்து அமைதி காக்கும்படி சைகை செய்தாள் உத்ரா.. நந்தினி வாய் பொத்தி சிரிப்பை அடக்கிக் கொண்டாள்..
"ஊராடா இது..? ஒரு பிகர் கண்ணில படுதா..? இந்த ஊர் முன்னேறும்ங்கிற..?"
"எப்படி முன்னேறும்..? நானும் லோலோன்னு தெருத்தெருவாச் சுத்திப் பாத்துட்டேன்.. ஊருக்குள்ள தான் பிகர் அகப்படலை.. செஞ்சிக் கோட்டையைச் சுத்திப் பாக்கன்னு எந்தப் பச்சைக் கிளியாவது பறந்து வந்திராதான்னு நொட்டை விட்டுப் பார்த்தேன்.. ஒன்னும் தென்படலைடா.."
"வாட்.. நான்ஸென்ஸ்..? செஞ்சிக் கோட்டைக்கு ஒரு இஞ்சி இடுப்பழகி கூட வரலையா..?"
கேள்வி கேட்டவனின் தொனியில் நந்தினிக்கு புரையேறி விட்டது.. கண்களில் கண்ணீர் மல்க தள்ளிப் போய் சிரித்து விட்டு வந்தாள்.. கீழே பேச்சுக் குரல்கள் சம்பாஷனையைத் தொடர்ந்தன..
"நம்ம ஊர் ஆஸ்பத்திரியில பாம் வைச்சுட்டாங் களாம்டா.."
"என்னது..?"
"அதுக்கேண்டா நீ அலறுகிற..? நம்ம சொந்தக்காரங்க யாரும் அட்மிட் ஆகியிருக்காங்களா..? எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் அங்கே அட்மிட் ஆகலையே.. நீதானே பைக்கில இருந்து விழுந்து கை, கால்ல சிராய்ப்புன்னு அங்கே போன வாரம் அட்மிட் ஆகியிருந்தே..? எனக்குத் தெரிஞ்சு சிராய்ப்புக்கெல்லாம் அட்மிட் ஆன ஆளு நீ ஒருத்தன்தாண்டா.."
"என்னத்த அட்மிட் ஆகி என்ன பிரயோசனம்.. ரெண்டே நாள்ல டிஸ்ஜார்ஜ் பண்ணிப் பத்தி விட்டுட்டாங்களே.."
"அதுக்கேண்டா இம்புட்டு வருத்தப்படற..?"
"அந்த ஆஸ்பத்திரியில ஒரு மலையாள நர்ஸ்.. ஒல்லியா, உயரமா, சிகப்பா அழகா இருக்கும்.."
"நினைச்சேண்டா.. நீ ஆஸ்பத்திரியில அடங்கிப் படுக்கிற ஆளில்லையே.. சின்னச் சிராய்ப்புக்கு இத்தனை அலட்டல் அலட்டறானே.. ஏதோ விசயமிருக்குன்னு நினைச்சேன்.. நான் உன்னைப் பார்க்க வந்தப்ப அந்தப் பொண்ணு என் கண்ணில படலையே.."
"உன் தலையைக் கண்டதும் வேற வேலையைச் சொல்லி கண் மறைவா அனுப்பி வைச்சுட்டேன்.."
"இதில எல்லாம் செம விவரமா இருப்பியே.."
"உனக்குச் சித்தி மகனா பிறந்து தொலைச் சிட்டேனே.. விவரம் இல்லேன்னா பிழைக்க முடியுமா..?"
"அப்படிங்கிற..? அப்ப நீ அந்த கேரளத்துப் பொண்ண வல்லிய நேசிச்சு..?"
"ஒரு வகையில அப்படித்தான்.."
"சித்திக்குத் தெரிஞ்சா கட்டைய எடுத்து முதுகில சாத்துமேடா.."
ரசித்துச் சொன்னவனின் குரலில் மலையாள மஞ்சளழகியை நேசிப்பவனை மாட்டி விடும் உத்தேசம் அப்பட்டமாகத் தெரிந்தது.. கேரளத்து பைங்கிளிக்கு மலர்கணை தொடுத்தவன் அது பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை..
"ஸாரிடா அண்ணா... அம்மா கையில நான் அடிவாங்கனும்னு நீ காணற பகல்கனவு பலிக்காதுடா.." என்றான்..
"ஏண்டா பலிக்காது..?"
"நீ என்னைப் பத்தித் தப்புத்தப்பா மாமா காதில போட்டு வைச்சதினாலதான் உத்ராவை எனக்குக் கட்டிக் கொடுக்க மாட்டேன்னு மாமா சொல்லிட்டார்ன்னு அம்மாகிட்டத் திரியைக் கொழுத்திப் போட்டு வைச்சிருக்கேன்டா.. என்னைப் பத்தி நீ எது சொன்னாலும் எடுபடும்ங்கிற..?"
"அடப்பாவி.. அதான் மாமா என்னை முறைச்சு முறைச்சு பார்க்கிறாரா..? உன் அம்மா நியாயம் கேட்டாச்சா..?"
"ஹா.. ஹா.."
"ரொம்பத்தான் சிரிக்காதே.. பல்லு சுளுக்கிக்கப் போகுது.. ஆல்ரெடி நானும் என் அம்மாகிட்ட இந்த பிட்டைத்தான் போட்டு வைச்சிருக்கேன்.. அவங்களும் மாமாகிட்ட நியாயம் கேட்டாச்சு.."
"அதான் என் மாமன் உக்கிரமா முறைக்கிறாரா..? ம்ஹீம்.. மொத்தத்தில உத்ரா எனக்கும் கிடைக்கல.. உனக்கும் கிடைக்கல.."
"எனக்குக் கிடைக்கலேன்னாலும் பரவாயில்லை.. உனக்குக் கிடைக்கக் கூடாதுடா.."
"மார் தட்டிக்கிட்டது போதும்.. எனக்கும் அதே எண்ணம்தான்.. ஏண்டா.. நம்மகிட்ட இல்லாத எது வினித் கிட்ட இருக்கு..?"
தாடையைத் தடவியவன் கேட்ட கேள்விக்கு..
"நேர்மை.." என்று பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்த  உத்ரா பதில் சொன்னாள்..
அண்ணாந்து பார்த்த அத்தை மகன்களிடம் மாட்டிக் கொண்ட பதட்டம் துளியும் இல்லை.. அவர்கள் கடைந்தெடுத்த கல்லூளி மங்கன்கள் என்று உத்ரா சிலாகித்தாள்.. அவர்கள் அதைப் புகழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள்..
"கருமம்.. கருமம்.." தலையில் அடித்தபடி..
"வாடி போகலாம்.. இவனுக மலையாள அழகியையே விட்டு வைக்காதவனுக.. உன் மேல ஏரோ விட ஆரம்பிச்சுருவானுக.." என்று நந்தினியின் கையைப் பிடித்து இழுத்தாள்..
அவர்கள் அதைத்தான் செய்ய ஆரம்பித் திருந்தார்கள்.. ஒருவன் கூலிங்கிளாஸைக் கண்களில் மாட்டி போஸ் கொடுத்தான்.. மற்றவன் ரோமியோ போல தலை முடியைக் கோதி விட்டபடி தலை சாய்த்துப் பார்த்தான்..
"பக்காக் காமெடி பண்றாங்கடி.. சிரிப்புச் சிரிப்பா வருது.." என்றாள் நந்தினி..
"சிரிச்சுக் கிரிச்சு வைச்சிராதே.. அதை ரசிப்புன்னு நினைச்சிருவானுக.. ஜெகஜால கில்லாடிக.. ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுக.."
உத்ரா செல்லமாக உதட்டைச் சுழித்தாள்.. வெளியே அத்தை மகன்களை மட்டக் கேவலமாக விமரிசித்தாலும் அவள் மனதுக்குள் அவர்கள் பண்ணும் அலம்பலை அவள் ரசிக்கிறாள் என்று நந்தினிக்குத் தோன்றியது.. அடாவடி பண்ணும் முறைப்பையன்களை ரசிக்காத முறைப் பெண்கள் உண்டா என்ன..?
"என்ன உத்ரா.. கல்யாணக்களை முகத்தில அப்பியிருக்கு.. வினித்கூட போன்ல செம கடலை வறுக்கிற போல.."
உத்ராவின் பெரியம்மா பெண் கிண்டல் செய்தாள்.. முகம் சிவந்த உத்ராவைப் பார்க்க அழகாக இருந்தது.. நந்தினிக்குள் சன்னமான பொறாமை வந்தது...
அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அவளைப் பெண் பார்க்க வந்து அவளிடம் தனிமையில் பேசி அவனைப் பிடித்திருக்கிறதா என்று அவளது விருப்பத்தைக்
கேட்டு அவளை கௌரவப் படுத்தியிருந்தால் இப்போது உத்ராவின் முகத்தில் அப்பியிருக்கும் வெட்கம் நந்தினியின் முகத்திலும் அப்பியருக்குமே..
முகம் தெரியாத அவன் ஏன் நந்தினியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை..?
"கல்பனா.."
உத்ராவின் பெயரிம்மா மகளை அழைத்தபடி வந்தான் அவளது கணவன்.. கையில் ஒன்றரை வயதுப் பெண் குழந்தை பட்டு கவுனுடன் அழகாக சிரித்தது..
"மாமாதான் பிள்ளையைத் தூக்கிச் சுமக்கிற போர்ட்டரா..?" உத்ரா கண் சிமிட்டினாள்..
உற்சாகம் வரும் போதெல்லாம் உத்ரா கண் சிமிட்டுவாள்.. இந்தக் கண்சிமிட்டலை நந்தினியிட மிருந்துதான் அவள் கற்றுக் கொண்டாள்.. கலகலப்பான நந்தினி அடிக்கடி கண்சிமிட்டுவாள்.. அந்த வழக்கம் அவளிடமிருந்து உத்ராவுக்கு தொற்றிக் கொண்டது..
கற்றுக் கொடுத்தவள் கண்சிமிட்டலை மறந்து நிற்க.. அவளிடமிருந்து
அதைக் கற்றுக் கொண்டவள் நொடிக்கொரு முறை கண்சிமிட்டிக் கலகலத்துக் கொண்டிருந்தாள்..
கொழுந்தியாளின் சீண்டலில் கல்பனாவின் கணவன் கள்ளுண்ட வண்டானான்.. கண்கள் மின்ன..
"இல்லேன்னா உன் அக்கா சன்டேயில சாம்பார் சாதம் செஞ்சு போட்டு என்னைப் பழி வாங்கிடுவாளே.." என்று சிரித்தான்..
"சண்டேயில சாம்பார் சாதமா..? பிரியாணி கோவிச்சுக்காதா..?"
"அதை என்கிட்ட ஏன் கேட்கிற..? உன் அக்காகிட்டக் கேளு.. கோபம் வந்தா விதம் விதமா வயித்தில அடிக்கிறதில அவ டாக்டரேட் பட்டமில்ல வாங்கியிருக்கா.."
"சும்மா சொல்லாதீங்க அத்தான்.. எங்க அக்கா காபி போட்டா எட்டு தெருவுக்கு மணக்கும்.."
"மணக்கும், மணக்கும்.. வாசனைக்கென்னம்மா.. அதில எல்லாம் வஞ்சகம் பண்ண மாட்டா...
காபியிலதான் சர்க்கரைக்குப் பதிலா உப்பைப் போட்டுக் கொடுத்திருவா.."
"உப்புக் காப்பியா..? ஹா.. ஹா.. உங்க கல்யாண வாழ்க்கை உப்புச் சப்பில்லாம இருக்கக் கூடாதுன்னு எங்க அக்கா எப்படியெல்லாம் காபி போட்டுக் கலக்கறாங்கன்னு மெச்சிப் போவீங்களா.. அதைக் குத்தம் சொல்றீங்க.. இல்லேக்கா.."
"சரியாச் சொன்ன உத்ரா.. உப்பும் சர்க்கரையும் ஒரே கலர்ல பக்கத்துப் பக்கத்து டப்பாவில இருந்தா வித்தியாசம் தெரியுதா..?"
"அது எப்படித் தெரியும்..? ஆனாலும் அக்கா சால்ட் காபி போட்ட முதல் ஆள் நீங்கதான்.. ஹா.. ஹா.."
உத்ரா விழுந்து விழுந்து சிரித்தாள்.. நந்தினியின் பக்கத்தில் சிரிப்பைத் தொலைத்து விட்டு படு தீவிரமான சிந்தனையுடன் இருந்தவள் மனம் விட்டுச் சிரித்ததில் நந்தினி நெகிழ்ந்து போனாள்.. இத்தனை சிரிப்பையும் சந்தோசத்தையும் உத்ரா தன் மனதில் பூட்டி வைத்திருந்திருக்கிறாள்.. தோழியின் துயரத்தில் தனது சந்தோசத்தை மறந்திருந்திருக்கிறாள்... வாய்ப்புக் கிடைத்ததும் பூட்டு உடைபட்டு அணையுடைந்த வெள்ளம் போல அத்தனை சிரிப்பும் வெளியேறுகிறது..
உத்ராவின் சந்தோசத்திற்கு தடை கல்லாக நிற்காமல் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்று நந்தினி தன் மனதை திடப் படுத்திக் கொண்டாள்.. அவள் மனதிலிருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் ஓடி விட்டது..
கல்பனாவின் கணவன் எதையோ தேடுவதைப் போல சுற்று முற்றும் பார்த்தான்.. ஒன்று விட்ட சகோதரிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கைகளை விரித்தார்கள்..
"என்ன தேடறிங்க அத்தான்..?"
"முட்டிக்கிறதுக்கு மொட்டைச் சுவரு எம்புடுதான்னு தேடறேம்மா.."
"அது நம்ம வீடுகள்ல இருக்காதே உத்ரா.. உன் அத்தானோட சொந்த பந்த வீடுகளில இல்ல இருக்கும்.. நம்ம பக்க சொந்த பந்தமெல்லாம் கிரானைட் போட்ட வீடுகளையில்ல கட்டியிருக்கோம்..?"
"ஹ.. கிரானைட் சுந்தரி எதுக்காக தென்னைமர ஓட்டு வீட்டுக்காரன்மேல ஆசை வைச்சாளாம்..?"
கல்பனாவின் கணவன் சொக்கி பார்வை பார்க்க கிளீன் போல்டாகி வெட்கிச் சிவந்தாள் கல்பனா..
"ஸ்ஸ்.. சின்னப் பொண்ணுக முன்னாடி என்ன ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.."

கண்டிப்பதைப் போல குதூகலப்பட காதல் மனைவிகளால்தான் முடியும்..
 

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -11
எண்ணியிருந்தது ஈடேற -11
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s320/8_Part%2B-%2B1.jpg
https://1.bp.blogspot.com/-w-crsISfymE/XRwwB_avEFI/AAAAAAAAAqE/tbHoL044_jcZ8fEdG3PUeIk3HotOHE-GACPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/enniyirunthathueedera-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy