இதயத்தின் சாளரம் -30 , 31

30 "அனு.. அவள் என்னிடம் வந்து பேசும்போது நான் ஒன்று சொன்னால் அவள் அதற்கு சம்பந்தமேயில்லாதது போல் வேறு ஒன்றைச் சொல்வாள்.. நான் வெற...

30

"அனு.. அவள் என்னிடம் வந்து பேசும்போது நான் ஒன்று சொன்னால் அவள் அதற்கு சம்பந்தமேயில்லாதது போல் வேறு ஒன்றைச் சொல்வாள்.. நான் வெறுப்புடன் காரைக் கிளப்புவேன்.. அவள் எதுவுமே நடக்காதது போல் டாட்டா காட்டுவாள்.. அனு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்.. நீ என்னைப் பார்க்க மொட்டை மாடிக்கு
வந்து நின்றிருந்ததை அவள் பார்த்திருக்க வேண்டும்.. அதனால்தான் நீ என்னை தவறாக நினைக்க வேண்டு மென்று அப்படிச் செய்திருக்கிறாள்.." ஆகாஷின் முகம் கோபத்தில் சிவந்தது..
"அவளெல்லாம் ஏமாற்றும் அளவிற்கு நான் மக்காய் இருந்திருக்கிறேனே.." அனுராதா வேதனையுடன் சொன்னாள்..
"நீ ஏண்டி இதற்குப் போய் வேதனைப்படுகிறாய்..? கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும்.. குணம் இருப்பவளிடத்தில் தான் காதல் பிறக்கும்.. அவள் குணம் கெட்டவள்.. அவளை நான் வெறுப்பாகத்தான் பார்ப்பேன்.. அவளால் ஒரு போதும் என்னைக் கவர முடியாது என்பதை அவள் நன்கு அறிவாள்.. அவளது நோக்கம் உன்னையும் என்னையும் பிரிப்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.. அவள் ஒரு முறை என்னிடம் 'அனுராதா தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறாளா..? நான் தெரியவில்லையா..?' என்று கேட்டாள்.. நான் முறைத்துக் கொண்டே போய் விட்டேன்.. உன்மேல் எனக்கிருந்த காதலையும் ஆர்வத்தையும் உன்னைவிட அவள் நன்கு அறிவாள்.. அதனால்தான் திட்டம் போட்டு நம் நிம்மதியை கெடுத்து விட்டாள்.." ஆகாஷ் பெருமூச்சு விட்டான்..
"சரியாகச் சொன்னீர்கள் அத்தான்.." அனுராதா ஆமோதிக்க..
"ஏய்.. என்னவென்று என்னை அழைத்தாய்.. திரும்பச் சொல்லு.." என்று ஆகாஷ் அவளைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டான்..
முகம் சிவக்க அனுராதா அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.. சற்று நேரம் அவளிடம் கொஞ்சிக் கெஞ்சி அவள் முகம் விலக்கிப் பார்த்த ஆகாஷ் காதலுடன் அவளைப் பார்த்தான்..
"என் பெயர் ஆகாஷ்.. அத்தானா..?" ஆகாஷ் வம்பிழுத்தான்..
"நான் அப்படித்தான் கூப்பிடுவேன்.." அனுராதா அவனது சட்டையின் பட்டனைத் திருகினாள்..
"இப்ப ஏண்டி பட்டனைப் பிய்க்கிறாய்..?"
"ம்ம்.. சும்மாயிருங்கள்.."
"நான் சும்மாதானே இருக்கிறேன்.."
"அத்தான்.. ப்ளீஸ்.."
"சரி அதை விட்டுவிட்டேன்.. ராகினி ஒரு ஸாடிஸ்ட்.. அவளது திட்டத்திற்கு நாம் பலியாகிவிட்டோம்.. உனக்கு என்னைப் பார்க்கவே பிடிக்காமல் போய்விட்டது.. இதை உன் தாத்தாவிடம் நீ சொல்லி கொண்டிருப்பதை நான் கேட்டுவிட்டேன்.. இதில் என்ன ஸ்பெசாலிட்டின்னா.. நான் கேட்டுவிட்டதை உன் தாத்தா பார்த்து விட்டார்.." ஆகாஷ் அன்றைய நாளின் நினைவிற்கு போனான்..
"எப்போது.." அனுராதா விழி மலர்த்திக் கேட்டாள்..
"நீ எனக்கு காபி கொண்டு வர மறுத்தாயே அப்போது.."
"ஸாரி அத்தான்.."
"சரிடி பெண்டாட்டி.. அவரே எனக்கு அன்று காபி கொண்டு வந்து கொடுத்தார்.. உன் பேச்சுக்கு சமாதானம் சொன்னார்.. அப்போதுதான்.. நான் அவரிடம் உன்
மீது எனக்கிருந்த காதலைக் கூறினேன்.. நீ உன் காதலை சொல்லலாமேயென்று கேட்டார்.. என்னை வெறுப்பவளிடம் எனது விருப்பத்தை எப்படிச் சொல்வது ஐயாவென்று கேட்டேன்.. உன் மேலிருந்த கரை காணாத காதலை அவரிடம் சொல்லிவிட்டு அதை உன்னிடம் சொல்லக் கூடாது என்று வேறு சத்தியம் வாங்கிக் கொண்டேன்.."
"நானும் அப்படித்தான் அத்தான்.. உங்கள் மேலிருந்த காலைச் சொல்லிவிட்டு உங்களிடம் சொல்லக் கூடாதென்று சத்தியம் வாங்கினேன்.."
"நமக்குள் எதில் ஒற்றுமை இருந்ததோ இல்லையோ.. இந்த விசயத்தில் எவ்வளவு ஒற்றமை பார்த்தாயா..? நீ என்னை வெறுக்கிறாயாம்.. உன்னிடம் என்னுடைய காதலைச் சொல்வது எனக்கு பிரஸ்டீஜ் இஷ்யூவாம்.."
"அடபோங்கத்தான்.. நீங்க வேற.."
"என்னடி கதையை மாத்துக்கிறாய்.. இப்போது தானே நீயும் நானும் ஒன்று.. இது காதல் பிறந்த மண்ணுன்னு சொன்னேன்.. இப்போது என்னடாவென்றால் நான் வேறு என்கிறாயே.."
"அடடா.. நானும் உங்களைப் போல்தான் கேணத்தனமாய் நினைத்தேன் என்று சொல்ல வந்தேன்.."
"சந்தடி சாக்கில் என்னை கேணை என்கிறாய்.."
"ஸ்ஸ்.. நீங்கள் என்னைக் காதலிக்காதபோது என் காதலை நான் சொல்வதை கௌரவ குறைச்சலாக நினைத்தேன்.."
"ஒன்றுபட்ட மனம் கொண்ட புருசன் பெண்டாட்டி.. நல்லவேளை தொண்டைமான ஐயா தலையிட்டாரோ.. நாம் பிழைத்தோமோ.. அன்று காலையில் போன் வந்தவுடன் அடித்து பிடித்துக் கொண்டு ஓடி வந்து அன்னலட்சுமிபுரத்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் நான் உன்னைத்தான் தேடினேன் தெரியுமா..?"
"நான் ஒளிந்து நின்று கொண்ட பார்த்தேன் தெரியுமா..?"
"உன் தாத்தா கடைசி நேரத்தில் அந்த வாக்குறுதியைக் கேட்டதும் எனக்கு ஆனந்தத்தில் பேசவே வாய் வரவில்லை.. ஒரு வழியாய் வாக்குக் கொடுத்து விட்டேன்.."
"என்மேல் அவ்வளவு கோபத்தையும் வெறுப்பையும் வைத்துக் கொண்டு எப்படித்தான் என் கழுத்தில் தாலி கட்டினீர்களோ.."
ஆகாஷ் அனுராதாவின் கழுத்தில் மூக்கை உரசினான்.
"கோபத்தை விட தாபம்தான் அதிகமாக இருந்தது.. உன் மேலிருந்த வெறுப்பை விருப்பம் ஜெயித்து விட்டது.."
"நான் நல்லவள் தெரியுமா..?"
"நான் இல்லையென்று சொன்னதே இல்லையே.. நீ கோபக்காரியென்ற பயம்தான் எனக்கு.. வேறு குறையில்லை.."
ஆகாஷ் அனுராதாவின் தோள் பற்றி இழுத்துக் கொண்டான்..

                                31

எத்தனை யுகங்களாய் அறிந்ததைப் போன்ற ஜென்ம ஜென்மாந்திர பந்தம் ஒன்று அனுராதாவைப் பார்த்த நொடியிலேயே ஆகாஷிற்கு ஏற்பட்டது.. எவராலும் சலனப்படுத்த முடியாத அனுராதாவின் மனதை அவன் சலனப்படுத்தினான்.. அவள் அவனை விரும்பினாள்.. அவனோ அவளால் ஈர்க்கப்பட்டான்..
இருந்தும் இருவரும் ஒருவர் அன்பை ஒருவர் உணராமல் பிரிந்தனர்.. பிரிந்தபோதும் அனுராதாவின் இடத்தில் இன்னொருத்தியை நினைத்துப் பார்க்கக் கூட ஆகாஷ் விரும்பவில்லை.. அனுராதாவோ அவனைத் தவிர வேறு யாரையும் திருமணம் பண்ணிக் கொள்ளக் கூடாதென்பதில் உறுதியாக நின்றாள்..
இருவரின் உள்ளமும் அறிந்த பண்பட்ட தொண்டைமான் இருவரையும் வாக்குறுதியால் கட்டிப் போட்டு விட்டுக் காலமானார்.. திருமணம் செய்து கொண்டு தம்பதிகளான பின்னும் ஒருவர் மனதை ஒருவர் உணராமல் இதயத்தில் வலியோடு இருவரும் பிரிந்தே வாழ்ந்தனர்..
அதிரடியாய் ஆகாஷ் நடவடிக்கையில் இறங்கி அவளது இதயத்தின் சாளரத்தைத் திறந்தான்.. அவன் பார்வையென்னும் காற்றுப்பட்டதும் அவள் இதயத்தில் பதுங்கியிருந்த காதல் உணர்வு கட்டவிழ்ந்து வெளியே வந்தது..
மோக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆகாஷும் அனுராதாவும்.. இரவு உணவை மறந்தனர்.. ஆகாஷின் தாகம் பொங்கி எழ அனுராதா அவன் கைக்குள் அடங்கினாள்.. நெஞ்சம் நிறைந்து விலகிச் சென்றவள்.. நித்தமும் சிந்தையில் வந்து அவன் நிம்மதியைக் கொன்றவள்.. இன்று தென்றலாய் அவன் தேகம் தழுவினாள்.. குளிர் ஊற்றாய் அவனது தாகம் தீர்க்க மருகினாள்..
விடியலின் அருகாமையில்தான் பசியே அவர்களுக்கு உறைத்தது..
தன் கைக்குள் அடங்கியிருந்த அனுராதாவின் காதுகளில் ஆகாஷ் முணுமுணுத்தான்..
"அனு.. பசிக்குதுடி.."
"அச்சச்சோ.. நாம் நைட் சாப்பிடவே இல்லையே.."
அனுராதா பதறி விலகினாள்.. ஆகாஷ் விட மறுத்தான்..
"இப்ப ஏன் எழுந்து போகிறாய்..?"
"போகாமல் டிபன் செய்ய முடியுமா..?"
"இங்கேயே ஏதாவது பிஸ்கட் இருக்கான்னு பாரு.."
"அது எப்படிப் பசி தாங்கும்..?"
"ஸ்ஸ்.. எல்லாம் ஓர் அவசரத்திற்கு உதவுவது தானே.. அது போதும்.." ஆகாஷ் அவள் கன்னத்தில் வாசம் பார்த்தான்..
"எந்த அவசரத்திற்கு.. உதவுவதாம்..?" அனுராதாவிற்கு சிரிப்பு வந்தது..
"இந்த அவசரத்திற்குத்தான்.." ஆகாஷ் அவளை இறுக்கிக் கொண்டான்.. அனுராதா கிறங்கினாள்..
"ப்ளீஸ்.. கொஞ்ச நேரம் அத்தான்.. நேற்று மதியம் சாப்பிட்டது.."
"இதுவரை தாங்கவில்லையா..? அது போலதான்.. நீ கிட்ட வா.." ஆகாஷ் கரம் நீட்டி அவளை அழைத்தான்..
அவள் விலகி எழுந்து அறைக்கதவைத் திறந்து கொண்டு விரிந்து கிடந்த கூந்தலை கொண்டையிட்ட வண்ணம் மாடிப்படிகளில் இறங்கினாள்..
அவளது அழகை ரசித்த வண்ணம் ஆகாஷ் அவளை "அனு.. ஏய் அனு.. நில்லுடி.." என்று அழைத்த வண்ணம் தொடர்ந்து இறங்கினான்..
அனுராதா சமையலறைக்குள் நுழைந்து புடவையை இழுத்துச் செறுகிக் கொண்டு பரபரவென்று வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தாள்.
ஆகாஷ் அனுராதாவின் பின்னால் நின்று கொண்டு அவளை அணைத்துக் கொண்டான்.. அனுராதா அவனுக்கு இசைவாய் நின்று கொண்டே வேலையைப் பார்த்தாள்.. அனுராதாவின் பின்னங்கழுத்தில் முகம் புதைத்துக் கொண்ட ஆகாஷ்..
"அனு.. என்ன பண்ணுகிற.." என்றான்..
"உப்புமா பண்ணுகிறேன்.."
அனுராதா சிரித்துக் கொண்டே அடுப்பை பற்ற வைத்து வாணலியை அடுப்பில் வைத்தாள்.. நெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்க ஆரம்பித்தபோது ஆகாஷ்..
"ஷ்ஆஆ.. என்ன ஓர் வாசனை பார்.." என்று வாசம் பிடித்தான்..
அடுப்பில் நீர் கொதிக்க ஆரம்பிக்க வறுத்த ரவையை அதில் கொட்டி கிளற ஆரம்பித்த அனுராதா..
"நெய்யில் வெங்காயம் வதங்கினால் வாசம் வரத்தான் செய்யும்.. ஐந்து நிமிடம் பொறுங்கள்.. ரெடியாகிவிடும்.." என்று கூறினாள்..
"உன் சமையல் வாசனையை யாருடி சொன்னது.. உன் கூந்தல் வாசனையைச் சொன்னேன்.."
"அதுதானே பார்த்தேன்.."
அனுராதா செல்லமாய் கணவனின் காதைப் பிடித்து டைனிங் டேபிளில் அமர வைத்தாள்.. உப்புமாவை பரிமாறி..
"சாப்பிடுங்கள்.." என்றாள்..
"நீயும் வா சாப்பிடலாம்.."
"ஒரே தட்டிலா.."
"ஒரே கட்டிலில் படுக்கிறோம்.. ஒரே தட்டில் சாப்பிடக் கூடாதா..? பேசாமல் வாடி.."
இருவரும் சாப்பிட்டார்கள்.. விடியலின் போது எழுந்திருக்க மறந்து அயர்ந்து தூங்கினார்கள்.. பத்து மணிக்கு பதறி எழுந்து வேலைக்கு விடுப்புச் சொன்னார்கள்.. மீண்டும் முதல்நாள் கதையைத் தொடர்ந்தார்கள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: இதயத்தின் சாளரம் -30 , 31
இதயத்தின் சாளரம் -30 , 31
https://1.bp.blogspot.com/-Ftjo2matfKw/XOKyi5KjRAI/AAAAAAAAAnE/bL16laCDRAUoVfkQ0ccr_YN22k5XBnmuACPcBGAYYCw/s320/1521382_227756057406288_1297063306_n.jpg
https://1.bp.blogspot.com/-Ftjo2matfKw/XOKyi5KjRAI/AAAAAAAAAnE/bL16laCDRAUoVfkQ0ccr_YN22k5XBnmuACPcBGAYYCw/s72-c/1521382_227756057406288_1297063306_n.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/06/ithayaththinsaalaram30-31.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/06/ithayaththinsaalaram30-31.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy