மௌனத்திரையின் மறைவினிலே -22

22 வாசலில் காய் வாங்கிக் கொண்டிருந்த மரகதம் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்கவும் நிமிர்ந்து பார்த்தாள். பெட்டியோடு இறங்கிய பூஜா... &...

22

வாசலில் காய் வாங்கிக் கொண்டிருந்த மரகதம் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்கவும் நிமிர்ந்து பார்த்தாள். பெட்டியோடு இறங்கிய பூஜா...
"ஹரிஷ்.. கீழே இறங்கு..." என்று சொல்லியபடி ஆட்டோவுக்கு பணம் கொடுத்தாள்.
உள்ளூரில் இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை வந்து ஒரு வாய் காப்பியோடு போகும் மகள் பெட்டியோடு வந்து நிற்பதைக் கண்டதும் 'ஏதோ சரியில்லை...' என்று புரிந்து கொண்டு விட்டாள் மரகதம்..
அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்.. மகளை இன்முகத்துடன் வரவேற்றபடி.. பேரனைத் தூக்கிக் கொண்டாள்.
"உள்ளே வா பூஜா என்னங்க.. யாரு வந்திருக்கிறான்னு பாருங்க..."
பேப்பரைக் கீழே இறக்கிய ராமாமிர்தம்.. மகளைக் கண்டதும் ஆச்சரியமாய் பேப்பரைத் தூக்கிக் கடாசி விட்டு எழுந்து கொண்டார்.
"என்னம்மா.. தனியே வந்திருக்கிற.. மாப்பிள்ளை எங்கே...?"
"அவர் வரவில்லை.. அப்பா, நானும் ஹரிஷும் இனிமேல் இங்கேதான் இருக்கப் போகிறோம்."
தங்கை வந்திருப்பதை அறிந்து.. அவளை வரவேற்க.. மாடியிலிருந்து இறங்கி வந்த சத்யன் துணுக்குற்றான்.
"என்ன ஆச்சு பூஜா..?"
"என்னை எதுவும் கேட்காதே அண்ணா. நானும் உன் மருமகனும்.. இங்கே இருக்கலாமா.. வேண்டாமா.. அதை முதலில் சொல்லு..."
"தாராளமாய் இருக்கலாம்.."
"கடைசி வரைக்கும் இருக்கலாமா...?"
"ம் ம் ம்..."
பூஜா அதற்குமேல் எதுவும் பேசாமல்.. அறைக்குள் போய் விட்டாள். வீட்டில் இருந்தவர்களும்.. அவளை எதுவும் கேட்காமல் தாங்கிக் கொண்டனர்.
ஹரிஷ்.. அங்கிருந்தே.. பள்ளிக்குப் போய் வர ஆரம்பித்தான்.
நரேந்திரன் அவளைத் தேடி வந்தான். பூஜா அறைக்குள் அடைந்து கொண்டு.. அவனைப் பார்க்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டாள்.
"தப்பாக நினைக்க வேண்டாம் நரேன்.. என் சின்னத் தங்கைக்கு பூஞ்சை மனசு. அவ மனசு எதனாலேயோ காயப்பட்டிருக்கு. அது ஆறட்டும். அதுவரை அவளும் ஹரிஷும் எங்க வீட்டிலேயே இருக்கட்டும்.." சத்யன் கூறிவிட்டான்.
"அவதான் முட்டாள்தனமா எதையோ செய்யறாள்ன்னா.. குடும்பம் மொத்தமுமே அவளை ஆதரிக்கறீங்களே.. ஏன்னு கேட்க மாட்டிங்களா..?" நரேந்திரன் ஆத்திரப்பட்டான்.
"எங்ககிட்ட சொல்லக்கூடிய விசயமா இருந்தால் அவளே சொல்லியிருப்பாளே.." சத்யனின் கூர்மையான பதில்.. நரேந்திரனைக் குத்திக் கிழித்தது.
அவனும் தான் என்ன செய்வான்..! கொடைக்கானலில்- பூங்காவில் எல்லோரும் அமர்ந்திருந்த போது விமலா அவனை அழைத்தாள். அருகே சென்று விசாரித்த போது மயக்கமாக வருகிறது என்று சொன்னாள். மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல் அவளை ஹோட்டல் அறையில் விட்டுவிட்டு வரத்தான் நரேந்திரன் சென்றான். மயக்கம் வருகிறது என்று சொல்லும் இளம் பெண்ணைத் தனியாக அனுப்ப அவனால் முடியவில்லை.
விமலாவின் அறைக்குள் சென்ற போதே.. அவள் தொய்ந்து நரேந்திரனின் கைகளில் மயங்கிவிழுந்து விட்டாள். அவளைக் கைகளில் ஏந்தி.. கட்டிலில் படுக்க வைத்த போது அவளது கரங்கள அவனது கழுத்தைச் சுற்றிப் பிணைந்து இருக்க அவள் மேல் விழுந்து விட்டான்.
அறைக் கதவை யாரோ திறந்து மூடும் சப்தம் கேட்டு விலகி எழுந்து வந்து பார்த்தபோது அங்கே யாரும் இல்லை. விமலாவின் அறையைப் பூட்டி விட்டு பூங்காவிற்குப் போன போது பூஜா அங்கு இல்லை.
"ஆட்டோவில் ஏறிப் போனாளே..." ராகினி மட்டும் பூஜாவைக் கவனித்திருந்தாள்.
ஹோட்டலுக்கு அவன் ஓடினான். அங்கே பூஜா பெட்டியோடு கிளம்பிக் கொண்டிருந்தாள். என்ன சொல்லியும் அவளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. எவ்வளவு கேட்டும் அவள் காரணம் சொல்லவில்லை.
வேறு வழியில்லாமல் ஜெகனை செல்ஃபோனில் அழைத்து அவசர வேலை வந்திருப்பதால் அவன் சென்னைக்குக் திரும்புவதாக சொல்லி விட்டு - மறக்காமல் விமலாவை அழைத்துக் கொண்டு வந்து விடும்படி கேட்டுக் கொண்டான்.
வாடகைக் காரில் சென்னை திரும்பினார்கள். நரேந்திரன் அந்தப்பக்கம் அலுவலகம் போனபோது, இந்தப் பக்கம் மகனுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள் பூஜா.
இத்தனை வருட திருமணவாழ்க்கையில் அவர்களுக்குள் ஆயிரம் சண்டை சச்சரவுகள் நடந்திருக்கின்றன. ஆனால் வீட்டைவிட்டு பூஜா வெளியேறியதில்லை. இன்று மட்டும் ஏன் இப்படிச் செய்தாள் என்று நினைத்து.. நினைத்து மனம் குழம்பினான் நரேந்திரன்.
"ஏன் சார் ஒரு மாதிரியாய் இருக்கீங்க...?" என்று ஒன்றும் அறியாதவள் போல் கேட்ட விமலாவிடம்.. மனதில் இருந்ததைக் கொட்டி விட்டான்.
'போய் விட்டாள்...' மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டே - வெளியே போலியாய் வருத்தப்பட்டாள் விமலா.
"உங்க அருமை அவங்களுக்குத் தெரியலை சார்.." என்று போட்டுவேறு கொடுத்தாள்.
பூஜா இல்லாத வீட்டில் கால் வைத்தால் நரேந்திரனுக்குப் பித்துப் பிடித்தது போல் ஆனது. அவளில்லாத வாழ்வை வாழ அவனால் முடியவில்லை. தன் மனதில் பூஜாவின் மேல் இந்த அளவிற்குக் காதல் இருக்கும் என்று அவன் எண்ணிக்கூடப் பார்த்தது இல்லை...
'பூஜா.. ஐ லவ் யூ...' என்று மனதிற்குள் கூறிக் கொண்டான். இதை நேரடியாய் அவளிடம் சொல்லியிருந்தால் அவள் விலகிச் செல்லாமல் இருந்திருப்பாளோ என்று மருகினான்.
அவளின் நினைவில் அவன் புலம்பிக் கொண்டிருந்த போது அவனுடைய குடும்ப டாக்டர் உமாவதி.. அவனுக்குப் போன் பண்ணினார்.
"நரேன்.. என் ஹாஸ்பிட்டலுக்கு வந்துவிட்டுப் போங்க.."
நரேந்திரன்.. உமாவதியின் முகம் பார்த்துக் கொண்டு புரியாத பார்வையோடு அமர்ந்திருந்தான்.
'ஏன் வரச்சொல்லியிருக்கிறாங்க...'
"நரேன்.. உங்க மிஸஸ் கன்சீவ் ஆகியிருக்கிறாள்..."
'வாவ்.. இதை ஏன் அவள் என்னிடம் சொல்ல வில்லை...?'
"பட்.. அவள் அதை அபார்ட்பண்ணச் சொல்கிறாள்.."
"வாட்...?"
நரேந்திரன் இந்த முறை கோபத்துடன் மாமனார் வீட்டிற்குச் சென்று - சத்யன் தடுக்கத் தடுக்க.. பூஜாவின் அறை புகுந்து கதவைத் சாத்திக் கொண்டான்.
"யாரைக் கேட்டு.. அபார்சன் பண்ணப் போன..?"
"யாரைக் கேட்கணும்...?"
"என்னைக் கேட்கணும்.. உன் பிள்ளையின் அப்பா நான்.."
"நாளைக்கு விமலாவின் பிள்ளைக்கும் அப்பா ஆவீங்கதானே...?"
"பூஜா..?"
நரேந்திரனுக்கு சட்டென்று எல்லாம் விளங்கி விட்டது. அன்று விமலாவின் அறைக்கதவைத் திறந்து மூடியது பூஜாதான். இவள் அவர்களைப் பார்த்திருக்கிறாள். தவறாக நினைத்திருக்கிறாள்.
"சீச்சி.. அவள் எனக்குத் தங்கைப் போல.."
"அசிங்கமாய்ப் பேசாதீங்க நரேன்.. அவள் வேறுவிதமாய் என்னிடம் சொன்னாள். 'நேரில் வந்து பாரு'ன்னா.. வந்தேன்.."
"ஓ.. மைகாட்.. அவள் மனதில் இவ்வளவு விஷம் இருந்ததா...? பூஜா.. அவள் மேல் எனக்கிருந்தது இரக்கம். அநாதைன்னு சொன்னாள். ஆதரவு காட்டினேன். அன்னைக்கு மயக்கம் வருதுன்னு சொன்னாள். ரூமுக்கு அழைச்சுக்கிட்டுப் போனேன். ரூம் வாசலிலேயே மயக்கம் போட்டுவிட்டாள். அவளைத் தூக்கிப் படுக்கையில் போட்டேன். தவறிப் போய் மேலே விழுந்து விட்டேன்.."
நரேந்திரனின் கண்களில் பொய் இல்லை. காதல் இருந்தது. அவளைப் பிரிந்த தவிப்பு இருந்தது. பூஜா தாளமுடியாமல் அழுதாள்.
"த்சு.. அழாதே. உன்னைப் பிடிச்சிருக்கான்னு ஒரு தடவை நீ கேட்டாய். அப்போ அதற்குப் பதில் சொல்ல வில்லை. இப்போது சொல்கிறேன். கேட்டுக் கொள்.. உன்னைத் தவிர வேறு யாரையும் எனக்குப் பிடிக்காது."
பூஜா, நரேந்திரனின் மார்பில் நிம்மதியுடன் சாய்ந்தாள். அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.. துடைக்கத் துடைக்க நிற்காமல் பெருகும் கண்ணீர்..
"பைத்தியம்.." அவளது கன்னம்தட்டிக் கண்ணீரைத் துடைத்து விட்டான் நரேந்திரன்..
"பைத்தியம்தான் நரேன்.. உங்கமேல பைத்தியம்.." பூஜா விசும்பி அழுதாள்..
"எனக்குத் தெரியும்டி.. அந்தத் திமிர்தான் எனக்கு.. அந்தத் திமிரினாலதான் இங்கே வந்து நிற்கிறேன்.. உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்டி.. அதைவிட என்மேல் நீ பைத்தியமா இருக்கிறது பிடிச்சிருந்ததுடி.."
'இவன் என்ன சொல்கிறான்..'
பூஜா அண்ணாந்து அவன் முகம் பார்த்தாள்.. நரேந்திரன் பிரியத்துடன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.. இமைமூடி அதை ஏற்றுக் கொண்டவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து விழி மூடிக் கொண்டான்.
"ஒரு பெண்ணின் மனதை ஜெயிக்கிறதைவிட பெரிசு வேற எதுவும் இல்லைடி.. உன் மனசை நான் ஜெயிச்சுட்டேங்கிற கர்வம் எனக்கு.. உன்னை எனக்குப் பிடிக்கும்ன்னு சொல்லாமலே உன் பிடித்தத்தை நான் அனுபவிக்கனும் என்கிற ஆசை.. என்னதான் நான் சிடுசிடுன்னு பேசினாலும் நீ என்னை விட்டுப் போக மாட்டாய் என்கிற தீவிர நம்பிக்கை.."
நரேந்திரன் பேசினான்.. அவன் மனதில் பூஜாவின் மேல் இருந்த வற்றாத காதலைச் சொன்னான்.. அவள்தான் அவனுக்கு எல்லாமும் என்பதை உணர்த்தினான்.. ஆறு வருடங்களாக மனதில் பூட்டி வைத்திருந்த காதலைக் கொட்டிக் கவிழ்த்தான்.. அதில் பூஜாவின் மனம் நிறைந்து விட்டது.
மனைவி மகனுடன் தன் வீட்டுக்குக் கிளம்பினான் நரேந்திரன்.. மலர்ந்த முகத்துடன் பூஜா கணவனுடன் கிளம்பிச் சென்றதில் அவளுடைய பிறந்தவீடு நிம்மதியடைந்தது.. என் புருசன்தான்.. எனக்கு மட்டும் தான் என்று போராடிய பூஜாவுக்கு என் மனதில் நீ மட்டும்தான் என்று உணர்த்தி விட்டான் நரேந்திரன்.. அன்றைய இரவில் அதுவரை இல்லாத மனநிம்மதியோடு உறங்கினாள் பூஜா.. மனைவியின் கள்ளமற்ற வெள்ளை முகத்தை வருடிக் கொடுத்தபடி அவள் உறக்கத்தைக் கலைக்காமல் வெகுநேரம் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான் நரேந்திரன்.. எவ்வளவு எளிதாக அவன் வாழ்க்கையில் விளையாடி விட்டாள் அந்த விமலா என்று நினைக்க நினைக்க அவனுக்கு கோபம் பொங்கியது.
'இதற்குக் காரணம் அவள் மட்டும்தானா..?' அவனது மனச்சாட்சி இடித்துரைத்தது..
மனைவி, குழந்தைகளுடன் நண்பர்களின் குடும்பங்களுடன் இணைந்து செல்லும் சுற்றுலாவில் விமலாவையும் இனைத்து அழைத்து சென்றது யார்..? சென்ற இடத்தில் மனைவி குழந்தையை மறந்து விமலாவை தாங்கிக் கொண்டு அலைந்தது யார்..? நரேந்திரன்தானே..
இனி எந்தத் தருணத்திலும் மனைவிக்கான மதிப்பையும், மரியாதையையும் பொது இடங்களில் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மனதுக்குள் சங்கல்பம் செய்து கொண்டான்..
மறுநாள் அலுவலகத்திற்கு சென்றவனின் மீது விழுகாத குறையாக..
"குட்மார்னிங்.." என்று கொஞ்சிய விமலாவின் முகத்தில் டிஸ்மிஸ் ஆர்டரை விட்டு எறிந்தான் நரேந்திரன்.. அதிர்ந்து போனாள் விமலா..
"கெட் லாஸ்ட்.. உன்னைப் போன்ற பிறவிகளின் முகத்தில் விழிப்பது கூட பாவம்.."
நரேந்திரனின் கோபத்தில் அவனுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்பது புரிந்து போக பயத்துடன் ஓடிப் போய் விட்டாள் விமலா..
மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பியவனின் கையில் மல்லிகைப்பூ இருந்தது.. மயக்கத்துடன் அதை வாங்கிக் கொண்ட பூஜா மௌனத்திரையின் மறைவில் ஒளிந்து கொள்ளவில்லை.. மனம் மறைக்காத காதலுடன் அவன் மார்பில் சாய்ந்து கண்மூடினாள்..

-முற்றும்-



Name

அடுத்தடுத்து,1,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,50,உயிரே உனைத் தேடி ...,34,உன்னோடு நான்,25,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,67,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,25,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லாமலே பூப்பூத்ததே ..,20,தூங்காத கண்ணென்று உண்டு,6,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலவோடு வானம்,2,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,78,நெஞ்சமடி நெஞ்சம்,34,பூவே மயங்காதே,28,பொதிகையிலே பூத்தவளே,36,மகராசி,1,மலர்ந்தும் மலராமல்,39,மூரத்தியின் பக்கங்கள்,10,மைவிழியே மயக்கமென்ன ?,1,மௌனத் திரையின் மறைவினிலே,22,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,2,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனத்திரையின் மறைவினிலே -22
மௌனத்திரையின் மறைவினிலே -22
https://1.bp.blogspot.com/-AiLXbOayD0Q/XPfFNOWUsbI/AAAAAAAAAoA/vo1APfcDbao6kvI5_o7b5dleneQU9fL2gCPcBGAYYCw/s320/Movuna%2Btherain%2Bmaraivenele.jpg
https://1.bp.blogspot.com/-AiLXbOayD0Q/XPfFNOWUsbI/AAAAAAAAAoA/vo1APfcDbao6kvI5_o7b5dleneQU9fL2gCPcBGAYYCw/s72-c/Movuna%2Btherain%2Bmaraivenele.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/06/mounaththiraiyinmaraivinile-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/06/mounaththiraiyinmaraivinile-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy