எண்ணியிருந்தது ஈடேற -267

267 வயநாட்டின் இதமான குளிர் அவளுக்கு சுகமானதாக இருந்தது.. அவனிடமிருந்து பெற்றுக் கொண்ட துப்பட்டாவைக் கழுத்தில் போர்த்தினாற் போலப் ...


267


வயநாட்டின் இதமான குளிர் அவளுக்கு சுகமானதாக இருந்தது.. அவனிடமிருந்து பெற்றுக் கொண்ட துப்பட்டாவைக் கழுத்தில் போர்த்தினாற் போலப் போட்டுக் கொண்டாள்..
"தணுப்பு (குளிர்) வாட்டுதோ..?" அக்கறையுடன் கேட்டான் பிரதீபன்..
"இல்ல.." வெட்கத்துடன் அவள் முணுமுணுத்தாள்.
"ஹப்பா.. இத்தினி மணிக்கயிறில இப்பத்தான் நிங்க வாய் திறந்து ஒரு வார்த்தை பறஞ்ஞு.." அவன் சந்தோசமடைந்தான்..
"மணிக்கயிறா..? நிமிசங்கள்ன்னு சொன்னாக் கேட்டுக்கலாம்.." அவனுடன் பேச அவளுக்குப் பிடித்திருந்தது..
அது அழகான பொன்மாலைப் பொழுது என்று ரம்யமாலினிக்குத் தோன்றியது.. பிரதீபனுடன் அவள் ஒன்றும் காதல் வயப்பட்டு விடவில்லை.. சின்னப் பார்வைகள், இனம் புரியாத ரகசிய உணர்வுகள் இவை யாவும் பருவ வயதில் ஏற்படும் சலனங்கள் என்பதை அவளொன்றும் அறியாதவள் அல்ல.. அழகும் கம்பீரமும் நிறைந்த ஆண்களைக் காண நேரிடும் போது மனதுக்குள் ஏற்படும் சிறு கிளர்ச்சியை அவளால் தவிர்க்க முடிந்த தில்லை.. அது போல்தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டாள்..
பிரதீபன் ஒன்றும் அன்னியனல்லவே.. அவனது அரண்மனையில்தான் அவள் விருந்தினராகத் தங்கியிருக்கிறாள்.. வீட்டுக்கு உடையவன் உபச்சாரமாக பேசும்போது அதற்குப் பதில் பேசாமல் இருப்பது அவனை அவமதிப்பதைப் போல ஆகி விடாதா..?
அவனுடனான அவளது உரையாடலுக்கு இப்படியொரு கோணத்தில் சமாதானம் சொல்லிக் கொண்டாள் ரம்யா..
"ஆ நிமிசம்.." பல்வரிசை தெரிய அவன் சிரித்தான்..
சிரிக்கும் போது அவன் வெகு அழகாக இருக்கிறான் என்று அவளது மனம் ஜொள்ளியது..
"ரம்யமாலினிக்கு பூக்களெண்டால் வளர இஷ்டமோ..?"
"ஏனாம்..? உங்களுக்குப் பூக்களைப் பிடிக்காதோ..?"
"அதுசரி.. நிங்களை ஞான் கேள்வி கேட்டா.. நிங்க என்னைக் கேள்வி கேட்டு.."
"சில சமயம் கேள்விக்குக் கேள்வியே பதிலாகும்.."
"ஓ.. நிங்க இவ்விதம் கூட சம்சாரிக்குமோ..?"
அவன் வியப்புடன் அவளைப் பார்த்ததில் அவள் வெட்கமடைந்தாள்.. என்னதான் சகஜமாகப் பேச முயன்றாலும் மனதுக்குள் பரபரப்பும், பதட்டமும் சூழ்ந்து அவளை என்னவோ செய்து தொலைக்கிறது.. அவளுடன் பேச அவன் காட்டும் ஆர்வத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது.. அவளை அவன் 'தேவதை' என்று உபாசிப்பதில் கர்வம் ஏற்படுகிறது..
'ஞான் தேவதையாக்கும்..'
இறக்கை விரித்து வானில் பறக்க ஆசை கொண்டாள் ரம்யா.. அவனும் அவளுடைய ஆசைகளைப் பற்றித்தான் கேட்டுக் கொண்டிருந்தான்..
"பூப்பூக்கும் ஓசையைக் கேட்க ஆசை.. புல் விரியும் ஓசையைக் கேட்க ஆசை.. பட்ஷிகளின் குக்குக்கும், பறவைகளின் ரிங்ரிங்கும் சங்கீதம் சொல்லித் தரும்
தங்கப் பெண்ணேன்னே பாடிக்கிட்டு இருந்தீங்களே.. இங்கேயுள்ள ஸ்வர்ணப் பாவை (தங்கப் பாவை) நிங்க மட்டுமல்லோ.. பின்னே ஆரிடம் ரம்யா பறஞ்ஞு..?"
"ஏனாம்..? உங்களிடம் சொல்லக் கூடாதா..?"
"ஓ.."
மறுபடியும் ஒரு வியப்பு.. பேசாமடந்தை இத்தனை அழகாகவும் பேசக் கூடுமா என்று அவனது விழிகளில் எழும் மின்னல்..
மனதுக்குப் பிடித்தமானவனாக இல்லாவிடிலும் கூட அவனுடன் உரையாடும் உரையாடல் மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கிறதே.. அது ஏன்..?
"பூவே, பூவைப் பற்றிக் கானம் இசைப்பதை இப்போதுதான் ஞான் கேட்டு.."
"நான் பூவா..?"
"பின்னே.. இல்லையோ..?"
பிரதீபனின் பார்வை மலரொன்றின் இதழ்களை வருடிக் கொடுப்பதைப் போல அவளது மனதை வருடிக் கொடுத்தது.. பேச வார்த்தைகளின்றித் தவித்துப் போன ரம்யமாலினி மௌனத்தைக் கவசமாக்கி அதன் பின்னால் ஒளிந்து கொண்டாள்.. பேச்சற்ற பொழுதுகள் அர்த்தம் நிறைந்தவை.. அழகானவை.. மௌனத்தின் மொழியை உணராதவர்களால் காதலையும் உணர முடியாது.. அது ஆத்மார்த்தமான மொழி..! மனதோடு மனம் பேசும் மொழிக்கு மௌனம் என்று பெயர் சூட்டுவார்கள்..
வயநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்தான் பிரதீபனும் ரம்யமாலினியும்.. இருந்தாலும் ரம்யமாலினி பிரதீபனைப் பார்த்ததே இல்லை.. அவந்திகாவின் குடும்பத்துக்கு ஆகாதவர்கள் என்பதால் பத்மானந்தனின் குடும்பத்துடன் அருள்மொழிவர்மனின் குடும்பத்தினர் பேசக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.. ரவிச்சந்திரன் வளர்ந்து அரண்மனையின் பொறுப்பைக் கையிலெடுத்துக் கொண்ட பின்னால் அனைத்துச் சட்டங்களும் மாறின என்றாலும் ரவிச்சந்திரனின் குடும்பத்தினர் பத்மானந்தனின் குடும்பத்துடன் பின்னிப் பிணைந்து உறவு கொண்டாடியதில்லை.. எட்ட நின்று நலம், நலமா என்ற விசாரணையுடன் நகர்ந்து விடுவார்கள்..
பிரதீபன் ரம்யமாலினியைப் பார்த்திருக்கிறான் என்றாலும் இத்தனை அருகில் பார்த்ததில்லை.. உறவினர் இல்ல விழாக்களில் தன் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொள்பவளைத் தொலைவில் நின்று பார்த்திருக்கிறான்.. இவள் கிடைத்தால் வாழ்க்கை அழகாக இருக்கும் என்று மனம் பொங்கும்.. அவள் அவந்திகாவின் அண்ணன் மகள் என்பதில் 'எட்டாக் கனி' என்ற பெருமூச்சுடன் தள்ளி நின்று விடுவான்..
இதுபோன்ற அழகானதொரு தருணம் வாய்க்கக் கூடும்.. அவர்கள் இருவரும் அருகருகில் நின்று பேசுவார்கள் என்று சொப்பனத்திலும் அவன் எண்ணிய தில்லை.. எதிர்பாராத பரிசுகளையும் சிலநேரங்களில் வாழ்க்கை வழங்கக் கூடுமல்லவா..? அப்படி வாழ்க்கை வழங்கிய பரிசாக அந்தத் தருணத்தை அவன் உணர்ந்தான்.
இதோ.. இமைகள் படபடக்க அடிப்பார்வையில் நாணத்தைத் தேக்கி அவனை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாளே.. இந்த இளவரசி..! இவளது கடைக்கண் பார்வை அவன் மீது விழும் வரம் கிடைக்கும் என்றும் அவன் நினைத்துப் பார்த்ததில்லை.. அவள் காதலுடன் பார்க்காவிடினும்.. சின்னஞ்சிறு சொந்தத்துடன்  பார்த்து வைத்தாள்.. அந்த சிறுதுளி சொந்தத்தில் இளைப்பாறியது அவன் மனம்.
பேச முடியாமல் அவளும்.. பேச்சை மறந்து அவனும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்ற பொழுது நகர்ந்தது.. பிரதீபன் அழகான அந்த மௌனத்தை அற்புதமான பாடல் வரிகளில் கலைக்க விரும்பினான்.
"மலரே..! மௌனமா..?
                மௌனமே.. வேதமா..?"
அவனது பாடலில் அவளது முகம் மலர்ந்தது.. அவளை மலரென்று அவன் அழைத்ததில் அவளது மனம் ரெக்கை கட்டி வானத்தில் பறந்தது..
"மலர்கள்.. பேசுமா..?"
ஒற்றைவரியுடன் நிறுத்தியவள் இமைகள் படபடக்க அவனை ஏறிட்டுப் பார்த்து..
"எனக்குப் 'பூ'ன்னே பெயர் கொடுத்தாச்சு.." என்று நளினமாக சிரித்தாள்..
முல்லைப்பூ பல்வரிசை முழுவதுமாக தெரியாமல் சன்னமாக இதழ் பிரித்து மெல்தாக அவள் சிரித்த சிரிப்பில் தன்னைத் தொலைத்தான் பிரதீபன்..
"பூவுக்குப் 'பூ'ன்னுதானே பெயர் கொடுக்கனும்..?" என்றான்.
"உங்களைப் பேசி ஜெயிக்க முடியாது.." மோகனமாய் அவள் தலைசாய்த்தாள்..
"நீங்க ஜெயிக்கனும்னா ஞான் எந்து வேண்டு மெண்டாலும் செய்வேன்.. ரம்யமாலினி பறஞ்ஞா ஞான் அந்தக் கயல் தாண்டி வயநாட்டு மலையின் சிகரம் தொட்டு வருமல்லோ.."
"இவ்வளவு இம்ப்ரெஸ்ஸிவா பேசுவீங்களா நீங்க..?"
"ஒரப்பான (நிச்சயமா) ஞான் ரம்யமாலினிய இம்ப்ரெஸ் பண்ணனுமெண்டு சம்சாரிக்கலயல்லோ.. சத்தியமானு ஞான் பறஞ்ஞு.."
"போதும்.. போதும்.. உங்க வீட்டுக்கு கெஸ்டா வந்தா இப்படியெல்லாம் விருந்தோம்பல் நடத்த வேண்டாம்.."
"நீங்க எந்தா வெறும் கெஸ்ட்டோ..?"
"இல்லையோ.."
"இல்லை.."
ஊடுறுவும் பார்வையுடன் அழுத்தமான குரலில் மறுத்தான் பிரதீபன்.. அவனது துளைக்கும் பார்வையில் தன் வயமிழந்து தவித்தாள் ரம்யமாலினி.. அவன் மீதான ஈர்ப்பிற்கு காரணம் என்ன..? அவன் அவந்திகாவின் குடும்பத்திற்கு வேண்டாதவன் என்பதினாலா..?
'என் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் அவன் அவந்திகாவின் குடும்பத்திற்குப் பகைவனாக அபராஜிதனை அடித்துத் துரத்துபவனாக இருக்க வேண்டும் என்ற எனது அடி மனதில் ஆசையினால்தான் இவன் அருகில் என் மனம் தடுமாறுகிறதா..?'
"நிங்க எனிக்கு வெறும் கெஸ்ட் மட்டுமில்ல.. அதிக்கும் மேலே.." அவன் பேச்சை நிறுத்தியதில் மேலே என்ன சொல்லப் போகிறான் என்று அறியும் ஆவலில் அவளது இதயத்துடிப்பு அதிகரித்தது..
"ஹலோ.. பிரதீபன்.."
ரவிச்சந்திரனின் குரலில் ரம்யமாலினி அவசரமாக நகர்ந்து அண்ணனின் அருகில் சென்று விட்டாள். சொல்ல நினைத்ததை சொல்ல முடியாத ஏமாற்றம் பிரதீபனின் முகத்தில் கவிந்தது.. ரம்யமாலினி தமையனின் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள்.. அவள் முகத்தைப் பார்க்க முடியாததில் எதையோ இழந்து விட்டதைப் போல இருந்தது பிரதீபனுக்கு..
"ஹலோ.. ரவி.. எப்ப வந்தீங்க..?"
"இப்போதுதான் வந்தேன்.. நந்தினியிடம் பேசிக் கொண்டிருந்தேன் தேங்க்ஸ்.."
"எந்துக்கு..?"
"நந்தினியையும், அவள் ஃபேமிலியையும், கூடவே என் தங்கையையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதற்கு.."
"அதி எங்க கடமையல்லோ.. நன்னி பறஞ்ஞு.. எங்களை வேற்று மனுசராக்க வேணாம்.. கேட்டே.."
"ஓகே.. உங்க பிஸினெஸ் எப்படிப் போகுது..?"
ரவிச்சந்திரன் பிரதீபனுடன் பேசியபடி முன்னால் நடக்க.. நந்தினி ரம்யமாலினியுடன் இணைந்து கொண்டாள்.. பெண்கள் இருவரும் தோட்டத்திலேயே தேங்கி விட ஆண்கள் அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.. அது, இது என்று அர்த்தமற்ற பேச்சுக்களுடன் பொழுதை நகர்த்தி விட்டு அவர்கள் அரண்மனைக்குள் சென்றபோது ரவிச்சந்திரன் புறப்பட்டுப் போயிருந்தான்.. நந்தினி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.. அன்று இரவு அவளும் ரம்யமாலினியும் தூங்காமல் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்..
"பிரதீபன் ஸோ ஸ்வீட்டில்ல.." என்றாள் ரம்யமாலினி.
"அவரைத் திண்பண்டமாக்கிட்டியே ரம்யா.. பாவம் பிரதீபன்.. அவர் நிலைமை இப்படியா ஆகவேண்டும்..?" என்றாள் நந்தினி..
"நீ இருக்கியே.." சிரித்தபடி நந்தினியின் பக்கமாக திரும்பிய ரம்யமாலினி..
"இதற்கு முன்னால் பிரதீபனைப் பார்த்ததில்லை.. அதனால் சொன்னேன்.." என்றாள்..
"ஆச்சரியமா இருக்கே.. நீங்க ரெண்டு பேரும் ஒரே ஊர் ரிலேட்டிவ்ஸ் வேற.. பார்த்ததே இல்லைங்கறியே.. எப்படி..?"
"அது அப்படித்தான்.. இவங்க அவந்திகா அத்தைக்கு எனிமீஸ்.."
"ஓ.. கதை அப்படிப் போகுதா..? அஜந்தா குடும்பத்துக்கு எனிமீஸ்ன்னா நமக்கு இவங்க பிரண்ட்ஸ் ஆச்சே.. சொல்லிட்ட இல்ல.. நாளைக்கே பாசப்பயிரை வளர்த்துடறேன் பாரு.."
நந்தினி கண்களைச் சிமிட்டியதில் ரம்யமாலினியின் சிரிப்பு அதிகரித்தது.. மறுநாள் மாலையில் ரவிச்சந்திரன் நந்தினியைப் பார்க்க வந்த போது ரம்யமாலினி பிரதீபனைப் பற்றிச் சொன்னதைச் சொன்னாள்.. அவன் முகத்தில் மர்மப் புன்னகை தவழ்ந்தது..
"எந்தா சாரே.. எந்துக்கு இந்தப் புன்னகை..?"
அவள் துளைத்து எடுத்து விட்டாள்... சாதாரண மாகத்தான் சிரித்ததாக ரவிச்சந்திரன் சாதித்து விட்டான்..
நந்தகுமாரிடம் பேசிக் கொண்டிருந்த போது ரவிச்சந்திரனைக் குறித்த சில சந்தேகங்கள் இன்னும் விலகாததைக் குறிப்பிட்டாள் நந்தினி..
"ஆனந்தன் சார் நல்லவர்டா.. பொய் சொல்ல மாட்டார்.. அந்த மோகன் கொஞ்சம் அரை வேக்காடு.. மத்தபடி அவனும் பொய் சொல்கிற டைப் இல்லை.. ரெண்டு பேருமே இவரை பெல்ட்டால் அடிப்பார்ன்னும் துப்பாக்கியால் சுடுவார்ன்னும் சொன்னாங்கடா.. அதுதான் இன்னும் என் மனசில நெருஞ்சி முள்ளாய் நிரடிக்கிட்டு இருக்கு.."
"நீ லூஸீங்கிறதை கன்பர்ம் பண்ணிக்கிட்டே இருக்க யாரு.. எப்பவாவது ஒரு தடவை 'பேக்'கா இருந்தாப் பரவாயில்லை.. எப்பவுமே பேக்காத்தான் இருப்பேன்னு அடம் பிடிச்சா எப்படி.. பிரச்னையை தீர்த்து விட்டு நிம்மதியா இருக்கப் பார்ப்பியா.. அதை விட்டுட்டு இல்லாத பிரச்னையையெல்லாம் இழுத்து விட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கியே மெண்டலா நீ..?"
"நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க.. அவங்க ஏன் அப்படிச் சொன்னாங்கன்னு தெரிந்துக்கலைன்னா என் மண்டையே வெடித்து விடும் போல இருக்குடா நந்து.."
"கோணல் மண்டையா இருந்தா அப்படித்தான் தோணித் தொலைக்கும்.. உனக்கு இப்ப என்ன தெரியனும்ங்கிற..? பெல்ட்டுன்னு இருந்தா அடிக்கத்தான் செய்வாங்க.. துப்பாக்கின்னு இருந்தா சுடத்தான் செய்வாங்க.. பெல்ட்டில சுட்டு.. துப்பாக்கியால விட்டு விளாசி அடித்தாத்தான் கோக்கு மாக்கா இருக்கும்.. இங்க எல்லாமே சரியாகத்தானே இருக்கு..?"
"நந்து.. ப்ளீஸ்.."
நந்தினி அழுக ஆரம்பிக்க நந்தகுமார் தலையில் அடித்துக் கொண்டான்..
"உன் கூடப் பிறந்ததுக்கு குட்டிச்சுவர் கூடப் பிறந்திருக்கலாம்.. படுத்தி வைக்கிற நீ.. இப்ப என்னதான் செய்யலாம்ங்கிற.."
"எஸ்டேட்டுக்குப் போயி ஆனந்தன் சாரிடம் என்ன தான் நடந்ததுன்னு முழுதாக் கேட்டுத் தெரிந்துக்கலாம்டா.."
"அத்தானை சந்தேகப்படறியா..?"
"அவருக்குப் பெண்டாட்டியாகிறதுக்கு முன்னாலே என் மனசில இருக்கிற அத்தனை சந்தேகங்களையும் தெளிவு படுத்திக்கனும்னு நினைக்கிறேண்டா.."
"பேசறதையெல்லாம் வக்கணையாப் பேசு.."

பல்லைக் கடித்தபடி நந்தினியை எஸ்டேட்டுக்கு அழைத்துக் கொண்டு போனான் நந்தகுமார்..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -267
எண்ணியிருந்தது ஈடேற -267
https://1.bp.blogspot.com/-f6nXkRPh_TU/XOpzcUUhR-I/AAAAAAAAAnY/uBusgHyhcoArXjmm49PSHn8tFCtGuYWlgCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B8.jpg
https://1.bp.blogspot.com/-f6nXkRPh_TU/XOpzcUUhR-I/AAAAAAAAAnY/uBusgHyhcoArXjmm49PSHn8tFCtGuYWlgCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B8.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/06/enniyirunthathueedera267.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/06/enniyirunthathueedera267.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy