உன்னோடு நான் ..1

முத்துலட்சுமி ராகவன் எழுதிய ' உன்னோடு நான்..! ' நரேந்திரனின் டைரிக் குறிப்பு: இன்றைக்குத்தான் அவளை முதன் முதலாக நான் பார...

முத்துலட்சுமி ராகவன் எழுதிய
'உன்னோடு நான்..!'

நரேந்திரனின் டைரிக் குறிப்பு:

இன்றைக்குத்தான் அவளை முதன் முதலாக நான் பார்த்தேன். இப்போதுதான் பூத்த புதுமலரைப் போல அழகாக.. மென்மையாக.. இருந்தாள். மற்ற பெண்களிடம் இல்லாத எது இவளிடம் இருக்கிறது என்று நானும் யோசித்துப் பார்த்து விட்டேன். பிடிபடவில்லை. இந்த நான்கு ஆண்டுகால அளவில் நானும் எத்தனையோ பெண்களை சந்தித்திருக்கிறேன். என் நெஞ்சத்தை இவள் முகம் கிள்ளியதைப் போல வேறு முகம் கிள்ளியதில்லை. முதல் வருட மாணவியாம்.. நான் இறுதி வருட மாணவன். இடையிலிருக்கும் ஆறு மாதங்களில் அவளைக்  [ அவள் மனதை ] கவர்ந்து விடுவேனா...?

1

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள் ஹரிணி.. நிலைக் கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பம்..
'நீ அழகாய் இருக்கிறாய்..' என்று சொன்னது..
"ஹரிணி.."
அறைக்கு வெளியே சரளாவின் குரல் ஒலித்தது..
"வருகிறேன்ம்மா.."
கடைசி வினாடி ஒப்பனைகளை முடித்துவிட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்..
"ம்மா.. லேட்டாச்சு..."
பசுவை அழைக்கும் கன்றுக்குட்டி போலச் சிணுங்கும் மகளை வாத்சல்யத்துடன் பார்த்தாள் சரளா..
"இதை இப்போ சொல்லு.. என்னாலேயா லேட்டாச்சு..? ஒரு மணி நேரமாய் கத்திக்கிட்டு இருக்கேன். நீ ரூமைவிட்டு வெளியே வந்தால்தானே..."
"கிளம்ப வேணாமாம்மா..."
"உன்னால்தானே லேட்டாச்சு.. என்னால் ஒண்ணும் லேட்டாகலைல்ல.."
"எனக்கு ஒரு சப்பாத்தி போதும்.."
"தெரியுமே.. இதைச் சொல்லத்தானே.. லேட்டாச்சுன்னு முன் கூட்டியே சொல்லி வைச்சே..? எனக்கு அதெல்லாம் தெரியாது. ஒழுங்காய் நாலு சாப்பாத்தியை நீ உள்ளே தள்ளியாகனும்."
"நாலு சப்பாத்தியா..? நோ சான்ஸ்..."
"எல்லாம் சான்ஸ் இருக்கும். முதலில் செல்போனை நோண்டாம தட்டைப் பார்த்துச் சாப்பிடு..."
மகளிடம் அதட்டிக் கொண்டிருந்த சரளாவிடம்..
"சரள்.. ஐ ஹேவ் ஒன் அர்ஜன்ட் மீட்டிங்.. " என்றபடி வந்து அமர்ந்தார் கிருஷ்ணன்..
"நீங்களும் ஆரம்பிச்சுட்டிங்களா..?" சரளா அலுத்துக் கொண்டாள்..
"எதை...?"
"லேட்டாகுதுங்கிற புராணத்தை..."
"அப்படி நான் சொன்னேனாடி.. அர்ஜன்ட் மீட்டிங் இருக்குன்னுதான் சொன்னேன்.. நீ சப்பாத்தியை போடு.."
"அதானே பார்த்தேன்.. நீங்க யாரு...?"
"ஏண்டி.. இதைக் கூட தெரிஞ்சுக்காமலா.. இத்தனை வருஷமாய் என் கூட குடும்பம் நடத்தி.. மூணு பிள்ளைகளையும் பெத்துக்கிட்ட...? நான் உன் புருசன்டி.."
கிருஷ்ணன் சப்பாத்தியை விண்டு குருமாவில் தோய்த்து.. வாய்க்குள் தள்ளியபடி.. மனைவியை நிமிர்ந்து பார்த்து.. இமைகளைச் சிமிட்டினார்..
சரளாவின் முகம் குப்பென்று சிவந்து விட்டது.
'வயதுப் பெண்ணை முன்னால் வைத்துக்கிட்டு இந்த மனுஷன் பேசுகிற பேச்சைப் பாரேன்..'
முறைப்புடன் கணவனின் தட்டில் இன்னும் இரண்டு சப்பாத்திகளை எடுத்து வைத்தாள் சரளா..
"போதும்டி.. ஏன் அடுக்கிற..?"
"சாப்பிடுங்க.. என்னதான் அர்ஜன்ட் மீட்டிங் இருந்தாலும் வயிற்றுக்கு வஞ்சனை பண்ணாத ஆளாச்சே நீங்க..."
"அதுக்குத்தான் நீங்க யாருன்னு கேட்டு வைச்சியா..?"
"இல்லை.. அடையாளம் தெரியாமல்தான் கேட்டு வைச்சேன்.. ஆளைப் பாரு.."
"ஆளைப் பார்த்து மயங்கிப் போய்த்தானேடி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட...?"
'எங்கே சுற்றினாலும் இந்த மனுஷன் இந்தப் பேச்சில்தான் வந்து நிற்பார்..'
சரளாவுக்கு கணவனின் அழும்பைக் கண்டு வெளியில். கோபம் வந்தாலும்.. மனதில் அதிலொரு ரகசிய சந்தோஷம் உண்டு.
அதனால் பொய்க்கோபத்தை முகத்தில் காட்டி.. கணவனைப் பார்வையில் அரட்டினாள்..
ஒரு சாப்பாத்தி போதும் என்று அடம் பிடித்த ஹரிணி..
தகப்பனின் வம்படிப் பேச்சிலும்.. தாயின் முகச் சிவப்பிலும் கவரப்பட்டவளாய்.. நான்கு சாப்பாத்திகளையும் காலி பண்ணி முடித்துவிட்டு.. ஐந்தாவது சப்பாத்தியைக் கையில் எடுத்தாள்.
"நீயேண்டி வாயைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிற.. வேலைக்கு கிளம்புகிற உத்தேச மில்லையா..?" சரளா மகளை அதட்டினாள்.
"என்னம்மா இது..? ஒரு சப்பாத்தி போதும்ன்னு சொன்னா அதுக்கும் திட்டுகிறீங்க.. ஒழுங்காய் சாப்பிட்டால் அதுக்கும் திட்டுகிறீங்க.."
ஹரிணி குறை சொல்லிக் கொண்டிருந்த போது..
"எதுக்கும்மா அவளைத் திட்டுகிறிங்க..." என்றபடி டைனிங் டேபிளின் முன்னால் வந்து அமர்ந்தான் கார்த்திக்.
"உன்னைத் திட்ட முடியலை. அவளைத் திட்டறேன்."
என்னமோ விளம்பர மாடலைப் போல.. விரல் நகத்தில் அழுக்குப்படாமல்.. நுனி விரலால் தட்டை எடுத்து கார்த்திக்கின் முன்னால் வைத்துக் கொண்டிருந்த மருமகளை முறைத்துப் பார்த்தபடி கூறினாள் சரளா..
'பேச்சு அங்கே.. பார்வை இங்கேயா...?'
மனதிற்குள் எரிச்சல் பட்டாள் ஆஷா.. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் படு ஸ்டைலாக முடியைக் கோதி விட்டபடி.. கணவனுக்குப் பரிமாற ஆரம்பித்தாள்..
'இதை மட்டும் செய்ய வந்திடுவா.. இத்தனை வேலைகளையும் பார்க்கிற எனக்கு, என் மகனுக்கு சாப்பாடு போட மட்டும் முடியாம போயிடுமா...?'
மனம் பொரும.. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்.. கணவருக்கும்.. மகளுக்குமான மதிய உணவுப் பைகளைக் கொண்டு வந்து டைனிங் டேபிளின் மேல் வைத்தாள் சரளா..
"என் லன்ச் பேக் எங்கேம்மா...?"
மனைவியின் அழகை ரசித்தபடி தாயிடம் கேட்டான் கார்த்திக்.
"உன் பெண்டாட்டியிடம் கேளுப்பா.."
கிருஷ்ணனிடம் ஏதோ கேட்கப் போவதைப் போல வாசலுக்குப் போய் விட்டாள் சரளா..
ஆஷாவின் முகத்தில் எள்ளும்.. கொள்ளும் வெடித்தது.
"உங்க அம்மாவுக்கு இருக்கிற பார்ஷியாலிட்டியைப் பார்த்திங்களா...?" கணவனிடம் போட்டுக் கொடுத்தாள்.
"எதைச் சொல்கிற...?"
புரியாதவனைப் போல வினவினான் கார்த்திக்..
"நீங்களும் தான் சாஃப்ட்வேர் என்ஜினியர்.. உங்க தங்கையும் தான் சாஃப்ட்வேர் என்ஜினியர்.."
"அதுக்கென்னடி இப்ப...?"
"ஹரிணிக்கு மட்டும் லன்ச் பாக்ஸ் ரெடி பண்ணலாம். உங்களுக்கு பண்ணக் கூடாதா..?"
"நீயிருக்கும்போது பண்ணக்கூடாதுன்னு அம்மா நினைச்சிருப்பாங்க..."
"நீங்க உங்க அம்மாவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க.. நான் யாரு...?"
"தாய்க்குப் பின்னால் தாரம் தானேடி..."
"ஸோ.. வாட்...?"
"அம்மாவுக்கு பின்னால அவங்க எனக்கு செய்த வேலைகளை நீதான் செய்யணும்னு அர்த்தம்..."
"ஆக.. வேலை செய்யத்தான்.. இந்த ஆண்களுக்கு.. அம்மாவும்.. பெண்டாட்டியும்.. தேவைப்படுகிறாங்க.. கெட்டிக்காரங்கதான் நீங்க.. பாசத்தைச் சொல்லலியே.. பெண்களை உங்களுக்கு வேலைக்காரிகளாய் ஆக்கிடுவீங்க.."
"ஃபெமினிஸமா...? இதில் மட்டும் மாமியாரும்.. மருமகளும் ஒற்றுமையாய் கூட்டுச் சேர்ந்திடுவீங்களே..."
இடது கையால் மனைவியின் கன்னத்தை தட்டிவிட்டு கை கழுவச் சென்றான் கார்த்திக்..
காரில் ஏறிக் கொண்டிருந்த கிருஷ்ணன்.. பின்னாலேயே வந்த சரளாவைப் பார்த்து புருவங்களை உயர்த்தினார்..
"என்ன சரள்...?"
"சாயங்காலம் வரும்போது காபிப்பொடி வாங்கி வருகிறீங்களா.. தீர்ந்து போச்சாம்.. சமையல்காரம்மா சொல்லுது.."
டிபார்ட்மென்டல் ஸ்டோரின் உரிமையாளரான கிருஷ்ணனுக்கு.. சிரிப்பதா.. இல்லை அழுவதா என்றே தெரியவில்லை..
"இதையெல்லாம் என்கிட்டத்தான் சொல்லணுமா..? ஸ்டோருக்கு போன் பண்ணினா.. வீட்டில கொண்டு வந்து கொடுத்திடப் போறாங்க.. என்னவோ.. அடுத்த கடையில் போய் வாங்கிக்கிட்டு வருகிறதைப் போல சொல்லி வைக்கிற.. நீ மாறவே மாட்டியா..."
"எனக்கு இப்படித்தான் சொல்ல வரும்.."
"சரி.. சரி.. கொடுத்தனுப்பறேன்.. வியாபாரிகள் சங்கத்திலே முக்கியமான மீட்டிங் இருக்குடி.. நான் தானே செகரட்டரி.. அதனால சீக்கிரமாய் போயாகணும்.. ஆளை விடுகிறியா...?"
"நான் பிடிச்சுக்கிட்டா இருக்கேன்..?"
"கோபமா..."
தாயின் கன்னத்தை செல்லமாகத் தட்டிக் கொண்டிருந்த தகப்பனாரைப் பார்த்தபடி.. தன் காரில் ஏறி ஸ்டார்ட் செய்த ஹரிணியின் மனதில் ஒரேயொரு எண்ணம்தான் அப்போது ஓடிக் கொண்டிருந்தது...
அம்மாவின் மேல் அப்பா காட்டும் மாறாத காதலை.. எனக்கென்று வரும் என் கணவனும் என் மேல் காட்டுவானா..? ஏனோ இந்த நினைவில் அவளது இதயம் வலித்தது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உன்னோடு நான் ..1
உன்னோடு நான் ..1
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApg/vFgHRxCoel0iGRK-yncLCyqErPHDaDtnQCLcBGAs/s320/IMG-20190421-WA0012.jpg
https://1.bp.blogspot.com/-9MM8ZSzn0lE/XRikZCncCxI/AAAAAAAAApg/vFgHRxCoel0iGRK-yncLCyqErPHDaDtnQCLcBGAs/s72-c/IMG-20190421-WA0012.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/06/unnodunaan1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/06/unnodunaan1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy